வாணியர்
தோற்ற வரலாறு
நோக்கம்:
- செட்டியார்கள் பற்றி அறிதல்
- சமூக இடப்பெயர்வுகளை ஆய்வு செய்தல்
- வாணியர் தோற்றம் குறித்து ஆய்வு செய்தல்
- வாணியர் தோற்றம் குறித்த செய்திகளை தொகுத்தளித்தல்
- வாணியர் தோற்றம் குறித்த கதைகளை ஆய்தல்
- இலக்கியங்களில் ஆய்வு செய்தல்
- காரண காரியங்களைப் பொதுமைப்படுத்துதல்.
முன்னுரை:
வாணியர்கள் தோற்றம் குறித்து அறுதியிடல் என்பது சற்றே கடினமான
விடயம் ஆகும். இருப்பினும் கிடைக்கும் ஆதாரங்களைக் கொண்டு நிறுவ முற்படுகின்றேன்.
சில தேவையான தகவல்களை மீள் பார்வை செய்துவிட்டு நிறுவலாம். ஏற்கனவே தொகுக்கப்பட்ட வாணியர் இன வரலாற்றில் சரியாக அறுதியிட இயலவில்லை,
எனவே வாணியர் தோற்ற வரலாற்றை இக்கட்டுரை வாயிலாக வழங்கிட விழைகின்றேன்.
இதில் உள்ள தகவல்கள் இணையதளம், முனைவர் பட்ட ஆய்வேடுகள்,
இலக்கியங்கள், ஆய்வுக்கட்டுரைகள், செப்பேடுகள், தமிழக மாவட்ட குறிப்புகள் இவற்றின் மூலம்
தொகுக்கப்பட்டு வழங்கப்படுகின்றது.
மீள்பார்வை:
- எள்ளிலிருந்து நெய்யை ஆட்டி எடுத்த காலமே வாணியரின் தோற்றமாக கருதலாம்.
- எண்ணெய் வடித்தெடுக்கும் தொழில் செய்தமையால் வாணியர் எனப்பட்டனர்.
- சக்கரம் போன்ற சுழலும் கருவியைக் கொண்டு எண்ணெய் வடித்தெடுத்ததால் சங்கரப்பாடியார் என அழைக்கப்பட்டனர்.
- வாணியர்கள் கி.பி 13 ஆம் நூற்றாண்டில் சங்கரப்பாடியார் என அழைக்கப்பட்டதாக கல்வெட்டு செய்திகள் கூறுகின்றன.
- வாணியர்கள், செக்காளர்கள் செக்கார், வாணியன், செக்கார வாணியன், செக்கார செட்டி, நூழிலார், வாணியச் செட்டி, வாணியச் செட்டியார் என அழைக்கப்பட்டனர்.
- செட்டியார் இனங்களில் ஒன்றாக வாணியர் இனம் உள்ளது.
- செட்டியார் என்பது எட்டி என்பதிலிருந்து மருவிய தமிழ்ச் சொல்லே
- அக்கால வட இந்தியாவில் செட்டி ”சிரேஸ்டி” என அழைக்கப்பட்டது.
- வட இந்தியாவிலிருந்து கி.பி. 11 நூற்றாண்டில் தமிழகம் வந்த வணிகர்கள் தமிழகத்தில் சோழர் பகுதியில் தங்கி தமிழர்கள் செய்த வணிகங்களைச் செய்து வந்தனர். அவ்வாறு வணிகம் செய்தோரும், தங்களை செட்டிகள் என்றே அழைத்துக் கொண்டனர்.
- கல் செக்கு மர செக்கு என இருவகை செக்குகள் அக்காலத்தில் காணப்பட்டன.
- கல் செக்கு அரசு அனுமதி பெற்ற பின்னரே நடத்தப்பட்டது.
- கல்செக்கு, இரட்டை மாடு வைத்திருந்த வாணியர்களுல் உயரந்தோராக கருதப்பட்டனர்.
- மரச்செக்கு, ஒற்றை மாடு வைத்திருந்த வாணியர்களுல் பொருளாதாரத்தில் தாழ்ந்தோராக கருதப்பட்டனர்.
- உணவிற்கான எண்ணெய் ஆட்டியோர் தகுதி உயர்ந்தோராகவும் மருத்துவம் வணிகத்திற்கான எண்ணெய் ஆட்டியோர் தகுதியில் குறைந்தோராகவும்,கருதப்பட்டது.
- வாணியர் தான் ஆட்டும் எண்ணெய் வித்தினை வைத்தும் சமூக தகுதி கணக்கிடப்பட்டது.
- வாணியர்கள் ஆசிவக மரபையும் பின்னாளில் சைவ மரபையும் போற்றினர்.
- இலங்கைச் சான்றுகள் வாணியரை வாணிய நகரத்தார் என்றே அழைத்தனர் என சான்று கூறுகின்றது.
- தொடக்கத்தில் தமிழக வணிகர்கள் தங்களை வைசியன் என்று அழைத்துக் கொள்ளவில்லை. ஆரிய திணிப்பின் காரணமாய் தகுதிக்காக வைசியன் என்று அழைத்துக்கொண்டனர்.
- தமிழக செக்கு வடிவம் தொன்மை வாய்ந்தது.
- வாணியர்கள் செக்காட்டுதலுக்கு செக்கிறை என்னும் வரியை செலுத்தி வந்தனர்.
- அக்காலத்தில் செட்டியார்களில் 126 வகை இருந்தனர்.
- வணிகத் தொழிலுக்கு தொடர்பில்லாதோரும் செட்டியார் என்ற பின்னொட்டை பயன்படுத்தினர்.
- கல் செக்குகள் அரசர்களால் செய்துதரப்பட்டன.
- வைதீகரால் சாதிய அடக்குமுறையில் வாணியர்கள் சூத்திரர்களாக கருதப்பட்டனர். வைசியராகக் கூட கருதவில்லை.
- மனு தர்ம சாஸ்திரத்தில் மனு, எண்ணெய் ஆட்டும் தொழிலை கீழானதாக வைப்படுத்தியுள்ளார்.
- எள் விஷ்ணுவின் வியர்வையில் உண்டானதால் அதை ஆட்டி எண்ணெய் எடுத்தல் பாவமாக கருதப்பட்டது.அதனால் வாணியர்கள் கீழோர் எனப்பட்டனர்.
- பூணுல் அணிய சில செட்டியார்களுக்கும் வாணியர்களுக்கும் தடை இருந்தது
- திருநெல்வேலி கோவில்களில் நுழைய வாணியர்களுக்கு தடை இருந்தது.
- வாணிய முன்னவர்களாக அன்பிற்பிரியாள், கண்ணகி கோவலன், கலியநாயனார் ஆகியோர் கருதப்படுகின்றனர்.
- வாணியர் சிலர் குடித் தொழிலை கைவிட்டு கூல வாணிகத் தொழிலில் ஈடுபட்டோர் வாணுவ செட்டி எனப்பட்டனர்.
- சிறகுத் தாலி, அச்சுத் தாலி, தொப்பைத் தாலி, விசாலட்சியம்மா, காமாட்சியம்மா, என்ற பிரிவுகள் வாணியரில் உண்டு.
- காண்டல் கணிகா, தெலிகுலா, கேரள செக்காலா, பணியா, போன்றோர் வாணியர்க்கு இணையாக பிற மாநிலங்களில் செக்கினை ஆட்டும் இனமாகும்.
- அதிக அளவில் (எடையிலும்) செக்கு தமிழகத்தில் மட்டுமே ஆட்டப்பட்டது.
- இராச ராச சோழன் சாளுகிய நாட்டிலிருந்து வந்த தைலகுலா எனப்பட்ட வடபுல வாணியர்களையும், தெலிங்கா எனப்பட்ட தெலுங்கு மக்களையும் தன் குடிமக்களுக்கு தொல்லை கொடுத்ததால் தன் நாட்டைவிட்டு விரட்டியடித்தார். எனவே சோழர் தைலகுல காலன், தெலிகுலகாலன் என் கீர்த்திப்பட்டங்கள் பெற்றார்.
- ஒற்றை மாட்டு செக்கார் வலங்கைப் பிரிவிலும், இரட்டை மாட்டுச் செக்கார் இடங்கைப்பிரிவிலும் நின்றனர்.
இத்தகவல்கள் இதன் விளக்கங்கள் அனைத்தும்
வாணியர் இன வரலாறு என்ற கட்டுரையில் இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இனிவரும் பத்திகளில் வாணியர்
தோற்றத்தைப் பற்றி கூறப்படும்.
வாணியர் தோற்றம்:
படினிலைகள்:
கீழ்க்காணும்
ஆய்வுப்படினிலைகள் மூலம் வாணியரின் தோற்றத்தை விளக்க விரும்புகிறேன்
- வணிகர்கள் பற்றி கூறுதல்
- செட்டியார்கள் யார் என அறிதல் .
- இன்றைய தமிழக செட்டியார்களை வகைப்படுத்துதல்
- செட்டியார் தொழில்களை வகைப்படுத்துதல்.
- செட்டியார் தோற்றக் கதைகளை ஆய்தல்.
- வாணியர் தொடர்புடைய செட்டியார் இனங்களை ஆய்தல்
- வாணியர் சார்ந்த கூறுகளையும் இலக்கியங்களையும் ஆய்தல்
- வாணியர் தோற்றம் பற்றி ஆய்வு செய்தல்
- வாணியரில் பிரிவுகள் உருவான விதம் அறிதல்.
இதுவே நாம் காணவிருக்கும்
படிநிலைகள் ஆகும்.
எல்லைகள்:
இவ்வாய்வில்
வைதீக கதைகள் வடபுல செட்டியார்கள் வடபுல வாணியர்கள் (தெலிகுலா, கானா, கான்றீய, கணிகா) கதைகள், விலக்கப்பட்டு அன்றைய தமிழக நிகழ்வுகள், கதைகள்,
செவிவழிச் செய்திகள் இலக்கியங்கள்,
மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும். தமிழக
வாணியர் தோற்றம் பற்றியே ஆய்வு செய்யப்படும்.
வணிகர்கள்:
சங்கம் சுட்டும் தொழிற்குலங்கள் என்பது(80) வகையின. சங்கம் மருவிய காலங்களிலும் பல வணிகர்கள் தோன்றினர். பொதுவாக அக்கால வணிகர்களை இருவகையாக நாம் பிரிக்கலாம். இயற்கை பொருட்களை வணிகம் செய்தோர், இயற்கை பொருட்களைக்
கொண்டு வேறு ஒரு பொருளாக்கி விற்பனை செய்தோர். எனவே இரு பிரிவினரும்
இயற்கையை சார்ந்தே வாழ்ந்தனர் என்பது தின்னம்
- இயற்கைப் பொருள் வணிகம்
- உற்பத்திப் பொருள் வணிகம்.
இயற்கைப் பொருள்
வணிகர்கள்
உப்பு, நவரத்தினங்கள்,பொன், தந்தம், பீலி, அயில், சந்தனம், புனுகு முத்து
சிற்பி மணிகள் போன்றவை
உற்பத்திப் பொருள்
வணிகர்கள்:
கூல
வாணிகம் (அரிசி,
பயறு வகைகள், கிராம்பு, ஏலம்
மிளகு முதலியன.), பாணிதம், அறுவை,
பட்டு, எண்ணெய், கொழு,
அக்கசாலை, எனப் பலவாம்
தமிழக வணிக குழுக்கள்:
நானாதேசி, ஐநூற்றுவர், இலங்கை வளஞ்சியர், மாயிலட்டி, சித்திர மேழி, மணிக்கிராமத்தார் இடங்கை, வலங்கை, குதிரச் செட்டி, சாம பண்டசாலிகள்,
வடபுல வணிக குழுக்கள்:
நிகமா, புகா, சிரேணி, சங்கம் ஆகியவை
இவற்றில் பல வணிக
குழுவை பற்றி பார்த்து விட்டதால் சில வணிக குழுக்களை மட்டும் காண்போம்.
சித்திர மேழி, (அழகிய ஏர்கலப்பை),
மணிக்கிராமத்தார்
சித்திர மேழி என்பது காவிரிப்பூம்பட்டிண
செட்டியார்களின் வெள்ளிக்கதவுகளில் பொறிக்கப்பட்டிருந்த ஏர்கலப்பை சின்னமாகும்.
அவர்கள் சித்திர மேழியை வணங்கியதால் அவர்கள் அழகிய ஏர்கலப்பை நாட்டார்
என அழைக்கப்பட்டனர். இவர்கள் வேளாண்மையை முதன்மைபடுத்திய நாட்டார்கள்
அல்லது நகரத்தார் ஆவர்.
மணிக்கிராமத்தார் என்போர் பல நகரங்களில் வாழ்ந்து வணிகம் புரிந்தோர் ஆவர்.
உறையூர் மணிக்கிராமம், கொடும்பாளூர் மணிக்கிராமம், காவிரிப்பூம்பட்டினத்து மணிக்கிராமம் எனும் கல்வெட்டுத் தொடர்கள்
இவர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.
காஞ்சி, மாமல்லபுரம், பழையாறை போன்ற பெரிய நகரங்களில் வாழ்ந்தவாறு வாணிகம் புரிந்தோர் நகரத்தார்
ஆவர். இவர்கள் நகர ஆட்சியையும் ஏற்று நடத்தினர்.
வணிகப் பெருவழிகள்
பொருட்களைக்
கொணரவும், கொண்டு
போகவும் பெருவழிகள் பயன்பட்டன. மூன்றுகோல், நான்குகோல்
அகலமுடைய பெருவழிகள் இருந்தன.
அரங்கம் நோக்கிப் போந்த பெருவழி
வடுகப்பெருவழி
கொங்குப் பெருவழி
தஞ்சாவூர்ப் பெருவழி
எனப் பல்வேறு
பெருவழிகள் உள்நாட்டு வணிகத்திற்குத் துணை புரிந்தன.
வாணிகச் சாத்து
வண்டிகளையும், பொதிமாடுகாளையும்
வாணிகர் பயன்படுத்தினர். வாணிகத்திற்குப் புறப்படும் வண்டிகள் கூட்டம் கூட்டமாகவே
செல்லும். இக்கூட்டம் 'வாணிகச் சாத்து' எனப்பட்டது. சாத்தின் தலைவன் சாத்தன். மாசாத்துவன் எனவும் அழைக்கப்பட்டான்.
பெருவழிகளில் ஊறு நேராதவாறு இருக்க இம்முறை கையாளப்பட்டது. களவு நிகழாதவாறு காக்க
அவ்வழிகளில் பெரும்பாடி காவல் அதிகாரி, சிறுபாடி காவல்
அதிகாரி என்போர் பணியாற்றினர்..
மாயிலட்டி:
வாணியர்கள்
அல்லது சங்கரப்பாடியர் மக்களில் எண்ணெய் ஆட்டி விற்கும்
ஒரு பெருவணிக் குழுவின் பட்டப்பெயர் ஆகும். குறிப்பாக எண்ணெய்
வணிகரின் குழு, கல்வெட்டுகளில் “மாயிலட்டி”
என்று குறிப்பிடப்படுகிறது. இங்கே, மேல்பாடி
சிவன் கோவில் கல்வெட்டுகளில் கண்டன் மறவன்
என்பவன் ஒரு எண்ணெய் வணிகக் குழுவினன் என்பது தெரியவருகின்றது. ஏனெனில், சங்கரப்பாடியான் என்னும் தொடர் எண்ணெய் வணிகரைக் குறிக்கும் சொல்லாகும்.
மாயிலட்டி - யாழ்ப்பாணத்தில் மய்யிலட்டி
(மையிலட்டி) என்று துறைமுகமாக உள்ளது. மா-/மை- : கருமை, இருள். இரவு நேரத்தில்
விளக்கெரிக்கவும், அடுதலுக்கு எண்ணெய் அளிக்கும் வாணியரை
மாயிலட்டி என்று அழைத்துள்ளனர் எனலாம்.
கி.பி 5ஆம் நூற்றாண்டு மகேந்திரவர்மனின்
கேத்தாண்டன்பட்டி வணிக கல்வெட்டும் மாயிலட்டி பற்றியும் வாணிகனூர்
பற்றியும் கூறுகின்றது.
செட்டியார்:
செட்டியார் என்னும் பெயர் சாதிப் பெயர் இல்லை.
வணிகம் செய்த குடிகளுக்கான பொதுப் பெயர் ஆகும். செட்டிகள் தமிழகத்தில் பெருமதிப்புடையோர் என்ற பொருளில் ஆர் விகுதி சேர்க்கப்பட்டு
செட்டியார்கள் என அழைக்கப்டுகின்றனர். தமிழகத்திலிருந்து உருவான
எட்டி என்ற சொல்லே மருவிய சிரேஷ்டி என்ற வட சொல்லானது. கருநாடக ஷெட்டி(shetty) என்ற சொல் கடற்கரை
சமூகங்களைக் குறித்த சொல் ஆகும். ஷெட்டிக்கும் சிரேஷ்டிக்கும்
தொடர்பில்லை. செட்டி என்பது பண்டம் விற்போர், அல்லது வணிகம் புரிவோர் என பொருள்ப்படும்.
இன்றைய தமிழக
செட்டியார்கள்:
- அகரம் வெள்ளாஞ் செட்டியார்,
- ஆயிர வைசியர்,
- செட்டு அல்லது செட்டி,
- தேவாங்கர்,
- கற்பூர செட்டியார், (உப்பிலியர்)
- காசுக்கார செட்டியார்,
- பன்னிரண்டாம் செட்டியார் அல்லது உத்தமச் செட்டியார்,
- சாதுச் செட்டி,
- தெலுங்குச் செட்டி,
- இருபத்து நான்கு மனைத் தெலுங்குச் செட்டியார்,
- சுந்தரம் செட்டி,
- வாணியர், வாணியச் செட்டியார் (கண்டல், கனிகா, தெலிகுல செக்கலார் உட்பட),
- வெள்ளாஞ்செட்டியார்,
- வயநாடு செட்டி,
- கொங்குச் செட்டியார்,
- குலாலா (குயவர், கும்பரர் உள்ளிட்ட),
- குறு உறனி செட்டி,
- மவுண்டாடன் செட்டி,
- சோழிய செட்டி,
- தெலுங்குப் பட்டி செட்டி,
- அரியூர்ச் செட்டியார் (அரிவையூர்ச் செட்டியார், அரியூர் நகரத்தார்),
- ஆரிய வைசியச் செட்டியார் (கோமுட்டிச் செட்டியார், ஆரிய வைசியர்,வைசியச் செட்டியார்),
- பலிஜா செட்டியார்,
- பேரி செட்டியார்,
- சோழபுரம் செட்டியார்,
- காயல் செட்டி,
- கோட்டைப்புரச் செட்டியார்,
- கோட்டைப்புர வைசியச் செட்டியார்,
- மஞ்சுபுத்திரச் செட்டியார் (மஞ்சுபுத்தூர்ச் செட்டியார்),
- நாட்டுக் கோட்டைச் செட்டியார் (நாட்டுக் கோட்டை நகரத்தார்),
- சைவச் செட்டியார்,
- திருவெள்ளறைச் செட்டியார்
என பல சாதியினர்
தங்கள் பெயருக்குப் பின்னால் செட்டியார் எனும் பொதுப் பெயரைச் சேர்த்து
வருகின்றனர்.
தமிழக
செட்டியார் சமூகத்திற்க்கு தொடர்பில்லாத சில குடிகளும் தமிழகத்திற்க்கு வடபுலத்திலிருந்து
வந்த சிலகுடிகளும் தம் பெயருக்கு பின்னால் தகுதியை காரணம் காட்டி செட்டியார் என்னும்
பின்னொட்டினை இடுகின்றனர்.
மேலும் செட்டியார்கள் செய்து வந்த தொழில்களை வடபுலத்தில் இருந்து வந்த
குடிபெயர்வினரும் செய்தனர்
என்பது வரலாறு. வடபுல குடிபெயர்ச்சியானது கி.பி 9 ஆம் நூற்றாண்டு முதலே தொடர்ந்து நடைபெறுகின்றது.
கி.பி. 11 முதல்
13 ஆம் நூற்றண்டில் இது உச்சம் தொட்டது. இதற்க்கு
இந்து மத ஆதிக்கமும் ஒரு காரணம் ஆகும்.
தமிழ்குடியினர்
யார்?
Ø தமிழகத்தில் தொல் தமிழ்த் தொழிற்
குடியில் பிறந்து தமிழை மட்டுமே தாய்மொழியாய்க் கொண்டு தமிழ்நாட்டிலும்
பிற அயலக நாடுகளிலும் வாழ்வோர் தமிழ்க்குடி மரபினர் அல்லது
தமிழ்ச்சாதியினர் எனப்படுவர்.
செட்டியார் தொழில்கள்:
அன்றைய
தமிழக செட்டியார்கள் மூன்று முக்கிய தொழில் புரிந்தனர்,
- முதன்மையாக வாணிகம்,(வைசியர்)
- இரண்டாவதாக வேளாண்மை, (பூவைசியர், கோவைசியர்)
- மூன்றாவதாக மீன் பிடி வணிகம். (பரதவச் செட்டி)
தன
வைசியர் தங்களை உயர்வாகவும் தங்களுல் தாழ்ந்தவராக பூ வைசியரையும், கோவைசியரையும் கருதுகின்றனர்.
அதனை சாதியின் பெயர்களிலிருந்தே அறியலாம். மீன்பிடி
வணிகம் பின்னாளில் செட்டியார்களால் கைவிடப்பட்டன.
செட்டியார் தோற்றக்
கதைகள் அல்லது புலபெயர்ச்சி கதைகள்:
நகரத்தார்கள் கூறும் கதை, கொங்குச்
செட்டியார்கள் கூறும் கதை, வெள்ளாஞ்செட்டியார்கள் கதை,
கதை, ஏழூர்ச் செட்டிகள் கூறும் கதை, வாணியர்கள் கூறும் கதை இவற்.றைக் காண்போம். வரலற்றுக்கதைகளில் புனைவுகளும் திரிபுகளும் உண்டு அவற்றை விலக்கியே நோக்க.
சாதித் தோற்ற வரலாறுகள் சான்றுகள் ஏதுமில்லை ஆதலால் கிடைக்கும் சான்றுகளைக்
கொண்டு நிறுவ முற்படுவோம்.
நகரத்தார்:
திருவாரூரை தலைநகராகக் கொண்டு சோழ நாட்டை மனு நீதிச்சோழன் ஆண்டு வந்தான்.
அந்த காலக்கட்டத்தில் காஞ்சிபுரம், சோழ மண்டலத்தின் ஒரு பகுதியாக
இருந்ததால், காஞ்சிபுரத்தில் இருந்த நகரத்தார்கள் சமூகத்தினரை
காவிரிப் பூம்பட்டினத்திற்கு வந்து இருக்கும்படி மனுநீதிச்சோழன் அழைப்பு
விடுத்தான். இதனைத் தொடர்ந்து பெருமளவிலான நகரத்தார்கள் காவிரிப்
பூம்பட்டினத்திற்கு வந்து வாழ ஆரம்பித்தனர். நகரத்தார் செல்வ செழிப்புடனும்,
பெயரோடும், புகழோடும் வாழ்ந்து வந்தனர். ஒரு சமயம் சோழநாட்டை ஆண்டு வந்த
பூவந்திசோழனுக்கு அண்டை நாட்டில் இருந்து பெருமளவில் பவளங்கள் கிடைத்தது. சோழ
மன்னன் அதனை தன் மனைவிக்கு மாலையாக அணிவித்து அழகு பார்க்க நினைத்தான். அரண்மனை
பொற்கொல்லர்களிடம் கூறினான். அவர்கள் இதை நுனுக்கமாக செய்ய வேண்டும். பவள மாலை
செய்வதற்கு பவளங்களை கோர்க்க வேண்டும்.
பவளங்கள் மீது கருவிகளை
பயன்படுத்தி துளைபோட அஞ்சி, எங்களால் இயலவில்லை எனக்கூறி மன்னனிடமே
திரும்ப கொடுத்தனர். மன்னன் என்ன செய்வது என்று யோசித்து அரண்மனை செட்டியாரை
அழைத்துவர ஆணையிட்டான். செட்டியாரும் வந்தார். அரசன் அந்த பவளங்களை செட்டியாரிடம்
கொடுத்து நீர் யாது செய்வீரோ தெரியாது. இப்பவளங்களை நாளை காலைக்குள் மாலையாக
கோர்த்து தொகுத்து தர வேண்டும் என்று கட்டளையிட்டான். செட்டியாரும் அரசனின்
கட்டளையை மீற முடியாது என்பதால் பவளங்களை பெற்றுக்கொண்டு பெரும் கலக்கத்துடன் வீடு
வந்து சேர்ந்தார். தந்தையின் முகவாட்டத்தை கண்ட அவரது மகள்கள் தங்கம்மையும்,
தாயம்மையும் அவரிடம் விபரங்களை கேட்டனர்.
அவரும் அரண்மனையில் நடந்ததை கூறினார். அதை கேட்ட பெண்கள் தந்தைக்கு ஆறுதல்
கூறினர்.
தங்கம்மை கூறினார். ‘‘அப்பா, ஏன் கவலைப்படுறீங்க மூலமுதல்வனாக திகழும் அந்த விநாயகனை நினைத்து
செயலில் இறங்குகிறோம் நிச்சயம் நல்லதாய் முடியும் நாளை காலையில் நீங்கள் மாலையுடன்
அரண்மனைக்கு செல்லலாம். என்றாள். உடனே தாயம்மை கூறினாள் ‘‘இப்போ நல்லா தூங்குங்கப்பா’’ என்றனர்.
பவளங்களை பெற்றுக் கொண்ட அந்த பெண்கள் இருவரும் பவளங்களில் துளைபோடவேண்டிய
இடத்தில் கருப்புக்கட்டி நீரைத்தொட்டு வைத்து அதனை தங்கள் வீட்டின் பின்
பக்கத்தில் உள்ள எறும்பு புற்றுகள் வாயில் வைத்தனர். அங்கு வந்த எறும்புகளும்
பவங்களில் உள்ள இனிப்பை உண்ண பவளம் அரிக்கப்பட்டு துளை தானாக உருவாகியது. அவ்வாறு
துளைகள் உருவான பவளத்தை பட்டு நூலில் மாலையாக்கி கோர்த்து தந்தையிடம் வழங்கினர்.
செட்டியாரும் அதனை எடுத்து சென்று மன்னனிடம் கொடுத்தார்.
மன்னரும் செட்டியாரை பாராட்டி மாலையை கோர்த்த முறையை பற்றி கேட்டார்.
செட்டியாரும் நடந்தவைகளை அப்படியே கூறினார். மன்னனும் இத்தகைய அறிவுடைய பெண்களை
காண செட்டியார் வீட்டிற்கே சென்றார். தாயம்மை, தங்கம்மையை கண்டார் மன்னன். பட்டு சரிகை கொண்ட பாவாடை சட்டை
தாவணியில் இருவரும் அழகு பதுமையாய் ஜொலித்தனர். அப்பெண்களின் அழகில் மயங்கிய
மன்னன் ‘‘இவர்கள் இருக்க வேண்டிய இடம் இதுவல்ல
எனது அரண்மனை. அதுவும் எனது துணைவியர்களாக’’ என்று கூறி செட்டியாரிடம் தங்கம்மையையும், தாயம்மையையும் எனக்கு மணமுடித்து தருமாறு கேட்டான். மன்னனின் ஆணையை
மீற முடியாத செட்டியார் ஒரு நாள் தவணை தாருங்கள். என் மனைவியிடத்தில் பேசி நல்ல
பதிலை சொல்கிறேன் என்று கூறிவிட்டு
வீட்டிற்கு வந்தார்.
‘‘ஏழையானாலும் ஒரு வைசியனுக்குத்தான் எனது மகளை மணமுடித்து கொடுப்பேன்.
ஏற்கனவே மணமுடித்திருக்கும் மன்னனுக்கு இரண்டு மகள்களையுமா மணமுடித்து கொடுப்பது.
இது எந்த தேசத்து நியாயம். மானம் கெட்டு வாழ்வதை விட மாண்டு போவதே மேல்’’ என்று முடிவு செய்த செட்டியார் வீட்டிற்கு பலவகை இனிப்பு பலகாரங்களை
வாங்கி வந்தார். மகள்களிடம் உங்கள் செயலைக்கண்டு மெய்சிலிர்த்த மன்னன் அன்பளிப்பாக
கொடுத்த பணத்தில் இந்த பலகாரங்கள் வாங்கி வந்துள்ளேன். நான் பெற்ற செல்வங்களை
இவ்வளவு அறிவு கூர்மையானவர்களாக பிறக்க வைத்த அந்த பிரம்மனுக்கும், அன்றாடம் வழிபடும் அந்த கற்பக விநாயகனுக்கும் கோடான கோடி நன்றி சொல்ல
வேண்டும் என்று கூறியவாறு கண்ணீர் வடித்தார். தாயம்மை, ஏனப்பா, பேசும்போதே கண்ணீர் சிந்து கிறீர்களே
என்றாள். அதற்கு தாயம்மை கூறினாள். அது அப்பாவின் ஆனந்தக்கண்ணீர் என்றாள்.
இரண்டு பேர்களின் பேச்சையும் கேட்டு எதுவும் உரைக்காமல் உயிரிழந்த
ஜடம் போல் நின்றார் செட்டியார். மறுநாள்
அப்பளம், பாயாசத்துடன் ஒன்பது வகை கூட்டுடன்
மதிய உணவு செய்யுமாறு மனைவியிடம் கூறினார் செட்டியார். ‘‘ஏன் என்று’’ கேட்ட மனைவியிடம், சினம் கொண்ட முகத்துடன் ‘‘சொன்னதை செய்’’
என்றார். மாலையிட்ட மணாளன் பேச்சை மறுக்காத
மனைவி அதை செய்தாள். மதிய உணவு தயாரானது. மகள்களை புத்தாடை அணியச் செய்து
வீட்டிலிருந்து பிள்ளையாருக்கு பூஜை செய்து விட்டு மதிய உணவு உண்டனர். பின்னர்
தனது மகள்களை அழைத்தார். ஊரில் திருடர்கள் அதிகமாகி விட்டனர். அதனால் நமது
வீட்டிலிருக்கும் செம்பு சாமான்களை, வீட்டில் உள்ள
நிலவறையில் பத்திரமாக வைக்க வேண்டும். நான் எடுத்து தருகிறேன். நீங்கள் இருவரும்
உள்ளே அடுக்கி வையுங்கள் என்று கூறி தனது மகள்களை அனுப்பி வைத்தார்.
பத்து பாத்திரங்களை எடுத்து கொடுத்தவர் மறுகனம் ஆவேசம் கொண்டு அங்கே
கல், மண்ணை போட்டு நிலவறையை மூடினார். தங்கம்மையும்,
தாயம்மையும் ஜீவசமாதி ஆனார்கள். பின்னர் ‘பசி, பட்டினி, பஞ்சத்தால் இந்த தேசம் அழிந்து போகட்டும்’ என்று சாபமிட்டவாறே நாக்கை பிடுங்கி மாண்டு போனார். இந்த
சம்பவத்திற்கு பிறகு பொலிவிழந்த காவிரிபூம்பட்டினத்தில் வசித்து வந்த செட்டிகுல
மக்கள் அங்கிருந்து வெளியேறினர். தங்கள் வழிபட்டு வந்த கோயில் மூலவர் மரகத
விநாயகரையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டனர். தென் மாவட்டம் வந்து தங்கினர். அங்கே
கோயில் எழுப்பினர்.
அக்கோயிலே புகழ்பெற்ற கோட்டாறு தேசிக விநாயகர் கோயில் ஆகும்.
இக்கோயில் அருகே தங்கள் குலக்கொழுந்தான தங்கம்மை, தாயம்மைக்கு தங்களது சமூக வழிபாட்டு கோயிலான முத்தாரம்மன் கோயிலில்
நிலையம் கொடுத்து வழிபடலானார்கள். முத்தாரம்மன் மூலவராக இருக்கும் இந்த கோயிலில்
தங்கம்மை, தாயம்மைக்கு தனி சந்நதி உள்ளது. இங்கு
தினசரி பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.
கோட்டாறு போன்று இரணியல் வள்ளியாற்றின் கரையில் உள்ள நாகரம்மன் கோயிலிலும்
தங்கம்மை, தாயம்மைக்கு கோயில் உள்ளது. அங்கு
அவர்களுக்கு பீடமாக அமைத்து வழிபடுகின்றனர்.
கொங்கு செட்டியார்கள்:
காவிரிப்பூம்பட்டினம்
செட்டியார்களின் தலைநகர். வாழ்விடம் வணிகத்தின் தொடக்க நிலம். அன்றைய நாளில்
வணிகம் என்றாலே செட்டியார் தான். வணிகம் என்பது செட்டியார்களிடம் தானே வந்துற்றது.
அதை திறம் பட செய்த காரணத்தால் மக்களிடையே செல்வாக்கும், மதிப்பும் மிகுந்தது.
வணிகத்தின் பொருட்டு தமிழகத்தின் பல பகுதிகளிலும், பல
நகரங்களிலும், உலகத்தின் பல நாடுகளிலும் வாழ்ந்து வந்தனர்.
அரசருக்கு
இணையாக செல்வத்திலும், செல்வாக்கிலும் சிறந்திருந்த காரணத்தால், சோழ
மன்னர்கள் செட்டியார்களால் தேர்வு செய்யப்பட்டு மணிமகுடம் சூட்டிக்கொள்வதையே
பெருமையாகக் கருதினர். இதனால் செட்டியார்கள் “மகுட தன
வைசியர்கள்” என அழைக்கப்பட்டனர். நீதி, நேர்மை, நியாயம் இவைகளை போற்றி காத்து
வந்தவர்களாதலால், “வெண்மையான நெஞ்சு கொண்ட செட்டியார்கள்”
என்றும் அழைத்தனர்.
நீதி
முறை தவறிய ஒரு சோழ மன்னனால் காவிரிப்பூம்பட்டினத்தை விட்டு செட்டியார்கள்
அகன்றனர் என்கின்றது வரலாறு. அவ்வாறு அகன்ற செட்டியார்கள் சோழ மண்டலத்தை விட்டு
தமிழகத்தின் பல பகுதிகளில் சென்று வசித்தனர். அவ்வாறு பிரிந்த அவர்கள் தங்கள் வாழ்விடத்தை
மட்டும் அல்ல தங்கள் வணிகச் செயலயும்,
உற்றார் உறவுகளையும் பிரிந்து வாழ வேண்டிய அவல நிலைக்கு ஆளாக
நேர்ந்தது.
இவ்வாறு
கொங்கு நாட்டை வந்தடைந்த செட்டியார்கள் “கொங்கு செட்டியார்கள்” எனவும், பாண்டிய நாட்டை வந்தடைந்த செட்டியார்கள் “நாட்டுக்கோட்டை
நகரத்தார்” எனவும், சேலம் பகுதியை
வந்தடைந்த செட்டியார்கள் “அகர வெள்ளாஞ்ச் செட்டியார்கள்”
எனவும் தங்களை இனம் கண்டனர். அவர்கள் வாழ்ந்த சூழ்நிலை மற்றும்
அங்குள்ள மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப, தங்களின்
பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டனர்.
கொங்கு
செட்டியார்களிலும் அவரவர் வாழ்ந்த பகுதியைக் கொண்டு அன்னூர் வட்டத்தார், எம்மாம்பூண்டியார்,
ஏழுகுலத்தோர், கண்டிசாலையார், காடாம்பாடியார், குரும்பனூரார், பவானியார், கேரளத்தார், செட்டிபாளையத்தார்,
தாயம்பாளையத்தார் என்றெல்லாம் வழிமுறை காட்டிக் கொண்டனர்.
கொங்க
செட்டியார்- வெள்ளாஞ்செட்டி,
எண்ணெய் செட்டி, வணிக செட்டி மரச்செக்கில்
நல்லெண்ணெய் ஆட்டி விற்பது, வியாபாரம் போன்றவை
செட்டியார்களின் தொழில்களில் ஈடுபட்டனர். சோழ நாட்டில்
காவிரியாற்றில் சோழன் தளபதி குளிக்கும் இடத்தில் குளித்த செட்டிப்பெண்ணை, தளபதி கொன்றுவிட நியாயம் வேண்டி நின்ற செட்டிமார்களுக்கு துணையாக
வெள்ளாளர்கள் தளபதி மேல் போர் தொடுத்து கொன்றார்கள். வெள்ளாளர் (தொண்டை தேச
பிரிவின் பின் ஆதொண்டனோடு விரோதம் கொண்ட போது) கொங்க தேசம் வந்தபோது
செட்டிமார்களும் கூட வந்துவிட்டனர்.
பெருங்குடி
கூட்டத்து குன்னுடையான் என்கிற நெல்லியங்கோடன் பங்காளிகளால் விரட்டப்பட்ட போது
ஆதரித்து காத்தவர் வணிகர் குல செட்டியார். சில காணிகளில் காணியுரிமை உடையவர்கள்.
பல காணிகளை கொங்கு வெள்ளாளர் செட்டியார்களிடம் இருந்து பொருள்கொடுத்து பெற்ற
செப்பேட்டு சாசனங்கள் உள்ளன. தூரன்பாடி மயில கூட்ட தலைவர் பங்காளிகளால்
கொல்லப்பட்ட போது கர்ப்பிணியான அவரின் மனைவி செட்டியார் வீட்டில் அடைக்கலமாக
இருந்தார். மகன் பிறந்து வளர்ந்த பின்னர்,
கானியுரிமை கேட்டு சென்றபோது அவரின் கூற்றுக்கு சாட்சியாக
செட்டிமார் துணை நின்றனர். வெள்ளகோவிலில் காய்ச்சிய மழுவை கையிலேந்தி சத்தியம்
செய்து மகனின் காணியுரிமைக்கு நிரூபித்தார். செட்டிகுமாரசாமி கொங்க வெள்ளாளர்
வழிபாடு தெய்வங்களில் ஒருவராவார்:
ஏழுர்ச் செட்டியார்கள்:
ஏழூர் செட்டி சமுதாயம் ஆரம்பத்தில் சோழ சாம்ராஜ்யத்தின் பகுதியான
காவேரிபூம்பட்டினைச் சேர்ந்தவர்கள், கடல் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள
செல்வந்தர்கள். இந்த பண்டைய நகரம் சுனாமியால் அழிக்கப்பட்ட போது (கி.பி. 79 ஆகஸ்ட் 23) ஏழூர் சமூக உறுப்பினர்கள் மற்ற
பகுதிகளில் இடம்பெயரத் தொடங்கினர். வர்த்தக சமூகம் தங்களுடைய
செல்வத்தையும் பணக்கார வாழ்க்கையையும் விட்டுவிட்டு, தங்கள் குடும்பத் தெய்வங்களை (விநாயகர் மற்றும் நாகர்மன்) சிலைகளை
எடுத்து, சோழ சாம்ராஜ்ஜியத்தை விட்டுவிட்டு, காவேரி ஆற்றின் குறுக்கே பாண்டிய
மற்றும் சேர பேரரசுகளுக்கு குடிபெயர்ந்தனர். குடிபெயர்ந்த மக்கள் சிலர் 93 ஊர்களிலும் சிலர் காரைக்குடி, தேவக்கோட்டை, திருப்பூர், கோவில்பட்டி, தாழையுத்து, வள்ளியூர் மற்றும் கோட்டறு பகுதிகளில்
.குடியேறினர்.
மற்றவர்கள் வள்ளி நதியின் கரையோரத்திலுள்ள இரணியலை அடைந்தனர். அன்றைய தினம் தமிழ் நாளிதழ் சித்திரை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமை ஆகும் . அவர்கள் நாகர்மான்னை (பாம்பு தெய்வம்) விக்கிரகத்தையும், தங்கம்மை தாயம்மை சிலைகளையும் வைத்தனர். அந்த இரவில், அவர்கள் மூல அரிசி மாவு, வாழைப்பழம் (பழம்) பழம், அட்டைப்பெட்டி, உலர்ந்த இஞ்சி, தேங்காய் மற்றும் வெல்லம் ஆகியவற்றின் கலவையிலிருந்து நைவேத்தியம் செய்தனர். ஒடுப்பறை கொழுக்கட்டை படைத்தனர்.சமுதாய உறுப்பினர்கள் பின்னர் சேர அரசரை சந்தித்து கீழ்கண்ட நகரங்களில் வர்த்தகத்தை நடத்த அனுமதி கேட்டனர். இரணியலுடன், கணபதிபுரம், பறக்கை, கொளச்சல், மிடலம், திருவிதன்கோட் மற்றும் பத்மநாபபுரம் ஆகியவற்றை உள்ளடக்கியது. எனவே அவர்கள் ஏழூர்ச் (அர்த்தம் '7 நகரங்கள்')செட்டியார்கள் என அழைக்கப்பட்டனர்.
வெள்ளாஞ்செட்டியார்:
வெள்ளான் செட்டியார் -வெள்ளாஞ் செட்டியார்- வெள்ளாலஞ் செட்டியார் =வெள்ளாள செட்டியார் .ஊரின் பெயராலும் ,செய்யும் தொழில் பெயராலும் தங்களை அழைத்து கொண்டு வாழ்ந்து வருகிறார்கள் வெள்ளான்
செட்டியார் என்ற இன பெயருக்கு முன் கீழ்க்கண்ட தலைப்புகளை தாங்கி தமிழகம்
முழுவதும் சிதறி கிடக்கிறார்கள்.
1.அகரம்2.அள்ளிதுறை நகரத்தார் 3.64.மனை 4.எழுர் 4. கங்கை குல வைசிய 4. பூவத்தாகுடி5. சைவ 6.கந்தபொடி 7.வெண்பாவு
நூல்காரர் 8. வைகை 9. கொங்கு 10
கத்தபட்டு நகரத்தார் 11. எருக்கமேனிபட்டி 12.
சுந்தரம் நகரத்தார் 13 சோழபுரம் 14 சங்குமுக பாண்டியர் 15. வல்லத்திரா கோட்டை 16
பாப்பா நாடு நகரத்தார் 17 ஏம்பல் நகரத்தார் 18.
விராலூர் நகரத்தார் 19 ,அரிவியூர் வடக்கு வளவு
நகரத்தார் 20 அரிவியூர் தெற்கு வளவு நகரத்தார். இவர்களும் நகரத்தார் கதைகளையே கூறுகின்றனர்.
வாணியர்: (வைசிய புராணக்கதை)
மருதவாணிபன் என்னும் பெருவணிகன் காவிரிபூம்பட்டினத்தில் வாழ்ந்து
வந்தான்.அவனுக்கு பிள்ளைப்பேறு இல்லை.ஆகையால் அவன் சான்றோருக்கும், ஏழைகளுக்கும் தானங்கள் பல செய்து வந்தான். இதன் பயனாக பார்வதி தேவியின்
அம்சத்துடன் மருதவாணிபருக்கு அழகான பெண்குழந்தை பிறந்தது.அக்குழந்தைக்கு
அன்புபிரியாள் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். அக்குழந்தையும் அழகான பெண்ணாக
வளர்ந்து பருவமடைந்தாள். அந்நாட்டு சோழஅரசன் நகர்வலம் வந்த போது அவள் அழகில்
மயங்கி அவளை மணம் செய்ய எண்ணினான். இதற்கிடையே இறைவனே தொண்டைநாட்டு வாணிகன்
வேடத்தில் வந்து அன்புபிரியாள் அம்மையை தானே திருமணம் செய்ய எண்ணுவதாய் கூறினான்.
மருதவாணிபரும் சரி என்று ஒப்புக் கொண்டார்.திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
திருமணநாளும் நிச்சயம் செய்யப் பட்டது.
இவ்விஷயம் சோழமன்னனுக்கு தெரிந்தது.உடனே அவன் தன் ஆட்களை அனுப்பி
மருதவாணிபரிடம் பெண் கேட்டான். ஆனால் மருதவாணிபரோ நாங்கள் செத்தாலும் சாவோமே தவிர
மாற்று இனத்தவருக்கு பெண் கொடுக்க மாட்டோம் என்று கூறி திருப்பி அனுப்பி விட்டார்.
இதனை கேட்ட அரசன் கடுங்கோபமுற்றான். உடனே அரசன் தன் வேலையாட்களை அனுப்பி
மருதவாணிபர் வீட்டை அலங்கரிக்க சொல்லி நாளை காலை எனக்கும் அன்புபிரியாளுக்கும்
திருமணம் நடக்கும் என்று கூறினான்.
இதை கண்ட மருதவாணிபரோ பதறிப்போனார். வேறொருவருக்கு பெண் தருவதாய்
நாம் கொடுத்த வாக்கு என்னாவது என்று எண்ணினார். சொன்ன சொல் தவறாத வாணியர்
குலத்தில் பிறந்து விட்டு அரசனுக்கு எப்படி பெண் கொடுப்பேன் என்று பதறினார்.
அன்றிரவே அவர் அரசன் திருமணத்திற்காக கட்டியிருந்த மணப்பந்தலில் ஒரு நாயைக்கட்டி
விட்டு தன் மகளுடனும் தன் உறவினர்களுடனும் தன் மகளுக்கு நிச்சயித்த மருமகன்
ஊருக்கு சென்றார். அப்போது அவர்கள் செல்லும் வழியில் ஈசன் மணமகன் வேடத்தில்
வந்தார். உடனே அவர்கள் இப்போதே திருமணத்தை நடத்தி விடலாம் என்று எண்ணி திருமணத்தை
முடித்து விட்டனர். அனைவரும் கிளம்பும் போது காவிரிஆறு குறுக்கிட்டது. அனைவரும்
ஒரு ஓடத்தில் ஏறி அக்கரையை அடைந்தனர். அப்போது அன்புபிரியாளையும் மருமகனையும்
காணாது தவித்த மருதவாணிபர் ஆற்றில் குதித்து உயிரை விட முடிவுசெய்தார். அப்போது
மருதவாணிபா “யாமே
உமது மகளை ஆட்கொண்டோம்” எம்மை காண நீ திருவிடைமருதூர் வருவாயாக! என்ற அசரீரி குரல்
கேட்டது. திருவிடைமருதூரை அடைந்த மருதவாணிபரும் உறவினர்களும் அன்புபிரியாள்அம்மையும்.
ஈசனும் மணக்கோலத்தில் இருப்பதை கண்டனர். ஈசன் தான் அன்புபிரியாளை மணந்த முறையை
கூறி மறைந்தார். காவிரிப்பூம்பட்டினத்தில் அரசனோ மணப்பந்தலில் நாயைக் கண்டு
கடுங்கோபம் கொண்டான். அங்கிருந்த வாணியர் குலத்தவர்களை அடித்து சித்திரவதை
செய்தான். இதைக் கண்டு பயந்த வணிகர்கள் அரசனிடம் அவர்களை நாங்கள் பிடித்து
தருகிறோம் என்று கூறி செல்வாக்குடன் வாழ்ந்தனர்.
பல ஆண்டுகளுக்கு பின் அவர்கள் திருவிடைமருதூர் ஆலயத்தில்
அன்புபிரியாள் அம்மை திருமண உற்சவத்தை தாங்களே நடத்த தகுதியானவர்கள் என்று
அரசனிடம் சென்று முறையிட்டனர். மருதவாணிபனின் உறவினர்களும் தங்களுக்கு தான் உரிமை
இருப்பதாய் கூறினார்கள். அரசனும் இருபிரிவினரும் திருவிடைமருதூர் சென்று அன்பு பிரியாளம்மை
முன் சென்று கூப்பிடுங்கள்.யார் அழைத்தால் வருகிறாளோ அவர்களே உரிமை உடையவர்கள்
என்று கூறினான். அதன்படி இருசாராரும் கோவிலுக்கு சென்று அழைத்தனர்.மருதவாணிபர்
உறவினர்கள் அழைத்த போது என்ன அப்பா என்ன அம்மா என்று குரல் வந்தது.உடனே அரசன்
திருக்கல்யாண உற்சவம் நடத்த நீங்கள் தான் உரிமை உடையவர்கள் என்று சாசனம் வழங்கி
சிறப்பித்தான். இப்போதும் 4 ஆம் நாள் மாப்பிள்ளை அழைப்பு மண்டகப்படி வாணியர்
சமுதாயத்தவரால் நடத்தப்படுகிறது. கழுத்திரு எனப்படும் தாலி மூலம் இச்சமூகத்தினர்
வகைப்படுத்தப்படுகின்றனர். விசாலட்சியம்ம, காமட்சியம்மா,
அச்சுத்தாலி, சிறகுத் தாலி, தொப்பைத் தாலி என வகைப்படுத்தப்படுகின்றனர்.
இக்கோவில் மூலவர் அம்மன் சிலை அருகில் எண்ணெய்க் குடமிருப்பதை இன்றும் காணலாம்.
பின்குறிப்பு:
அன்பிற்பிரியாள் கதையானது உண்மையில் நடந்த கதையே. இவ்வாரலாறானது
இங்கு திரிக்கப்படுள்ளது. அக்காலத்தில் செட்டியார்கள்
பின்பற்றிய மதம் சமணம் என்று திரிபால் அழைக்கப்பட்ட ஆசீவக மதம் ஆகும். இக்கதை காஞ்சியில் நடந்தேறியது. தெலுங்கு ஆட்சியில்
அன்றைய காஞ்சி இருந்தது. தெலுங்கு மன்னர் துமால் கிருஷ்ணப்ப
நாயக்கர் பெண்பால் கொண்ட மோகத்தால் ஒவ்வொரு உயர் சமூகத்திலிருந்தும் ஒவ்வொரு
பெண்ணைத் திருமணம் செய்ய கட்டளை பிறபிக்கின்றான். வைதீகர்கள்
பெண்தர வேண்டிய தருணத்தில் வைதீகர்கள் சூழ்ச்சியால் தங்களைத் தாழ்ந்தோராகவும் சமணரே
உயர்ந்தோராகவும் அரசனிடத்தில் ஒப்புவிகின்றனர். சமணர்கள்
பெண் கொடுத்தால் நாங்கள் தருகின்றோம் என்று மன்னனிடம் பொய்யுரைக்கின்றனர். அதை ஏற்று மன்னன் சமண தலைவரை அழைத்து பெண் கேட்க, சமூகத்தில்
கலந்துரைப்பதாய் கூறி நாள் கெடுவும் வாங்கி வர சமூகத்தில் கலந்து நாளொன்றை
மன்னர்ட்க்கு அறிவித்தனர். இப்பெரும் பொறுப்பினை ஏற்றோர்
செட்டி இனத்து மக்கள் ஆவார். தன் பெண்டிரை கொடுக்க
மனமில்லாது இருந்தனர். அரசன் பரிவாரங்களுடன் குறித்த நாளில்
பெண் கேட்டு வர அங்கு அலங்கரித்த பந்தலில் நாய் கட்டப்பட்டும் ஊர் வெறுமையாய்
இருப்பது கண்டும் வெகுண்டெழுந்தான். செட்டியார்களும்
சமணர்களும் தன் இடம் விட்டு வேறுபுலம் பெயர்ந்தனர். எஞ்சிய செட்டி
இனத்து பெண்களை துன்பத்தை அடையச் செய்து செட்டி மக்களை நாடு விட்டு துரத்தினான்.
அவர்கள் பூம்புகாரில் தஞ்சம் அடைந்தனர்.
இந்நிகழ்வு கி.பி.14ஆம் நூற்றாண்டில்
நடந்ததாய் மயிலை சீனி வேங்கட சாமி நாட்டார் தம் சமணமும் தமிழும் என்ற நூலில் பதிவு
செய்துள்ளார்.
தமிழகத்தில் நடந்த செட்டி இனத்து பல நிகழ்வுகளை இந்து மத
சார்பெடுத்து திரித்து கூறிய பெருமை வைசிய புராணம் எழுதிய சூடாமணிப் புலவரையே
சாரும். இவர் கண்ணகி கோவலனையும்
இந்துவாகவே சித்தரித்துள்ளார். அது வடபுலத்தில் (இன்றைய வட இந்தியாவில்) நடந்ததாயும்
குறிப்பிடப்படுள்ளது. .
சமண மதத்தை தழுவிய செட்டியார்களை இந்து மதத்தின் பெயரால் தாளாத
கொடிய தண்டணைகளுக்கு உள்ளாக்கினர். சமணம்
தழுவிய செட்டியார்கள் பின்னாளில் வலிந்து இந்து மதம் தழுவ தள்ளப்பட்டனர். பின்னர் இந்து மதத்தை தழுவினர்.
(இந்து மதம் புகுத்தப்பட்டது பற்றிய தகவல்கள் வேறொரு
கட்டுரையில் வழங்கப்படும்).
பொதுமைகள்:
கிடைத்த கதைகளை கொண்டு ஆராயுங்கால் பல தகவல்கள் செட்டியார் சமூகங்களில் பொதுவாக
காணப்படுகின்றன. அவற்றைக் கீழே காண்போம்.
- அனைத்து செட்டியார்களின் தோற்றுவாய் என்பது காஞ்சிபுரம் என்பது புலனாகின்றது.
- சமண மதம் ஏற்ற செட்டியர்கள், இந்து மத துன்புறுத்தல் தாளாது காஞ்சீபுரத்திலிருந்து காவேரிப்பூம்பட்டினம் புலம்பெயர்ந்தனர் என்று அறியமுடிகின்றது.
- இக்கதைகள் சாதியின் தோற்றத்தை கூறாது மற்றாக புலப்பெயர்ச்சியினை எடுத்துரைகின்றது.
- செட்டியார் சாதி பெருமைகளையே இக்கதைகள் பேசுகின்றன.
- அரசருக்கு பெண் தர மறுத்தது இங்கு கூறப்பட்டுள்ள கதைகளின் கருவாகும்.
- இருகதைகளிலும் பெண்கள் மறைவதற்க்கு முந்தைய நாள் வீடு அலங்காரம் செய்யப்படுகின்றன.
- இருகதைகளிலும் பெண்களைக் கொண்டே சாதிப் பெருமை பேணப்படுகின்றது
- செட்டியாரல்லாத பிற இனத்தவர்க்கு பெண் தராமலிருப்பதே நோக்கமாக அறியப்படுகின்றது.
- காவிரியாறு அனைத்து கதைகளிலும் குறிக்கிடுகின்றது.
- பெண் தர மறுத்ததால் சிறையிலடைப்பதும் சித்திரவதை செய்யப்படுவதும் புலனாகின்றது.
- நீதி முறை தவறிய சோழ மன்னனே இவர்கள் பூம்புகாரிலிருந்து வெளியேறக் காரணமாக கூறுகின்றனர்.
இவர்கள்
ஜீனக்காஞ்சியிலிருந்து இந்து வைதீக துன்புறுத்தல் காரணமாய்
காவிரிப்பூம்பட்டிணத்திற்க்கு
புலம்பெயர்ந்தது புலனாகின்றது. வணிகர்கள் தலைநகரமாக காவிரிப்பூம்பட்டிணம்
விளங்கியதை சான்றுகள் மூலம் அறியலாம். வேற்று இன அரசருக்கு பெண்
தர மறுத்ததாலேயே இவர்கள் புலம் பெயர்ந்து சென்றனர் என்பது புலனாகின்றது. இலக்கிய சான்றுகளைக் கொண்டு இக்கதைகளை ஒப்பிடுவோம்.
சான்றுகள்:
மேற்கூறிய செய்திகளை வரலாற்றில் தேடியபோது
கிடைத்த சில சான்றுகளைக் கொண்டு உண்மையாக நடந்தவற்றை அறியலாம்.
நகரத்தார் வரலற்றிலிருந்து:
சுப்பிரமணிய ஐயர் 1894ல் எழுதிய நகரத்தார் வரலாற்றில் சம்புத்தீவில் (குமரிக்கண்டம்)
இருந்து குடிபெயர்ந்து காஞ்சிபுரத்தில் தொடக்கத்தில்
வாழ்ந்த இச்சமூகத்தினர் வரிக்கொடுமை தாளாது காவிரிப்பூம் பட்டிணத்திற்கு இடம்பெயர்ந்ததாகவும், சோழ மன்னர்களுக்கு முடி சூட்டும்
உரிமையைப் பெற்றதாகவும் கலியுகாதி 3775ல் பூவந்திச் சோழ மன்னர் பல செட்டிப்
பெண்களைச் சிறையிலிட்டதாகவும் 8000 ஆண் செட்டி மக்களை பொன்னோடும் பொருளோடும் ஆத்துமநாத
சாத்தியரிடத்தில் ஒப்படைதுவிட்டு தாங்கள் தற்கொலை செய்துகொண்டனர் என்றும் பூவந்திச்
சோழ மன்னர் தன் மகனுக்கு முடிசூட்ட வைசியர்களை வேண்ட வளர்ந்த ஆண்மக்கள் திருமணம் ஆகாது
முடிசூட்ட இயலாது என்றவுடன் பூவந்திச் சோழ மன்னர் உத்தரவின் பேரில் வேளாளப் பெண்களை மணம் முடித்ததாகவும் மேலத் தெருவினர் கார்காத்த பிரிவுப்
பெண்களையும், கீழத்தெருவினர் சோழியப் பெண்களையும், தென் தெருவினர் காணியாளர் பெண்களையும் மணந்தனர். சோழ மன்னனிடம் வீர பாண்டியன் வேண்டிக்கொண்டதற்கு இணங்க கலியுகாதி 3808ல் பாண்டிய நாட்டில்
குடியேறினர். கீழத்தெருவினர் இளையாத்தங்குடியிலும்,
மேலத் தெருவினர் அரியூரிலும், தெந்தெருவினர் சுந்தரப்பட்டினத்திலும்
குடியமர்ந்ததாக கூறியுள்ளார்.
கல்வெட்டுகளில்:
ஆதியில்
காஞ்சியில் இருந்து இடம்பெயர்ந்த சுமார் 8000
பேர். காவிரிப்பூம்பட்டினம் என்ற புகார் நகரில் மூன்று வீதிகளில்
பெரும் மாளிகைகள் கட்டிக்கொண்டு சோழ மன்னனின் சிறப்பு அனுமதியின் பேரில் தங்கள்
மாளிகை மேல் கலசங்கள் வைத்தும் ,சிங்க கொடி கொண்டும்
வாழ்ந்தனர். பல்வேறு ஆய்வுகள் இலக்கிய சான்றுகள், பாண்டி
நாட்டு, பிரான்மலை கல்வெட்டுகள் மூலம் சோழ மன்னனிடம் வீர பாண்டியன்
வேண்டிக்கொண்டதற்கு இணங்க 'பதினெண் பூமி விஷயத்தார்' களை அவர்கள் சுனாமியால்
பாதிக்கப்பட்டு வேறு இடம் தேடிய காரணத்தால் பின்னாட்களில் அனுப்பி வைத்தான்
என்பது உறுதியாகிறது.சுனாமி ஏற்பட்டது கி.பி. 10ஆம் நூற்றாண்டு
என ஆய்வாளர்கள் கணிக்கின்றானர்.
நீத்தார் பெருமை
என்ற நூலில் இருந்து:
பூம்புகாரில்
சுனாமி ஏற்பட்டது கி.பி. 10ஆம்
நூற்றாண்டு என்றும் சுனாமியால் பாண்டிய நாடு வந்தடைந்ததாகவும்
ஒரு பிரிவினர் இன்றைய காரைக்குடியிலும், ஒரு சில குழுவினர் புழால்
உண்ணுதல் காரணமாய் தனித்து விடப்பட்டதாகவும். அக்குழுவினர் மதுரை
அரியூர் பகுதிகளிலும் குடியேறியதாக கூறுகின்றனர்.
கருத்தரங்கில்:
தமிழக அரசின்21/06/2017இல் தொல்லியல்
துறை சார்பில், 'நாட்டுக்கோட்டை நகரத்தார் மரபும், பண்பாடும்' என்ற தலைப்பில், திங்கள் பொழிவு, சென்னையில்
நடந்தது. இதில், தமிழக அரசு தொல்லியல் துறையின் முன்னாள் துணை இயக்குனர், மா.சந்திரமூர்த்தி
பேசியதாவது: நகரத்தார், காஞ்சிபுரத்தில் இருந்து, சோழ நாட்டுக்கு வந்து இருக்கலாம். அவர்கள், பூம்புகாரிலிருந்து, பாண்டிய
நாட்டிற்கு சென்றது குறித்து, பல கருத்துக்கள் உள்ளன. பூவந்தி சோழன், நகரத்தார்
பெண்களை விரும்பியதால், கி.பி., மூன்றாம்
நுாற்றாண்டிலும்; 10ம்
நுாற்றாண்டில் ஏற்பட்ட சுனாமியின் போதும், பிரிவு பிரிவாக
சென்றிருக்க வாய்ப்புள்ளது. நகரத்தார், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வணிகம் செய்து செழிப்புற்றதால், அரசர்களுக்கே
கடன் வழங்கியும், முடிசூட்டியும் வைத்துள்ளனர். சோழநாட்டில் இருந்து,
8,000 பேர், புதுக்கோட்டை மலைக்கு சென்றனர். அது, நகரத்தார் மலை
என்றும், நார்த்தாமலை என்றும் அழைக்கப்படுகிறது.
பாண்டியர்கள், வறண்ட நிலத்தை, நகரத்தாருக்கு
வழங்கினர்.
தனவணிகர் நூலிலிருந்து:
1894 இல் பதிப்பிக்கப்பட்ட தேவகோட்டை
சின்னையன் செட்டியார் வீட்டு அரு.ராமநாதன் செட்டியார்கள் எழுதிய 'தனவணிகர்
நாட்டுக்கோட்டை செட்டியார் வரலாறு 'என்ற புத்தகத்தில் பூவந்தி சோழன் காலத்தில் அவரின் பாலியல்
வன்முறை காரணமாக பிராண ஹானி செய்து கொண்டு பெண் மக்கள் இறந்து போய் கார்காத்த
வெள்ளாளர்,காணிய வெள்ளாளர், சோழிய வெள்ளாளர்(அரச குலம்) பெண் மக்களை மணந்து கொண்டார்கள்
என்று உள்ளது.
இராமநாதன்
நூலிலிருந்து:
1953 இல் படிப்பிக்கப்பட்ட அ.ராமநாதன்
செட்டியார்கள் தொகுத்து வைத்த புத்தகத்தில் பாண்டிய நாட்டில் இளையாத்தன்குடி தொகுப்பில்
இருந்த திருவொற்றியூர், பாண்டுக்குடி பகுதியை சேர்ந்த அரும்புகுத்தி வெள்ளாள பெண்
மக்களை நகரத்தார் ஆண்கள் மணந்து கொண்டார்கள் என்றும் அதன் காரணாமாக நகரத்தார்
திருப்பூட்டும் தாலிக்கு 'அரும்பு கழுத்துரு'என்று பெயர் என்கிறார்கள்.
பாவாணர் நூலிலிருந்து:
பூம்புகாரில் வணிக சாதியினர் மிகுந்த செல்வாக்குடன்
வாழ்ந்தனர் என்பது சிலப்பதிகாரத்தில் அறியக்கிடைக்கின்றது. அவர்கள் பிற்காலத்தில்
கடற்கோளுக்கு அஞ்சி இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாலைவனப்பிரதேசத்தில்
குடியேறியிருக்க கூடும் என்று கருத வேண்டியிருக்கின்றது. அவர்கள் தாங்கள் வாழும்
பகுதிக்குச் " செட்டி நாடு " என்று பெயர் வைத்துக்கொண்டுள்ளனர்.
"நாட்டார்", " நகரத்தார்" எனும் சிறப்பு
பெயர்களையும் பெற்றுள்ளனர்.
நீலபத்மனாபன் நாவலிலிருந்து:
சோழன் தங்கம்மை தாயம்மை முத்து கோர்க்கும்
திறத்தில் மயங்கி இவ்விருவரையும் மணக்க விரும்பி கட்டாயத்துக்கு உள்ளக்கியதாகவும் தந்தையால்
இருவரும் கொல்லப்படும்போது இருவரும் விட்ட சாபத்தால் நாடு பஞ்சம் பட்டினியால் சிக்கித்
தவித்தது எனவும் அங்கிருந்து பஞ்சம் கொள்ளாது வெளியேறினர் எனக் குறிப்பிடுள்ளார்.
சேதுபதி மன்னர் செப்பேட்டிலிருந்து:
சோழவள நாட்டில் இருந்து வந்து குடியேறிய தெலுங்கு
மொழியினைத் தாய்மொழியாகக் கொண்ட வணிகர்களும் செட்டிகள் என வழங்கப்பட்டனர். இவர்கள்
இராமநாதபுரம் கோட்டையிலும், இராமேசுவரம் நகரிலும் மட்டும் வாணிபத்தில் ஈடுபட்டு வந்தனர். இன்னொரு
வகுப்பினர் செக்குகள் அமைத்து எண்ணெய் வடித்து, எண்ணெய் விற்று
வந்தனர். இவர்கள் பிற்கால சோழ பாண்டியர் கல்வெட்டுக்களில் சங்கரப்பாடியர், மாயிலட்டி, சோதி நகரத்தார்
என்ற சமூகத்தினராகக் குறிக்கப் பட்டுள்ளனர். இவர்கள் ஏனைய செட்டிகளினின்றும்
வேறானவர் களாக இருந்த பொழுதிலும் உலக வழக்கில் இவர்களும் செட்டிகள் என்றே
வழங்கப்பட்டனர். திருக்கோயில்களில் நந்தா விளக்கு எரியச் செய்வதற்கும், சனிக்கிழமைகளில் தெய்வத்திரு
மேனிகளுக்கு
எண்ணெய்க்காப்பிடுவதற்கு எண்ணெய் வழங்கும் பொறுப்பினை மேற்கொண்டிருந்தனர். இவர்கள்
மரத்தினாலும், கல்லினாலும் ஆன
செக்குகளை அமைத்திருந்தனர்.
கேரள சிங்கவள நாட்டில் (இன்றைய காரைக்குடிப் பகுதியில்) மிகுதியாக
இத்தகைய செக்குகள் அமைக்கப்பட்டிருந்த காரணத்தினால் அந்த பகுதி செக்கு ஆலை என்றும்
செக்காலைக் கோட்டை என்றும் வழக்குப்பெற்றுள்ளது. இத்தகைய செக்குகளுக்கு சேது
நாட்டில் செக்கு இறை என்ற வரிப்பாடு இருந்து வந்தது. சிரேட்டி என்ற வடசொல்
செட்டி என வழக்குப் பெற்றாலும் அந்த சொல் குறிப்பிடுகின்ற வணிகர் என்ற
பொருளில் பல செட்டி வகுப்பினர் இருந்தாலும், எண்ணெய் வணிகம் செய்கின்ற
இந்த வணிக மக்கள் வானியர்என்றும், வாணிகச் செட்டி என்றும் வழங்கப்பட்டனர். இவர்களைத் தவிர, இன்னொரு செட்டி
வகையினரும் சேதுபதி சீமை குடிமக்களாக இருந்தனர். அவர்கள் தான் நாட்டுக் கோட்டையார்
நகரத்தார்’ எனப்படும் செட்டி மக்கள். இவர்களைப் பற்றிய இந்தச் செய்திகள்
செப்பேடுகளில் காணப்படவில்லை.
பொதுமை:
- முதலில் செட்டியார்கள் காஞ்சிபுரத்திலிருந்து வரிக் கொடுமை காரணமாக காவிரிப்பூம்பட்டிணம் வந்து சில நூற்றண்டுகள் தங்கி வாழ்கின்றனர்.
- பூம்புகாரில் கி.பி. மூன்றாம் மற்றும் கி.பி பத்தாம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட கடல் கோள் காரணமாக குழு குழுவாக பாண்டிய நாட்டிற்க்கு இடம்பெயர்ந்தனர்.
- கடல் கோள்களினால் செட்டியார்கள் தங்கள் உறவுகளை இழந்துள்ளனர் என்பது புலனாகின்றது.
இவற்றின்
மூலம் நான் அறிய வருவது,
ஜீனக்காஞ்சியிலிருந்து செட்டியார்கள் வைதீகர் துன்புறுத்தல் காரணமாய்
பூம்புகார் புலம்பெயர்ந்தனர். பூம்புகரில் ஏற்பட்ட கடல்கோள் காரணமாய்
பாண்டிநாடு சென்றடைந்தனர் என்பது தின்னம். ஜீனக்காஞ்சியில் பெண்தர
மறுத்தது உண்மையே ஆயினும் இக்கதை பூவந்திச் சோழனோடு பொருத்துவது புறம்பே அஃது கதை வழக்கில்
திரிக்கப்பட்டதாய் அறிகின்றேன்.
வணிகர்கள் நிறைந்த பகுதி, வாணிபம் செய்து வந்த பகுதியை சங்க
காலத்தில் 'வணிகன்
பாடி”
என அழைப்பதும் மரபாகும்.
இவ்வாறு விளங்கிய வணிகன் பாடியே, காலப்போக்கில் வாணியம்பாடி என மருவி
அழைக்கலாயிற்று. வாணியம்பாடி என்னும் ஊர் காஞ்சியின் அருகில்
இருப்பது செட்டியார்கள் அங்கிருந்து வணிகம் செய்தனர் என்பதற்க்கு இன்னுமோர் சான்று..
செட்டியார்களின் புலம் பெயர்வு:
சம்புத்தீவு (குமரிக் கண்டம்)
-ஜீனகாஞ்சி- காவிரிப்பூம்பட்டிணம்.
- காரைக்குடி-தேவக்கோட்டை-புதுக்கோட்டை
- அரிவையூர்-கோட்டாறு-இரணியல்-மதுரைதெற்கு
- திருநெல்வேலி-கோவில்பட்டி-கன்யாகுமரி-கேரளா
- தாழையூத்து-திருப்பூர்-சேலம்
- சமணக் காஞ்சியிலிருந்து பெண் தர மறுத்து பூம்புகார் புலம் பெயர்ந்தனர்.
- பூம்புகாரில் ஏற்பட்ட கடல்கோள் காராண்மாய் பாண்டிநாடு சென்றனர்.
- காரைக்குடி பகுதியில் குடியேறியவர்கள் நகரத்தார் அல்லது நாட்டுக்கோட்டை செட்டியார்கள் என அழைக்கப்பட்டனர்.
- அரிவையூர் பகுதிகளில் குடியேறியவர்கள் அரியூர்ச் செட்டியார்கள் என அழைக்கப்பட்டனர்.
- திருநெல்வேலி கன்யாகுமரி பகுதிகளில் குடியேறியவர்கள் செட்டுஅல்லது செட்டிகள் என அழைக்கப்பட்டனர்.
- கொங்கு நாடுகளில் குடியேறியவர்கள் கொங்கச் செட்டியார் எனப்பட்டனர்.
- பின்னர் இந்த 4 முதன்மைச் செட்டியார்களிலிருந்து பல செட்டிப்பிரிவுகள் கிளைத்தன.
- மேலத் தெரு 64 வைசியர்கள் மலையாளம் போனதாக ஒரு குறிப்புண்டு.
"பதியெழு வறியாப் பழங்குடி கெழீஇய
பொதுவறு சிறப்பின் புகாரே
யாயினும்
நடுக்கின்றி நிலை இய என்பதல்லதை ..."
என்று
செட்டியார்கள் தங்கள் பதியிலிருந்து வேறு இடம் பெயராதவர்கள் என்றும், ஆதியில் தோன்றி சலிப்பின்றி
அங்கேயே நிலை பெற்று இருந்தனர் என்றும் அடியார்க்கு நல்லார் கூறுகிறார். செட்டியார்கள்
தங்கள் தோற்றுவாயான காஞ்சி, பூம்புகாரில் இன்றும் சில குடும்பங்கள்
வாழ்ந்து வருகின்றன.
புலப்
பெயர்வு பல காலங்களில் சிறிதாக சிறிதாக நடந்துள்ளது. புலப்பெயர்வுக்கு பின் தாங்கள் குடியேறிய பகுதிக்கு
ஏற்றார் போலும் வணிகத்திற்க்கு ஏற்றார்போல் தங்கள் சாதிப் பெயர்களிலும் குல வழக்கங்களில்
பல மாறுதல்களை ஏற்படுத்திக் கொண்டனர். சில மாற்றங்களை ஏற்படுத்தினாலும்
செட்டி என்பதனை பினொட்டாக இட்டுவருகின்றனர். எடுத்துக்காட்டாக
பறக்கை செட்டி, ஏழூர்ச் செட்டி, பாத்திரச்
செட்டி, வேலூர்ச் செட்டி, புதுச்செட்டி.
இந்நான்கு
முதன்மைப் பிரிவினர்க்கும் அகமண உறவு இல்லை அன்றைய குல வழக்கங்களை நாட்டுக்கோட்டை நகரத்தார்
மட்டுமே உண்மையாக கடைபிடிப்பதாகவும்,
பிற செட்டியார்கள் அதிலிருந்து வழுவியதால் அவர்களைச் தன் இனமாக ஏற்க
சில செட்டியார்கள் மறுக்கின்றனர்.
மேலும்
இவர்களில் கவனிக்கத் தக்க முரண்பாடு என்னவெனில் கண்ணகி கோவலன் வழிபாடு ஆகும் கண்ணகி
எனப்படும் சிலப்பதிகார நாயகி நாட்டுக்கோட்டை நகரத்தார் குல கொழுந்து என்று கூறுகின்றனர்
அவள் நகரத்தார்க்கு மட்டுமே உரிமையானவளாக கருதுகின்றனர். ஆனால் திருநெல்வேலிக்கு
இடம்பெயர்ந்த செட்டிகள் தாங்களும் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் மட்டுமே உரியவர்கள்
என்று கூறுகின்றனர். இதில் எண்ணெய் ஆட்டும் வாணியர்களும் கண்ணகி
தங்களுக்கும் உரியவளே எனக் கூறுகின்றனர். பிற செட்டியார்கள் குல
முன்னோர்களில் ஒருவராக கண்ணகி கோவலனைக் காண்கின்றனர்.
கோவலன் கண்ணகி கால்வழி:
செட்டியார் சமூகத்தில் கோவலன் கண்ணகியை
தங்கள் கால் வழி சமூகமாக உரிமை கொண்டடுவோர்கள்,
நகரத்தார், செட்டிகளும் மற்றும் வாணியர்கள் ஆவர்.
கோவலன் கண்ணகி கதைகள்,இலக்கியங்கள், செவி வழிச் செய்திகள் இவற்றினை ஆராயுங்கால், கண்ணகிக்கு
யார் உரிமையானோர் என்பதனை அறியலாம். கண்ணகி பிறப்பு கதையை செட்டிகளும்,
நகரத்தாரும் காரணம் காட்டி தனக்குரியவர்கள் என்றும், கோவலன் கண்ணகியின் முற்பிறவியினையும் பிறப்பினயும் காரணம் காட்டி தனக்கும்
உரியவர்களே
என்கின்றனர்
கோவலன் கண்ணகி தோன்றும் இலக்கியங்கள்:
வைசிய
புராணம், கோவலன்
கதை , சிலப்பதிகாரம்,வாய் மொழிக்கதைகள், இவற்றை ஆராய்வதன் மூலம் கோவலன் கண்ணகியின்
கால்வழிகளை அறிய முடியும்.
வைசிய புராணத்தில்:
- சூடாமணிப் புலவர்
என்பவரால் இயற்றப்பட்ட வைசிய புராணத்தில் மாசாத்துவன் வழியில் வந்த மணியரசன் என்பவர்க்கு
பிறந்த மூன்று ஆண் மக்களில் மூத்த ஆண் மகன் மக்களுக்கு தன் செல்வத்தையெல்லாம் வரியவர்க்கு
தானம் செய்கின்றார். தன் செல்வங்கள் முற்றிலும் இல்லாமல்
போக கடன்வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதால் குறைந்த முதலீட்டில் எண்ணெய் வணிகம்
செய்து வந்தார். முதலில் சில நாட்கள் எண்ணெய் விற்காமல் போகவே
அருகில் உள்ள பூட்டிய காளி கோவிலில் வணிகம் சிறக்க விளக்கேற்றுகிறார். காளி கோவிலானது பிள்ளைவரம் கேட்ட பாண்டிய மன்னனிடம் நர பலி கேட்டதால் கோவிலைப்
பூட்டி, இனிமேல் இக்கோவிலுக்கு பூசனைகள் செய்யக்கூடாதென்று முரசறைகிறான்
மீறுவோர் தலை கொய்யப்படும் என்றான். வணிகம் பெருக பெருக,
தினமும் மிஞ்சிய எண்ணெயைய்க் கொண்டு விளக்கேற்றி வைக்கத்தொடங்கினார்.
பாண்டிய மன்னன் காவலர்களால் செய்தி அறியப்பட்டு மூத்தவரின் தலையை கொய்கின்றான்.
காளியிடம் நீதி கேட்க அடுத்த பிறவியில் கோவலனாக நீயும் கண்ணகியாக நானும்(காளி) பிறந்து பழிவாங்குவதாக வரம் தருகின்றாள்.
பின்னர் இருவரும் பிறந்து பழி வாங்குவதாக கதை தொடர்கின்றது.
கோவலன்
கதை:
புழேந்திப் புலவர் எழுதிய கோவிலன் கதையில்” முத்துச்செட்டி என்பவன் பிள்ளைவரம் வேண்டி நந்தவனம் அமைக்கிறார்.
அதில் காமதேனு என்னும் பசு நாள் தோறும் மேய்ந்து செல்கிறது. கன்றின் விருப்பத்தை
ஏற்று ஒரு நாள் அதனையும் அழைத்துவர, பட்டிமாடு மேய்கிறதென்று முத்துச்செட்டி வீசிய கல்லில் அடிபட்டு இறக்கிறது. ‘பதினாறு வயதளவும்
அன்புடன் வளர்த்த என் மகவைக் கொன்ற உனக்குப் பிறக்கும் மைந்தனும் அதே வயதில்
இறக்கக்கடவான்’என்று சாபமிட்டு பசு செல்கிறது.
இரண்டு மனைவியுடன் வாழ்ந்து வந்த மணியரசன் என்னும் வணிகன் தம்முடைய
சொத்தை இரண்டு பாகமாக்கி முதல்தார மக்கள் மூவருக்கு ஒருபங்கும் இளையதார மகனுக்கு
ஒரு பங்கும் அளிக்கிறான். தம் குல வழக்கப்படி இளையதார மகன் எண்ணெய்க்குடமெடுத்து
விற்பனக்கு வருகையில் விற்பனையாயின் காளிகோயிலுக்கு விளக்கேற்றுவதாக வேண்டியதுடன்
அதன்படியும் செய்கிறான்.
மதுரையை ஆண்ட பாண்டியர்கள் தமக்குக் குழந்தைப்பேறு இன்மையால் கோபம்
கொண்டு காளிகோயில் கதவடைத்ததுடன் மீறி விளக்கேற்றுவோர் தண்டிக்கப்படுவார் என்றும்
ஆணை இடுகின்றான். இதனையறியாது விளக்கேற்றிய முத்துச்செட்டியின் இளையதார மகனை
மூத்ததார மக்கள் காட்டிகொடுக்க, அரசனின் ஏவலர்கள் அவனைக்காளி கோயிலில் காவு கொடுக்கின்றனர்.
வெட்டுண்ட வாணியன் தலை காளியின் மடியில் விழுந்து ‘உபகாரம் செய்தேன் அபகாரம் நேர்ந்ததுவே’ என்று வருந்த, ‘மைந்தன் பழிக்கு நாளை
மதுரை பழிவாங்கி வைப்பேன்’ என்று காளி சூளுரைக்கிறாள் கணவனின் மறைவால் வாணிச்சியும்
இறக்கிறாள்..
வாணியன், வாணிச்சியின் உயிரை, சொக்கேசர் சிமிழில் அடைத்துவைக்கிறார். காளி சொக்கேசரிடம் ‘இப்பிறப்பு நீங்கி
மறுபிறப்பு யான் பிறந்து வணிக செட்டி கோவலற்கு மனைவியாக வந்து விளக்கவித்த
பாண்டியரை வெட்டித்தலை சாய்த்து மணிக்`குடலைத்தான் பிடுங்கி வந்திடுவேன் கோவிலுக்கு’ என்று சூளுரைக்க , காளியின் உயிரையும்
சிமிழிதனில் அடைத்து வைக்கிறார்.
பிள்ளை வரம் வேண்டியதனால் முத்துச்செட்டியின் மனைவி வர்ணமாலைக்கு
வாணியனும் பாண்டியனின் மனைவிக்கு காளியும் தேவதாசி வயந்தமாலைக்கு வாணிச்சியும் பிறக்கின்றனர்.’வலது கால் செஞ்சிலம்பு
இடது கை செப்போடு கழுத்திலே பூமாலை’ இவற்றுடன் குழந்தை பிறக்க, சோதிடர் கூற்றுப்படி பேழையில் வைத்து ஆற்றில் விடுகின்றனர்.
ஆற்றில் வரும் குழந்தையை ஐந்துதலை நாகம் நாகரத்தினத்தைக்கக்கி வலது
கால் சிலம்பில் பதித்து ‘கண்ணகி’என்று பெயரிட்டு ஆற்றில் விட மாச்சோட்டானும், மாநாய்கனும் எடுக்க, ஒப்பந்த படி மாநாய்கன்
வளர்க்கிறான்.கடையூர் தேவதாசி, தமக்குப்பிறந்த பெண் குழந்தைக்குச் சோதிடம் பார்க்க, இவள் ஐந்து வயதில்
நாட்டியம் கற்கத் தொடங்கி, பத்து வயதில் அம்பலமேறி ஆடி ஆணழகன் ஒருவனை அழைத்து வருவாள்; பன்னிருவாண்டுகள்
அவனுடன் வாழ்ந்து பதின்மூன்றாம் ஆண்டில் மடிவாள்’ என்று கூறுகின்றான்.
கண்ணகியைக் மணக்க போட்டி நடக்கிறது.
முத்துச்செட்டி அப்புச்செட்டிகள் தத்தம் பிள்ளைகளுக்கு மணமுடிக்க
விரும்புகின்றனர். தக்கால வழக்குப்படி திருவுளச்சீட்டு போட அது கோவலனுக்கு முடிவாகிறது. திருமணம்
நடக்கிறது சதிர்க்கச்சேரி கோவலன் விருப்பத்திற்கேற்ப நடத்த மாதவி வருகிறாள். அவள்
எரியும் மாலை கோவலன் கழுத்தில் விழ,அமிர்த கடேசுவரர் கோவிலில் பிரியோம் என்று சத்தியம் செய்து கொண்டு
கோவலன் மாதவியை அழைத்துக்கொண்டு திருக்கடவூர் செல்கிறான்.
சிலப்பதிகாரத்தில்
முற்பிறவி:
போன பிறவியில், உன் கணவனாம் கோவலன், கோத் தொழில் புரியும் பரதன் என பிறந்து,
சிங்கபுரத்து வாணிகன் சங்கமனை, ஒற்றன்
எனக்கூறிக் காவலன் முன் கொண்டு நிறுத்தக் கொலை செய்யப் பெற்ற அச்சங்கமனின் மனைவி
நீலி என்பாள், அத்துயர் பொறுக்கமாட்டாது ஏழுநாள் அலைந்து
இறுதியில், இது செய்தார், வரும்
பிறவியில் இதுவே பெறுக என இட்ட சாபத்தால், பெற்றிர்
இப்பெருங்கேடு என, கண்ணகி கோவலன் முற்பிறவிக் கதையை, மதுரா புரித்தெய்வம் கூறுவது கட்டுரைக் காதையில் இடம் பெற்றுள்ளது. (149-170)
பிரெண்டா
பெக்:
தமிழகத்தில் வழங்கப்பெறும் கோவலன்
கண்ணகி கதைகள்,, கேரளத்தில் வழங்கப்பெறும் கோவலன் கண்ணகி கதைகளை
ஆய்வு செய்துள்ளார் ஆய்வு செய்த அவர் வாய்மொழிகளிலும், இலக்கியங்களிலும்
முற்பிறவிக் கதையுடன் சேர்த்தே வழங்கப்படுவதாக தன் ஆய்வுக்கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
Beck, Brenda, "The
Study of a Tamil Epic: Several Versions of SilappathikaramCompared",
Journal of Tamil Studies,( 1972).
எரிக்
மில்லெர்:
Variations in and of the story of
silappathikaram என்னும் தலைப்பில் எரிக் மில்லெர் தமிழகத்தில் வழங்கப்பெறும்
கோவலன் கண்ணகி கதைகளை ஆய்வு செய்துள்ளார். மேலும் கள ஆய்வு செய்து
கோவலன் கண்ணகி கதைளில் மக்களால் செருகப்பட்ட 15 வகையான முரண்
கதைகளைக் கண்டறிந்துள்ளார். அக்கதைகளும் முற்பிறவி குறித்து கூறுவதாகவும்
கூறியுள்ளார்.
சம்பூர்ண
கோவலன்:
இப்படம் காணக் கிடைக்கவில்லை.1934
ல் டி.பி ராஜலட்சுமி, வி,ஏ. செல்லப்பா நடித்து வெளிவந்ததாக கூறுவர்
கண்ணகி
திரைப்படம்:
ஜூப்பிடர் பிக்சர்ஸ் திரப்பட நிறுவனம் கண்ணகி என்னுந்தலைப்பில் பு.உ.சின்னப்பா கோவலனாகவும், கண்ணாம்பாள்
காளி மற்றும் கண்ணகியாகவும் நடிக்கப்பெற்று 1941 ஆம் ஆண்டு வெளிவந்தது.
இதிலும் முற்பிறவி கதை படமாக்கப்பட்டது.
பூம்புகார்
திரைப்படம்:
தமிழக முன்னாள் முதலமைச்சர்
மு. கருணாநிதி வசனத்தில் முற்பிறவிக் கதைகளின்றி செந்தமிழ்
வசனத்துடன் படைத்திருப்பார்.
வாய்வழிக் கதைகள்:
கேரளத்தின் பல பகுதிகளில் சிலம்பு கதா என்றும் இன்னும் பல பெயர்களிலும் வாய்வழிக்கதைகள் வழங்கப்பெறுகின்றன.
அதிலும் முற்பிறவி பற்றி கூறப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இலங்கை, ஈழம், கருநாடகம்,
போன்ற நாடுகளிலும் இக்கதைகள் வழங்கப் பெறுகின்றனர்.
.பொதுமைகள்:
- கோவலன் கண்ணகி முற்பிறவி கதை அனைத்து இலக்கியவடிவங்களிலும் காணப்படுகின்றன.
- கோவலன் கண்ணகி வணிகர் குலத்தவரே.
- கோவலனின் முன்னோர்கள் பெருவணிகர்கள் ஆவர்.
- வாணிபத்தில் பொருளாதாரத்தில் குறைந்தவர்கள் அல்லது பெரு வணிகம் செய்ய இயலாதவர்கள் எண்ணெய்த்தொழில் செய்தனர் என புலப்படுகின்றது.
- அவ்வாறு குறைந்த பொருளாதாரம் கொண்டு எண்ணெய்த் தொழில் புரிந்தவர்களைசெட்டியார்கள் தங்களில் கீழோராக நினைத்திருக்கலாம்.
- வயந்த மாலை என்னும் தேவதாசிக்கு பிறந்த பிறப்பும்(கால்வழியும்) மணியரசனின் இளைய தாரத்திற்க்கு பிறந்த பிறப்பும் தவறாக சித்தரிக்கப்பட்டிருக்கலாம்.
- வாணியர்களின் மூதாதையர்களும் மாசாத்துவன் வழிவந்தவர்கள் என அறியமுடிகின்றது.
- மணியரசன் மக்கள், முத்துச் செட்டி செய்தற்க்கு பழிவாங்கவே மறுபிறவி நிகழ்த்தப்படுள்ளது என்பதனை அறியலாம்.
- அக்காலத்தில் முத்து பொன் மாணிக்கம் போன்ற தன வணிகத்துடன் எண்ணெய் வணிகமும் செட்டியார் மக்களால் நிகழ்த்தப்பட்டிருப்பதை உறுதியாக கூறலாம்.
- எண்ணெய் வணிகம் குறைந்த சமூக தகுதி உடையோரால் செய்யப்பட்டதால் அதனை பொன் வணிகர்கள் தங்களுக்கு நிகரான வணிகமாக கருதவில்லை என்பது புரிகின்றது..
- செட்டியார்களின் மூதாதையர்களாக கோவலனின் தந்தை மாசாத்துவானை கருதலாம்.
- மாசாத்துவன் கால் வழியாக வந்தவர் மணியரசன் செட்டியார் ஆவார்.
- மணியரசன் குலத்தோன்றல்கள் எண்ணெய் வணிகம் செய்ததை அறிய முடிகின்றது.
முனைவர். ஜெனிசிஸ் அவர்களின் கள ஆய்வு கூற்றுப்படி நகரத்தாரும் செட்டியார்களும் தங்கள் சாதித் தோற்ற முன்னோர்களாக
மாசாத்தன், மாநாய்கன்,
மணியரசன், முத்துச் செட்டியை முன் நிறுத்துகின்றனர்.
குல மூதாதையராகவும் அடையாளப்படுத்துகின்றனர். கோவலன்
முற்பிறவியில் செய்த எண்ணெய்த்தொழில் பற்றி நகரத்தாரிடமும் செட்டியார்களிடமும் பேசும்போது
எண்ணெய் வணிகத்தை ஒதுக்கி பொன் முத்து வணிகம் மட்டுமே செய்தனர் என்று தன வணிகத்துக்கே அழுத்தம் தருகின்றனர்.
சுருங்கக் கூறினால் புகழேந்திப் புலவர்
கதை, பிரெண்டா பெக் கோவலனார் கதை, கேரள
செவி வழிக்கதை, ஈழவர் கதை வைசிய புராணக் கதை இவற்றில் முற்பிறவியில்
வரும் கோவலன் எண்ணெய் சுமந்து விற்ற கதையை ஏற்க மறுக்கின்றனர். எனவே நகரத்தாரும் செட்டியார்களும் தங்களை மகுட தன வைசியர்களாகவே அடையாளப்படுத்திக்கொள்கின்றனர்.
இதிலிருந்து புறந்தள்ளும் மன போக்கு புலப்படுகின்றது.
வாணியர்களை ஏற்காதற்க்கு சில காரணங்கள்:
- புழால் உணவு உண்ணும் தன் சமூகத்தின் ஒருபிரிவினர் வரும் வழியில் தனித்து விடப்பட்டதாக நீத்தார் பெருமை என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது வாணியர்களும் புழால் உண்ணும் பழக்கம் உடையவர்களே.
- எண்ணெய் வணிகம் குறைந்த பொருளாதார தகுதி உடையோரால் செய்யப்பட்டதால் அதனை தன வணிகர்கள் தங்களுக்கு நிகரான வணிகமாக கருதவில்லை..
- எண்ணெய் என்பது அருகில் உள்ளோர் பயன்படுத்தும் ஒரு எளிய வணிகப் பொருளாகும். இதனால் கடல் கடந்து சென்று வணிகம் செய்யும் தேவை ஏற்படவில்லை என்பதும் அறிய முடிகின்றது.
- எண்ணெய் கோவிலுக்கு விளக்கெரிக்கவும் வீட்டில் உணவு சமைக்கவும் பயன்பட்டதால் விலைமதிப்பற்ற பொருளாகாவே கருதப்பட்டதால் அதை உற்பத்தி செய்வோரும் அவ்வாறே கருதப்பட்டிருக்க வேண்டும்.
- அதிகமான கற்கோவில்கள் கட்டப்பட்ட பின் நந்தா விளக்கு எரிக்க அதிக எண்ணெய் தேவைப்பட்டதால் எண்ணெயின் தேவை அதற்க்கு பின்னே உணரப்பட்டிருக்க வேண்டும். அதுவரை வாணியர்களை ஒரு பொருட்டாக கருதாமலிருந்திருக்கலாம்
- செக்கிறைப்பாடு என்னும் வரியும், எண்ணெய் முட்டை வரியும் கொடுத்தலிருந்து அரசின் கட்டுப்பாட்டில் வாணியர்கள் இருந்தனர் என்பது புலப்படுகின்றது.
- எண்ணெய் அமங்கல பொருளாக கருதப்பட்டதால் வாணியர்களையும் அவ்வாறே கருதியிருக்கலாம்.
- பண்டம் விற்போர் செட்டிகள் என்ற பொருளிலும் வாணியர்கள் பின்னொட்டாக செட்டியார் என்பதனைப் பயன்படுத்தியிருக்கலாம் என்பதனையும் அறிய முடிகின்றது.
வாணியர்:
வாணியம் என்ற
சொல் வணிகத்தைக் குறிக்கும். இது எண்ணெய் வணிகத்தோடு கூட எண்ணெய் தயாரித்தலையும்
குறிக்கும். இவ்விரண்டுமே வாணியர்கள் தொழில் தங்களை வைசியர் எனக் கூறிக் கொள்ளுவர். வைசிய
புராணத்தைத் தங்கள் புனித நூல் எனக் கூறுவர். என்று
அகராதி கூறுகின்றது.
வாணியர் உட்பிரிவுகள்:
வாணியருள்
உணவு எண்ணெய் தயாரித்த வாணியர்கள் தகுதி உயர்ந்தோராகவும் பிற பயன்பாட்டு எண்ணெய் உற்பத்தி
செய்தோர் தகுதி குறைந்தோராகவும் கருதப்பட்டனர். ஓரிடத்தில் நான்கு முதல் ஐந்து செக்குகளை இயக்கியதால்
அது செக்காலை எனப்பட்டது. ஒன்றிக்கு மேற்பட்ட செக்குகளை வைத்து
இயக்கியவர்கள் செக்காலையர்கள் எனப்பட்டனர். ஒரே ஒரு செக்கினை
வைத்து இயக்கியவர்கள் வாணியன் எனப்பட்டனர்.
ஒற்றைச் செக்கான், இரட்டைச் செக்கான் என்ற இரண்டு உட்பிரிவுகள் கூட உள்ளன. முன்னவர் செக்கில் ஒர்
எருதையும் பின்னவர் இரண்டு எருதுகளையும் பூட்டி ஒட்டுவர். இவ்விரு பிரிவினருள்
ஒற்றைச் செக்கார் வலங்கைப் பிரிவினையும் இரட்டைச் செக்கார் இடங்கைப் பிரிவினையும்
சேர்ந்தவர்களாக இருப்பர் வியப்புக்குரிய ஒன்றாகும்.
கல்செக்கு
அரசின் அனுமதியின் பேரில் மட்டுமே செய்துதரப்பட்டது. இதனை பல செக்கு கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.
இறந்தோரின் நினைவாகவும், கோவிலுக்கு வேண்டி கடன்
தீர்த்தல் மூலமாகவும் கல்செக்கு செய்து தந்துள்ளனர். நந்தா விளக்கு
எரிக்கவும் கல் செக்கு செய்துதரப்பட்டதை செக்குகளில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் மூலம்
அறியலாம். வைதீக கோட்பாடுகள் திணிப்பும் ஒருசாதி பல கிளைகளாக
கிளைக்க காரணமானது வைசியர் எனப்பட்ட வாணியர்கள் வைதீக மனுவை அடிப்படையாகக் கொண்டு கீழானவராகவே
கருதப்பட்டனர்.
குக
வாணியர் என்ற ஒரு பிரிவு
735ஆவது எண் கொண்ட சாதியாக தமிழக அரசு சேர்த்துள்ளது இச்சாதி பற்றிய
விவரங்கள் தெரியவில்லை.
இடங்கை வலங்கை
போராட்டம்:
தமிழகத்தில் உள்ள சாதிகள் தங்கள் வரலாற்றினை எழுதும்போது
இடங்கை-வலங்கை போராட்டத்தினை குறிப்பிடாது போனால் அச்சாதிய வரலாறு முழுமை அடையாது.
இடங்கை-வலங்கை போராட்டத்திற்க்கும் நமக்கும் தொடர்புண்டு எனவே இங்கு
நாமும் அதை குறிப்பிட விரும்புகிறோம்.
மரபுக் கதை:
இப்பிரிவின்
தோற்றம் பற்றி மரபுவழிக நிலவும் கதை பின்வறுமாறு; உள்நாட்டு சரக்கு வாணிபத்தில்
ஈடுபட்டிருந்த தமிழர்களான நகரத்தார்களுக்கும், ஏற்றுமதி,
இறக்குமதி வணிகத்தில் ஈடுபட்டுவந்த தெலுக்கர்களான பலிஜாக்களுக்கும்
இடையில் ஏற்பட்ட ஒரு தகறாறில் சோழ மன்னன் தலையிட்டு காஞ்சிபுரம் கோயிலில் சமாதானம்
செய்து வைத்ததாகவும், அப்போது ஒரு பிரிவினர் கடவுளின்
சன்னிதானத்துக்கு இடது புறமும் மற்றொரு பிரிவினர் வலது புறமும் நின்று அரசனின்
இடது, வலது கைகளில் இருந்து வெள்ளிலை, பாக்கு
பெற்றதாகவும், அன்றிலிருந்து அவர்கள் வலங்கையர் இடங்கையர்
என்று அழைக்கப்பட்டதாக மரபுக் கதை உண்டு
வரலாறு:
‘இடங்கை - வலங்கை’ப் போராட்டம் சோழர் காலத்தின் மையப் பகுதி என்று கருதப்படும்
11ஆம் நூற்றாண்டின் இறுதி - 12ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து 19ஆம்
நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலான சுமார் 900 ஆண்டுகள் இப்போராட்டம் கல்வெட்டுகளிலும்
பட்டயங்களிலும் தொடர்ந்து குறிக்கப்பட்டு வந்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்த
சாதிகள் இரண்டு அணிகளாகப் பிரிந்திருந்து நீண்ட காலங்களாகத் தங்களுள் பூசலிட்டு
வந்ததாக அக்குறிப்புகள் பேசுகிகின்றன. இடங்கை-வலங்கை போராட்டம் தொடக்க
காலம் எனபது கி.பி.பத்தாம் நூற்றாண்டு
என்பதை அறிய முடிகிறது.
பிராமணர்களின்
ஆதிக்கத்தை எதிர்த்த உழைக்கும் மக்களின்,
தமிழகத்தின் கீழ்தட்டு மக்களின் போராட்டமாக இடங்கை-வலங்கைப் போராட்டம் நடந்துள்ளதாக சான்றுபகருகின்றது.
'இடங்கை-வலங்கை சாதி வரலாறு ' எனும்
தலைப்பிட்ட கையெழுத்துச் சுவடி ஒன்று சென்னை பல்கலைக்கழக நூலகத்தின் பலன்சுவடிகள் பிரிவில்
காணப்படுகிறது! இச்சுவடியானது,இடங்கை-வலங்கை பிரிவுகளைச் சேர்ந்த, 98 சாதிகள் கரிகால சோழன் காலத்தில்
ஏற்பட்டன என்று கூறுகின்றது.
நடக்காத, நம்ப இயலாத கதைகளை, புராணங்களை,
உண்மையாக நடந்த வரலாறுகள் போலவும், நடந்த
உண்மையான வரலாற்றை, உண்மைகளை புராணங்கள், என்றும் திரித்து கூறுவதும்
பிராமணீயத்தின் செயல்பாடுகளில்
ஒன்றாக இருந்துவருகின்றது.
தென்னிந்திய
வரலாறு என்ற நூலின் ஆசிரியர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார் அவர்கள்,
"இடங்கை-வலங்கைப் பாகுபாடு
எவ்வாறு தொடங்கியது எனபது
மர்மமாக இருக்கிறது என்றும் பழைய
காலத்தில் இருந்தே இப்போராட்டம்
இருந்தது" எனவும் குறிப்பிடுகின்றார்.
இடங்கை-வலங்கைப்
போராட்டம் கி.பி.பத்தாம் நூற்றாண்டில், ஆதித்ய கரிகாலன்
காலத்தில், ஆதித்ய கரிகாலன் பிராமண அதிகாரிகளால்
கொல்லப்பட்டு, இயற்கை நீதிக்கு எதிராக, உத்தம சோழன்
அரசனாகப்பட்ட சூழ்நிலையில் தொடங்கியது
என்பது விளங்குகிறது. உத்தம சோழன் அரசன் ஆக்கப்பட்ட
முறையை எதிர்த்த, அதனை ஏற்க இயலாத, உழைக்கும் மக்கள், ஆதித்ய கரிகாலன் ஆதரவுப் படைகளுக்கும், உத்தம
சோழனின் ஆட்சியை ஏற்றுகொண்ட பிராமணர்கள்,
அவர்களது ஆதரவாளர்களுக்கும்
இடையில் ஏற்பட்ட மோதல்கள், போராட்டங்களே. இடங்கை-வலங்கைப்
போராட்டத்தின் தொடக்கம் எனபது இதனால் எளிதாக
விளங்குகின்றது இது உறுதிபடுத்தப்படாத தகவலாக உள்ளது.
கோயில்கள் அந்தணர்கள் என்னும் பிராமணர்களின்
கட்டுப்பாட்டில், ஆதிக்கத்தில் வந்துவிட்டப் பிறகு,
பிராமணர்கள் தங்களது ஆதிக்கம்,மற்றும்
தங்கள் இன நலத்தை தொடர்ந்து
தக்கவைத்துக் கொள்ள எண்ணி, பிற சமுதாயத்து மக்களை,
குறிப்பாக உழைக்கும்
கீழ்தட்டு மக்களை அடக்கி ஆளாவும், அடிமைப் படுத்தவும் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி வந்துள்ளனர்.
ஆதாவது பெரிய கோவில்களையும் தேவதானங்களையும் பிராமனர்களிடம் வயல்வெளிகளை
நிழக்கிழார் மற்றும் வேளாளர்களிடம் இழந்த வணிகர்களும் ஆசாரிமார்களும் பூசகர்
என்னும் அந்தஸ்தை அடைய இதர சிறு கோவில்களையும் வனிகதளங்களையும் கைப்பற்ற நடந்த இன
மோதலே இந்த வலங்கை இடங்கை சண்டை.
வலங்கை-இடங்கை
சண்டை என்பது போர்க்களம் கண்ட சண்டை கிடையாது தெருவிலே முட்டி மோதிக்கொண்ட செட்டியார்களும்
அவர்களுக்கு உட்பட்ட உழைக்கும் வர்க்கத்தினரும்
மற்றும் ஆசாரிகளும் அவர்களுக்கு உட்பட்ட
சமூகத்தவரும் கொண்ட மோதலே இந்த இடங்கை வலங்கை சண்டைஇது அன்றாடம் வேர்வை
சிந்தி உழைக்கும் மக்கள் தவறாக வழிகாட்டப்பட்டதால் வந்த விளைவு ஆகும்.
வலங்கை
இடங்கை பிரிவுகளின் தலைமை இடம் காஞ்சிபுரமாகும் இங்கேயே வலங்கை இடங்கை
கல்வெட்டுகளை அதிகம் காண முடிகின்றன. 1449
படைவீடு ராஜ்ஜியம்(சாம்புவராயன் ஆட்சியின் கல்வெட்டுகளிலே முதன்
முதலில் வலங்கை இடங்கை மகாஜன்ம என்ற
வாக்கியம் பதிவாகி இருந்தது. வலங்கை இடங்கை இந்த இருபிரிவினருக்கும் காஞ்சிபுரம்
காளியே முதன்மையான தெய்வமாக சொல்லப்படுகின்றது.
வலங்கை:
வலங்கை
இடங்கை சாதியர் என்போர் பிராமண-வெள்ளாளரின் எதிர்ப்பாளர்களாக இருந்தனர் எனவும்
இவர்கள் உழைக்கும் மக்கள் சாதியரான செட்டியார்கள் மற்றும் ஆசாரிமார்களும் ஆவர்.
செட்டியார்களை
தலைவனாக கொண்ட கூட்டத்தரும் உழைக்கும் இதர சாதியினரும்.(1)பட்டண செட்டி (2)
தேவாங்க செட்டி (4) குலால செட்டி (5) பறையர் (6) சேணயர் (7) இடையர்
(8) சாலியர் (9)) கோமுட்டி (10)
உப்பிலியன் (11)சாணான் (12) சுண்ணாம்புக்காரன் (13) வலையர் (12) அம்பட்டன் (13) வண்ணான் (14) வாணியன்
போன்ற உழைக்கும் மக்கள்.
இடங்கை:
இது
ஆசாரிமார்களை தலைவர்களாக கொண்ட கூட்டத்தினரான 1)பஞ்ச கம்மாளர் 2)பள்ளர்
3)கைக்கோளர் 4)மேளக்காரர் போன்ற
கூட்டத்தினர்கள்.
பிராமணர்கள்
தாங்கள் நினைத்த இடத்தை அடைந்த பின் கிராமங்களில் அன்றாடச் செயல்பாட்டில் தலையீடு
செய்தும், அதன்
செயல்முறைகளை தங்களுக்குச் சாதகமாக ஒழுங்கு படுத்தினர். கோயில்களிலும்,கோயில்களில் இருந்த கருவூலங்களையும்
தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்த
நிலையை பிராமணர்கள் அடைந்ததும், தங்களை
நிலச்சுவான்தார்கள் போல எண்ணிக்கொண்டு,அரசின் பெயராலும்
ஆலயத்தின் பெயராலும் கிராம மக்களிடம் இருந்து, நிலவரி,
வீட்டுவரி ஆகியவற்றைப்
பிரித்தனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் காணப்பட்ட
குடிமக்களை அரசின் பெயராலும்,சமயத்தின் பெயராலும் ஒடுக்க முற்பட்டனர். இவ்வாறு, ஒடுக்கப்பட்ட
மக்களை இடங்கையினர் என முத்திரைக்
குத்தினர்.
"முதலாம் குலோத்துங்கன் (கி.பி.1070-1120)
சோழ அரசனாக இருந்தபோது, கி.பி.1071
-யில் இடங்கை-வலங்கைப் போராட்டம் மிகக்கொடூரமாக
நடந்தது.பிராமணர்கள் தங்கிய சதுர்வேதி மங்கலத்தை மக்கள் தீகிரையாக்கியதாக
கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. பிராமணர்கள் ஆலயங்களைத் தவறான முறையில் தங்களுக்கு
சாதகமாகப் பயன்படுத்தியதால் சமூகத்தில்
விரிசல்கள் ஏற்பட்டன" (ஆதாரம்:தமிழக வரலாறு,டாக்டர்.அ தேவநேசன்)
நிலமைக் கட்டுக்கடங்காமல் போகவே, புறக்கணிக்கப்பட்ட
இடங்கைப் படையினர் சமயத்தின் பெயராலும், அரசின் பெயராலும்
ஏகபோக வாழ்க்கை வாழ்ந்த பிராமணர்களுக்கு
எதிராகக் கிளர்ச்சி செய்தனர். பிராமணர்களுக்குப் பாதுகாப்பு அளித்த ஆலயங்களை இடித்து தள்ளியதோடு, பண்டாரங்களையும்
(கருவூலங்களையும்) சூறையாடினர். நில உடமையை எதிர்த்த இவர்கள் வரி கட்ட மறுத்தனர்.
பிராமணர்கள் தங்கிய இடங்களும் நிர்மூலமாக்கப் பட்டன." என்று வலங்கை-இடங்கைப் போராட்டம் குறித்து
டாக்டர்.அ.தேவநேசன் தனது 'தமிழக வரலாறு' நூலில் (பக்கம்-266,267) கூறுகிறார்.
முடிவுரை:
- Ø வாணியர்களும் செட்டியார்களும் ஒர் கூட்டத்தினர் அல்லது அங்கத்தினர் என்பது புலனாகின்றது.
- Ø நடந்த அன்பிற்பிரியாள் , தங்கம்மை தாயம்மை கதைகள் சில இடங்களில் திரித்து கூறப்பட்டுள்ளன.
- Ø சமணர்கள் சைவர்களால் கொலையுண்டதாலும், சித்திரவதை செய்யப்பட்டதாலும் சமணம் வளர்த்த செட்டியார்கள் சைவ மதத்தை தழுவியுள்ளனர்.
- Ø இன்று வாணிய செட்டியார்கள் வணங்கும் சாஸ்தா(ஐயனார்) சாத்தன் என்ற பெயரின் திரிபே.
- Ø சாத்தன் வணிக செட்டியார்களின் முன்னோர்களின் பெயர்களில் உள்ளதையும் காணலாம்.
- Ø அன்று ஒற்றை கூட்டமாக இருந்த இந்தச்சமூகம் இன்று பல பிரிவுகளாக பிரிந்துள்ளனர்.