வாணியர் பழமொழிகள்
1. செக்கானிடம் சிக்கின மாடும் பார்ப்பானிடம்
சிக்கிய ஆளும் உருப்படமாட்டார்கள்.
செக்காட்டும் வாணியனிடம் உள்ள
மாடு தினமும் செக்கினையே சுத்தி சுத்தி வரும், குறைவான
எடையுடைய உலக்கையை இழுத்து பழகியதால்
அதற்க்கு சுமை இழுக்கும் திறன் குறைந்து விடும் அம்மாடு விவசாயத்திற்க்கும்
நிலம் உழுவதற்க்கும் பயன்படாது போகும் அது போல வைதீகனிடம் சிக்கிய மனிதன்
வைதீகனின் பொய்யுரைக்கு மயங்கி அவன் சொல்வதையெல்லாம் செய்துகொண்டிருப்பான் அவன்
உழைப்பு குறைந்து வேள்வியினால் செல்வம்
ஈட்ட முனைவான்.
2. செக்கில் அரைபட்ட எள்ளுப் போல.
செக்கில் அரைபட்ட எள் போல என்பது
துன்பத்தில் உழலும் மனிதனுக்கு உவமையாக கூறப்பட்டது. செக்கில்
இடப்பட்ட எள்ளானது எவ்வாறு தன் இறுதி வடிவமான பிண்ணாக்கு ஆகும் வரை சக்கையாய்
ஆட்டி எடுக்கப்படுகின்றதோ அதுபோல் துன்பத்தில் மாட்டிக்கொண்ட மனிதன் செக்கிலிட்ட
எள் போல் இறுதி வரை துன்பப்படுவான்.
3. செக்கில் அரைபட்ட தேங்காய் பிண்ணாக்கு
ஆவது போல. (பிண்ணாக்கைப் போல.)
ஒன்று பிரிதொன்றாக மாற்றம்
பெற்றதை இப்பழமொழி மூலம் விளக்குவர். செக்கில்
இடப்படும் தேங்காயானது இறுதியில் தன்னிலை திரிந்து பிண்ணாக்கு என்னும் வடிவத்தை
அடைகின்றது. பிண்ணாக்கு மந்த புத்தி உடையோர்க்கு உவமையாக
கூறப்படும்.
4. செக்கில் அரைபட்ட எள் திரும்ப முழுசு
ஆகுமா?
செக்கில் இடப்பட்ட எள்ளானது
அரைக்கப்பட்டு பிண்ணாக்கு கட்டிகளாக மாற்றம் பெறும். இழந்த
ஒரு வடிவத்தை மீண்டும் பெற இயலாது என்பதனை விளக்கவே இப்பழமொழி கூறப்பட்டது.
5. செக்கு அடிக்கும் தம்பூருக்கும் ஒத்து
வருமா?
செக்கு அடிக்கும் என்பது செக்கு
ஆட்டும் ஒலியையும், தம்பூர் என்பது தம்பூராவின் ஒலியையும் குறிக்கும். செக்காடும் ஓசை கரடுமுரடானது. தம்பூராவின் ஓசை நயம்
மிகுந்தது. ஒரு பொதுப்பண்புடைய இருவேறு செயல்களுக்கு
விளக்கம் கூற இஃது கூறப்பட்டது.
6.
செக்கு அடி
முண்டம் போல உட்கார்ந்திருக்கிறான்.
செக்கு ஆட்டும் இடத்தில் செக்காட்டுவதற்க்கு உதவியாக
இருக்கும் ஆளை செக்கடி முண்டன் என்று அழைப்பது வழக்கம். செக்கடி முண்டன்
என்பவர் செக்காட்ட உதவி செய்யும் வலிமையான ஏவளால். செக்கு
சுற்றி வரும்போது கீழ் ஆரப்பட்டையில் கல்லோ அல்லது வலிமையான ஆளோ அமர்ந்திருப்பர். அவர்கள் அமர்ந்திருக்கும் நிலையை நீண்ட நேரம் வேலையின்றி
அமர்ந்திருக்கும் மனிதரோடு ஒப்பிட இப்பழமொழியை கூறுவர்.
7. செக்கு அடி முத்தி, எனக்கு என்ன புத்தி?
எதுகை மோனை நயத்திற்க்காக கூறப்பட்டது இப்பழமொழி செக்கானது
முற்றிய அடி மரத்தால்செய்யப்பட்டிருக்கும்.அதுபோல் கூறுபவர்க்கு புத்தி பருத்தா உள்ளது என்று வினவுது போல் உள்ளது.
8.
செக்கு அளவு
பொன் இருந்தாலும் செதுக்கி உண்டால் எத்தனை நாளுக்குக் காணும்?
செக்கு அளவு என்பது குறைந்தது 35 கிலோ முதல் 60 கிலோ வரை கொள் அளவு கொண்டது. செக்கு கொள்ளும் அளவு
தங்கம் அல்லது பொன் இருந்தாலும் அதை செதுக்கி உண்டால் கூட அல்லது சிறுக சிறுக விற்று உண்டால் கூட நம்
வானாள் முழுதும் கூட உணவளிக்காது. எனவே பாட்டன் சேர்த்த
சொத்துகளை அழிக்காமல் சுயமாக உழைத்து உண்ண வேண்டும்.
9.
செக்கு
உலக்கைபோல் நிற்கிறான்.
ஏதேனும் ஒரு செயலை செய்ய அழைக்கப்படும்போது அவ்வழைப்பினை
சட்டைசெய்யாது நிற்பவனை செக்குலக்கை என அழைப்பது வழக்கம். செக்கின் உலக்கை ஆடாது
அசையாது நிற்கும் செக்கின் உரல் மட்டுமே சுற்றி வரும். எனவே
சட்டை செய்யாது நிற்பவரை செக்குலக்கை என அழைப்பர்.
10.
செக்கு உலக்கையை
விழுங்கினவனுக்குச் சுக்குக் கஷாயம் மருந்து ஆமா?
செக்குலக்கை பருத்த அல்லது அதிகமான பருமனுடைய பொருளுக்கு
உவமையாக கூறப்படும். செக்குலக்கை அளவு உணவு உண்டவனுக்கு சுக்கு கஷாயம் மருந்து மட்டும் செரிப்பதற்க்கு
போதாது. இதனை வேறு விதமாகவும் கூறுவர். தின்றவனுக்கு. சுக்குக் கஷாயம் குடித்தாற் போல. என்றும் செக்கை விழுங்கிவிட்டுச்
சுக்குத் தண்ணிர் குடித்தாற் போல.என்றும் கூறுவர்.
11.
செக்கு
என்றும் சிவலிங்கம் என்றும் தெரியாதா?
வேறுபாடு அறியாதவர்களுக்காக கூறப்பட்ட பழமொழி இது. செக்கும் சிவலிங்கமும்
வடிவொத்தவை ஆயினும் வேறுபாடு உண்டு. இதனை செக்குக்கும் சிவலிங்கத்துக்கும்
வித்தியாசம் தெரியாதவன். என்றும் கூறுவர்.
12.
செக்குக்
கண்ட இடத்தில் எண்ணெய் தேய்த்துச் சுக்குக் கடை இடத்தில் பிள்ளை பெறுவது. (தலை
முழுகிப் பிள்ளை பெறலாமா?)
செய்யும்
செயல்களை அவ்விடத்திற்க்கு தொடர்புபடுத்தி கூறுவதும் உண்டு. .ஒரு பொருளைக்கண்ட அதே இடத்தில்
அப்பொருளை அடைய நினைப்பது தவறு. எனபதனை
இப்பழமொழி சுட்டுகின்றது.
13.
செக்குக்கு
ஏற்ற சிவலிங்கம்.
ஒருவருக்கு அல்லது ஒரு செயலுக்கு சார்பெடுத்து பேசுவோரை
செக்குக்கு ஏற்ற சிவலிங்கம் என வருணிப்பதுண்டு.ஜால்ரா அடிப்போர் என வட்டார வழக்குகளில்
கூறுவதுண்டு.
14.
செக்குக்கு
மாட்டுக்கு
கொடுத்தாலும் கொடுக்கலாம்; சீவலப்பேரியில்
பெண் கொடுக்கக் கூடாது.
சீவலப்பேரியில்
பெண்கொடுத்தோர்களால் சொல்லப்பட்டது.
1.
15. செக்குமாட்டைக் காலையிலே கட்டினாற் போல.
செக்கு மாடானது அதிகாலை முதல் நண்பகல் வரை செக்கடியில் சுற்றிவரும். அதுபோல ஒரே இட்த்தை சுற்றி சுற்றி வருபவனையும்,
அடம்பிடிப்பவனையும் இப்பழமொழி கொண்டு உணர்த்துவர்.
16. செக்குமாடு போல் உழைக்கிறான்.
உழைப்பின் பெருமையை உணர்த்த இப்பழமொழி கூறப்பட்டுள்ளது.
17.செக்கை வளைய வரும் எருதுகளைப் போல். (வாணியர்கள் ஆடும் செக்கைவளைய வரும் எருதுகள் போல).
செக்கடியில் இருக்கும் எருது செக்கினை மையமாய்க் கொண்டு சுற்றி வருவது
போல குறிக்கோளை அடைய விடாது போராடுபவனையும் இது குறிக்கும்.
18.
கம்மாளன் எடுக்காத
சிக்கலை வாணியன் எடுப்பான்.
கம்மாளர் என்போர் தட்டான்கள் தட்டான்களால் தீர்க்க
இயலாத சிக்கல்களையும் வாணியர்கள் தீர்த்து வைப்பர் என்று பொருள்.
19. வைத்தியருக்குக் கொடுக்கிற காசை, வாணியனுக்குக் கொடு’
சரியான எண்ணெயை உணவில் சேர்க்க வேண்டும் என்ற
தத்துவத்தை கொண்டே இப்பழமொழி கூறப்பட்டது. வைத்தியருக்கு கொடுக்கும் காசை
வாணியனிடம் கொடுத்தால் அவர்கள் வழங்கும் நல்ல எண்ணெயைக்கொண்டே உடலை நோயின்றி பக்குவப்படுத்தலாம்
என்பதனை இது தெளிவிக்கின்றது. இதனை வாணியனுக்குக் கொடாதவன் வைத்தியனுக்குக் கொடுப்பான். என்றும் கூறுவர்
20.ஊர் கூடிச் செக்குத் தள்ள,
வாணியன் எண்ணெய் கொண்டு போக’ ஊர் கூடித்தானே
தேர் இழுக்க வேண்டும்? ஊர் கோப்பழிந்தால் ஓடிப் பிழை.
ஊர் மக்கள் ஒன்றுகூடினால் மட்டுமே தேரை இழுக்க முடியும் அதுபோல ஊர்
ஒத்துழைத்தால் மட்டுமே செக்காட்ட முடியும். ஊர் கட்டுப்பாடு இழந்தால் செக்கினை ஆட்ட இயலாது எனவே பிற ஊர் சென்று தான் ஓடிப்பிழைக்க வேண்டும் என்று பழமொழி
கூறுகின்றது.
21.வாணியக் கட்டை வைரக்
கட்டை, தேயத் தேயத் துடைப்பக் கட்டை.
வாணியக்கட்டை என்பது மரச்செக்கினைக்குறிக்கும் அம்மரச்செக்கானது
தேய்ந்துவிட்டால் துடைப்பமாக்கூட பயன்படுத்த இயலாது அது அடுப்பெரிக்க மட்டுமே பயன்படும்.
22. வாணியன் ஆசை கோணியும் கொள்ளாது.
வாணியர்கள் அக்காலத்தில் செக்கினை ஆடுவதற்க்கு பிண்ணாக்கினையே கூலியாக
பெற்றனர். எனவே நாணயங்கள் பெறுவது அரிதான செயல், செட்டிமக்கள் ஆதலால் போருள் சேர்க்க எண்ணுவது இயல்பு. வாணியர்கள் எண்ணையும் பிண்ணாக்கும் விற்று பொருள் சேர்க்க காணும் கனவானது கோணிப்பை
கூடக் கொள்ளாது என்பர்.
23.வாணியன் கையில் மண்ணும் குயவன் கையில் எண்ணெயும் கொடுத்தது போல.
அவர் அவர் அறிந்த வேலையை மட்டுமே அவர் அவர் செய்ய வேண்டும். வாணியன் கையில் மண்ணைக்கொடுத்து பானை வனையச்சொன்னால்
வனைய இயலுமா? அவரவர் அறிந்த வேலைகளைச் செய்வதே சிறப்பு.
24.வாணியனுக்கு ஒரு காலம்: சேணியனுக்கு ஒரு காலம். வாணியனோடும் வழக்கு:
சேணியனோடும் வழக்கு,
யாணைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம் என்பது பின்னர் வந்த பழமொழியே.
இதற்க்கு முன் மேற்கூறப்பட்ட பழமொழியே இருந்தது. இங்கு சேணியன் என்று குறிக்கப்பெறுபவர்
ஆடைநெய்வோர் இனம் ஆகும். வலுத்தோர்க்கு ஒரு காலம் என்றால் இளைத்தோர்க்கு ஒரு காலம்
வரும் என்பதனை இது குறிக்கின்றது.
வாணியனோடும் வழக்கு, சேணியனோடும் வழக்கு என்பது தத்தம் குல வழக்கங்களை
குறித்தது. தமிழகத்தில் அனைத்து தொழிற்குலங்களுக்கும் ஓர் தனி குல வழக்கம் உண்டு என்பதனை
கூறவே இப்பழமொழி.
25. வாணியர்க்கு அழகு வாணிபஞ்செய்து பழகுதல்.
வாணியர் என்பது இங்கு வணிகர்களையும் வாணியர்களையும் குறிக்கும்.
வாணியர்கள் வாணிபஞ்செய்து பழகுதலே தன் குலத்திற்க்கு
பெருமையாம்.
26. வாணியன் உறவு கோணிக்கிடங்கு.
வாணியர்கள் அக மண கட்டுப்பாடு உடையவர்கள். வாணியர்கள் தம் ஊரில்
உள்ள உறவுகளுக்குள்ளே மட்டும் திருமணம் செய்வர். வாணியர்கள் வெளியூர்கள் சென்று திருமணம்
செய்யும் பழக்கம் கடந்த ஐம்பது அல்லது அறுபது ஆண்டுக்குள்ளாகவே தான் இருந்து வருகின்றது.
அத்தை மகள், அதை மகன் , அக்காள் மகன் அல்லது மகள், மாமன் மகள் அல்லது மாமன் மகன்களைத்
திருமணம் செய்யும் வழக்கம் உடையோர். எனவே உறவுகளுக்குள்ளேயே திருமணம் செய்வதால் வாணியன்
உறவு கோணிக்கிடங்கு என கூறுவர்.
27.செக்கு நக்குகிற தம்பிரானே, உன் திருவடிக்குத் தண்டம்; அந்தண்டை நக்குடா பிள்ளாய்; ஐசுவரியம் பெருகி இருப்பாய்,
28. செக்கு நக்குகிற தம்பிரானே, தண்டம்; நீ தென்புறம் நக்கு: நான் வடபுறம்
நக்குகிறேன்.
27,28 இவ்விருபழமொழிகளும் ஆண்டையினை அண்டிப்பிழைத்து தான் வாழ வேண்டும்,
அவ்வாறு வாணியன் அண்டிப்பிழைத்தால் ஐசுவரியம் பெருகி இருப்பான் என வாணியர்களை ஆண்டைக்கு
அடிமைகளாய் வாழச் சொல்லிய பழமொழிகள்.