கண்ணகி வழிபாடு
நோக்கம்:
- கண்ணகி தொடர்பான பல உண்மைச் செய்திகளை தொகுத்தளித்தல்.
- இலக்கியம் சாராத செய்திகளைத் திரட்டுதல்
- தமிழகத்தில் இன்றைய கண்ணகி வழிபாடு பற்றி கூறுதல்
- இந்து மதம் கண்ணகியை பெயர் மாற்றம் செய்தது பற்றி கூறுதல்
- இந்து மதம் கண்ணகி பற்றி தவறாக புனைந்த கட்டுகதை பற்றி கூறுதல்
- கண்ணகிவழி பாட்டினை மறுத்தவர்கள் பற்றி கூறுதல்.
- இலங்கையில் கண்ணகி வழிபாடு பற்றி கூறுதல்.
- கண்ணகி வழிபாடும், மரபும் அழிக்கப்பட்டதற்கான அரசியல் பின்புலங்களைத் தொகுத்தல்.
முன்னுரை:
வாணிக குலத் தோன்றலாகவும், செட்டியார் இனத்
தோன்றலாகவும், குல முன்னோராகவும் பத்தினித் தெய்வமாகவும் வணங்கப்
பெற்றுவரும் கண்ணகியினைப் பற்றியே இக்கட்டுரை விவரிக்கின்றது. சங்க காலத்துக்கு முன்னரே கண்ணகி கோவலன் வரலாறு நிகழ்ந்துவிட்டதனை சங்க இலக்கியங்கள்
உறுதிப்படுத்துகின்றன. எட்டுத்தொகையிலும், பத்துப்பாட்டிலும், ஐம்பெரும் காப்பியங்களிலும் கண்ணகி
பற்றிய செய்திகள் விரவிக் கிடக்கின்றன. கண்ணகி வரலாறு எழுதப்பட்டது
கி.மு ஐந்தாம் நூற்றாண்டுக்கும், கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலம் ஆகும்.
அக்காலமே ஆசிவகமும் சமணமும் புத்தமும் தழைத்தோங்கிய காலமாகும்.
செவி வழிக் கதையாய் கூறப்பட்டு வந்த கண்ணகி கதை இளங்கோவடிகளால்
ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டன அஃது சிலப்பதிகாரம் எனப்பட்டது. இளங்கோவடிகள் சமணர் ஆவார். செவி வழிக்கதையை அப்படியே
பதிவு செய்தவர் புகழேந்திப்புலவர் ஆவார். அவர் தன் பதிவுக்கு
இட்ட பெயர் கோவிலன் கதை ஆகும். வரந்தரு காதை, கண்ணகி கதை போன்றவை கண்ணகி நிகழ்வினை பதிவு செய்த இலக்கியங்கள் ஆகும். ஒருவரின் முற்பிறவியின் நல்வினைகள்,
தீவினைகள், அடுத்த பிறவியிலும் அவ்வினைகளும் தொடரும்
என்ற கருத்தினையே இக்கதைகள் வலியுறுத்துகின்றது. அஃதே ஊழ் வினை உருத்து
வந்து ஊட்டும் எனப்பட்டது. இஃது சமணத்திற்க்கு உரிய கோட்பாடு
ஆகும்.தமிழ் பண்பாட்டுக்கும், தமிழர் தம் தாய்மரபிற்க்கும் உரியன.
சிலப்பதிகார காப்பியம்
தோன்றிய காலம்:
சிலம்பினால் விளைந்த கதை தோன்றிய காலத்தினை அறுதியிட
இயலாததால் பல கருத்துக்கள் காணக் கிடைக்கின்றன. அவற்றை கீழே காண்போம்.
சிலப்பதிகாரம்
குறித்த கர்ண பரம்பரைக் கதைகள்:
இக்காப்பியத்தைப்
பற்றி தெரிந்து கொள்ளவில்லையாயினும் இதன் கதை பல நூற்றாண்டுகளாக தமிழ் மக்களிடையே
அறிந்துகொள்ளப்பட்ட ஒன்றாகவே இருந்தது. இலங்கை தீவிலும், கொச்சி முதலிய
பிரதேசங்களிலும் இக்கண்ணகி கதை பலவாறாகத் திரிந்து வழங்கி வந்தது. சாதாரணக் கல்வி
உடைய பலரும் அம்மானை வடிவத்தில் அமைந்த இக்கதையை மனனம் செய்து இரவில் பலரும்
கேட்கும்படி சொல்லி வந்துள்ளனர். வில்லுப்பாட்டாகவும் இக்கதை வழங்கி வந்துள்ளது.
மேலும் கோவா நகரத்தில் மேரி ஃப்ரெரீ(MARY FRERE) என்பவர் '
தக்காணத்து பண்டை நாட்கள்' (Old Deccan Days) என்ற
ஆங்கிலக் கதைத் தொகுதியொன்றினை 1868 -ல் வெளியிட்டுள்ளார்.
இதில் 'சந்திரா பழி வாங்கியது' என்ற
தலைப்பில் கோவலன் கதை காட்சியளிக்கிறது. ஏடுகளில் காணும் அம்மானையைப் புகழேந்திப்
புலவர் இயற்றியது என்பாரும் உளர்.
மேலும் திருவிதாங்கூர் பகுதியில் கிடைத்த கோவலன்
சரித்திரம் என்ற பிரதியில் அரங்கேற்றுக் காதை முதலிய தலைப்புகளோடு
சிலப்பதிகாரத்துடன் நெருங்கிய தொடர்புடன் காணப்படுகிறது. இதன் கதாநாயகி கண்ணகி
காளியின் அம்சம் என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டிருக்கிறது. கொடுங்கோளூர்
பகவதி அம்மன் 'ஒற்றை முலைச்சி'
என்ற பெயருடன் விளங்குகிறாள்.மேலும் தாசியின் தொழில் பற்றி
கண்ணகிக்கு முற்றிலும் மாறுபட்ட இயல்புடன் மாதவி படைக்கப்பட்டுள்ளாள்.
உரையாசிரியர்கள்
காட்டும் மேற்கோள்கள்
1650 க்கு முன்புவரை கற்றோர்க்கு மாத்திரம் தெரிந்ததாக இந்நூலானது விளங்கியது.
14 ஆம் நூற்றாண்டில் நச்சினார்க்கினியர் இந்நூலைத் தமது
தொல்காப்பிய உரையில் பல இடங்களில் மேற்கோள் காட்டியுள்ளார். மேலும் 14 ஆம் நூற்றாண்டினரான பரிமேலழகரும், மயிலைநாதரும்
இக்காப்பியப் பகுதிகளை பல இடங்களில் ஆண்டுள்ளனர். மேலும் அதே நூற்றாண்டில் வாழ்ந்த
பேராசியரும் தனது களவியலுரை யில் இந்நூலை ஆண்டிருக்கிறார். இக்காலத்திலே தான்
ஐம்பெருங்காப்பியங்கள் என்ற வழக்கு தோன்றி விட்டது என்பதனை நன்னூலால் அறியலாம். 11-
ஆம் நூற்றாண்டில் இக்காப்பியம் அறிஞர்களுக்குள்ளே பெருவழக்காய்
இருந்தது என்பதனை யாப்பருங்கல விருத்தியுரையாலும் தொல்காப்பிய உரையாலும் அறியலாம்.
இதற்கு முன்பாக 10- ஆம் நூற்றாண்டளவில் எழுந்த
களவியலுரையிலும் இந்நூலை மேற்கோள் காட்டியுள்ளார்கள்.
தொன்மை:
நச்சினார்க்கினியார்
தமது தொல்காப்பியச் செய்யுளியல் உரையில் (237)
தொன்மை என்பதை 'உரைவிராஅயப் பழமையாகிய
கதைப் பொருளாகச் சொல்லப்படுவது' என விளக்கி உதாரணங்களாக
பெருந்தேவனார் பாரதம், தகடூர் யாத்திரை, சிலப்பதிகாரம் என்ற மூன்றனையும் தருகிறார். எனவே பழமையாகிய கதையை
உட்கொண்டே சிலப்பதிகாரம் இயற்றப்பட்டது என விளங்குகிறது.
நற்றிணையில்
கண்ணகி
மேலும்
நற்றிணைப் பாடல் (216) ஒன்று திருமாவுண்ணி என்பவள் தன்மீது அன்பற்றுத் துறந்து தனக்கு அயலான்
போலாகிவிட்ட காதலனைப் பற்றிக் கவலை கொண்டு வருந்தினாள் எனவும், பின் தனது ஒருமுலையைத் திருகியெறிந்து வேங்கைமரத்தின் கீழ் நின்றாளெனவும்
குறிக்கிறது. நற்றிணையிலும் சிலப்பதிகாரத்திலும் உள்ள இந்தச் செய்திகள் கண்ணகி
வரலாறு சங்ககாலத்துக்கு முன் நிகழ்ந்த ஒன்று எனபதை மெய்ப்பிக்கின்றன.
யாப்பருங்கலத்தில்
கண்ணகி
யாப்பருங்கல
விருத்தியில் (பக் 351) ஒருத்தி தன் கணவன் கொலையுண்டு கிடந்த நிலைகண்டு பாடியதாக ஒரு வெண்பா
காணப்படுகிறது. இது பத்தினிச் செய்யுள் என உரையாசிரியர் குறிப்பிட்டுள்ளார். எனவே சிலப்பதிகாரம்
தோன்றியதற்கு முன்பே கண்ணகி வரலாறு தோன்றி வளர்ந்து தமிழகம் முழுதும் பரவியது என
அறியலாம்.
இளங்கோவும்
சாத்தனாரும்
மேற்கண்ட
கூற்றுகளால் இளங்கோவடிகள் தன் காலத்தில் நிகழ்ந்த உண்மைச் செய்திகளை அவர்
காவியமாக அமைக்கவில்லை என்பது வெளிப்படை. சேரன் செங்குட்டுவனுக்கு இளங்கோ
என்றொரு தம்பி இருந்ததாகப் புலப்படவில்லை. சேரர்தம் வரலாறு கூறும் பதிற்றுப்பத்து
நூலில் உள்ள ஐந்தாம் பத்து சேரன் செங்குட்டுவனைப் பற்றியது. இவனுக்குத் தம்பி
ஒருவன் உண்டென்ற வரலாறு அந்நூலில் இல்லை. மணிமேகலையிலும் இது காணப்படவில்லை. எனவே
இளங்கோவடிகள் சேரர் பரம்பரையில் மிகவும் பிற்காலத்தே தோன்றியவராக இருக்கலாம்.
தொகை
நூல்கள் ஒன்றிலேனும் இவரது செய்யுள் காணப்படாமையாலும் இவர் கடைச் சங்கத்துப்
புலவர் அல்லர் என்பது தெளிவு. இவரோடு சமகாலத்தவரான மதுரைக் கூலவாணிகன்
சாத்தனார் என்பவர்,
கடைச் சங்கப் புலவரான சீத்தலைச் சாத்தனாரின் வேறானவர். சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும்
சீத்தலைச் சாத்தன் என்ற பெயர்வழக்கு காணப்படாமை இம்முடிவினை வலியுறுத்தும். அரும்பத
உரைக்காரரும், அடியார்க்கு நல்லாரும்
சிலப்பதிகாரத்தைக் கேட்டவர் சீத்தலைச் சாத்தன் எனக் கூறவில்லை. பேராசிரியர் உரையில் தான் இருவரும் ஒன்றெனக் கூறப்பட்டுள்ளது.(தொல்-செய்-240 உரை)
இளங்கோவும்
சீத்தலை சாத்தனாரும் வெவ்வேறு காலம் :
'ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள் பட்டிமண்டபத்து பாங்கறிந்து ஏறுமின்
பற்றாமாக்கள் தம்முடன் ஆயினும் செற்றமும் கலாமும் செய்யாது அகலுமின்'. (அதேகாதை 60-63) அதாவது , பல்வேறு
சமயங்களை சாரந்தவர்கள் பட்டிமண்டபத்தில் விவாதம் செய்யும்பொழுது மற்றவருடைய
சமயக்கருத்தை ஏற்க முடியவில்லையென்றால் பகைமையும் பூசலும் கொள்ளாதீர் என்று
கூறப்படுகிறது .ஆனால் மதக்காழ்ப்புணர்ச்சி மிகுந்த சாத்தனாரும் இளங்கோவும்
பதிகங்கள் கூறுவது போல் நண்பர்களாக இருந்திருக்க முடியுமா? சாத்தனார்
சமணர்களை தாழ்த்தியும் தாக்கியும் தரக்குறைவாகவும் பேசுகிறார் இளங்கோவடிகள் பிற
தெய்வ வழிபாட்டை தாக்காதவர் .இதன் மூலம் இவர்கள் இருவரும் சமகாலத்தில் வாழாதவர்கள்
என்பது தின்னம்.
மணிமேகலையில்
கோவலன் கதை
மணிமேகலையில்
28-ஆம்
காதை(103 முதலிய வரிகள்) சேரன் செங்குட்டுவனது தந்தையாகிய
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கு உற்ற தோழனாய்க் கோவலன் என்பான் ஒருவன் இருந்தனன்
என்றும், அவன் மரபில் ஒன்பது தலைமுறைக்குப் பிற்பட்டுத்
தோன்றிய வேறொரு கோவலனே சிலப்பதிகாரத்தின் கதா நாயகன் என்று கூறுகிறது. எனவே
மணிமேகலை இயற்றிய சாத்தனார், காலத்தால் பிற்பட்டவர் என்பது
தெளிவு. மேலும் 'கோவலனும் கண்ணகியும் புத்ததேவன்
கபிலவஸ்துவில் அவதரித்துச் செய்யும் தருமோபதேசத்தைக் கேட்டு வீடுபேறு அடைவார்கள்'
என்று மாசாத்துவன் கூறியதாகச் சாத்தனார் மணிமேகலையில்
குறிப்பிட்டுள்ளார். எனில் புத்தன் தோன்றுவதற்கு முற்பட்ட காலத்திலேயே கோவலன்
முதலியோர் வாழ்ந்தனர் என்பது இவர் கொண்ட கதையாகும். இது முன்பின் முரணாகும். எனவே சாத்தனார்
சங்ககாலப் புலவர் எனக் கொள்வது பிழையாகும்.
இளங்கோவடிகளும்
கூலவாணிகனும் பிற்காலத்தவரேயாவர். இவர்கள் தம் காலத்து வழங்கிய கர்ண பரம்பரைக் கதைகளைக்
கொண்டே தம் காப்பியங்களைப் படைத்தார்கள் என்பது தெளிவு.
சிலப்பதிகாரம்
காலம் கி.மு 3 ஆம் நூற்றாண்டு:
சங்க
கால புலவர் மாமூலனார் கி.மு 4 ஆம் நாற்றாண்டில் மகத்தை ஆண்ட நந்த வம்சம் பற்றியும் ,பிறகு அவர்களை போரில் வென்ற மௌரியரின் தமிழக படையெடுப்பு பற்றியும்
பாடியுள்ளார் . அப்போரில் பல தமிழ் சிற்றரசர்கள் பங்கெடுத்தாலும் சோழன்
இளஞ்சேட்செண்ணியே மௌரியர்ளை போரில் வென்று பெரும் பேர் பெற்றதாக சங்க கால பாடல்கள்
கூறுகிறது. மாமூலனார் சேர அரசர்கள் உதியஞ்சேரலாதனையும் பிறகு அரசாண்ட இமயம் நெடும்
சேரலாதனையும் பாடியுள்ளார் . போரில் நெடுஞ்சேரலாதனை வென்ற கரிகாலனையும்
பாடியுள்ளார். கரிகாலனை விட சில ஆண்டுகள் முதியோனாக பாண்டியன் நெடுஞ்செழியனும்
கரிகாலனை விட சிறியவனாக சேரன் செங்குட்டுவனும் வாழ்ந்ததாக சங்க கால பாடல்கள் மூலம்
தெரிகிறது. இவர்கள் மூவரைப்பற்றி கூறுவதாலும் சிலப்பதிகாரம் உருவான காலம் கி.மு
3 ஆம் நூற்றாண்டின் மத்தியில் எழுதப்பட்டது என்பது
மிகச்சரியாக பொருந்தி வருகிறது.
வரந்தரு
காதையில்:
"மறத்துறை முடித்த வாய்வாள் தானையொரு பொங்கரும் பரப்பின் கடற்பிறக்கு ஓட்டி
கங்கைப் பேர்யாற்றுக்கரை போகிய செங்குட்டுவனோடு ஒரு பரிசு நோக்கிக் கிடந்த வஞ்சிக்
காண்டம் முற்றிற்று" என்று சிலப்பதிகார கதை செங்குட்டுவன் கதையோடு முற்றிற்று
என்று கூறிய பின்னர் நூற் கட்டுரையில் "மணிமேகலை
மேல் உரைபொருள் முற்றிய சிலப்பதிகாரம் முற்றும்" என சொல்வது பொருளற்றது.எனவே
இவையிரண்டும் வெவ்வேறு காலத்தில் எழுதப்பட்டவைகள்.
சிலப்பதிகாரக்
காலம் கி.பி. 2- ஆம் நூற்றாண்டு என்ற கருத்து:
சிலப்பதிகாரம்
சங்க காலத்தில் தோன்றியது என்பர்.கடைச் சங்க காலத்திலேயே சிலம்பும் மணிமேகலையும்
இரட்டைக் காப்பியங்கள் எனப் பாராட்டப்பட்டுள்ளன. மேலும் பல்லவர்களைப் பற்றி
சிலப்பதிகாரம் எதனையும் கூறவில்லையாதலால் இந்நூல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டினைச்
சார்ந்தது என்பர். சிலம்பும் மணி மேகலையும் பல இடங்களில் கச்சியைப்(காஞ்சி)
பற்றிக் குறிப்பிட்டாலும் பல்லவ வேந்தர்கள் ஒருவரையும் ஒரு இடத்தில் கூட
குறிக்கவில்லை. பல்லவர் பிராகிருத மொழியில் வெளியிட்ட ஆதி ஆணை வெளியீடுகள்
மயிடவோலு, ஹீரகடஹள்ளி,
பிரித்தானியப் பொருட்காட்சி சாலை ஆகிய இடங்களில் இன்னும் உள்ளன.
இந்தியக் கல்வெட்டுத்தொகுதியிலும் இவை இடம் பெற்றுள்ளன. இவை கி. பி. 200-250.
ஆண்டில் வெளியிடப்பட்டிருத்தல் வேண்டும் என்பர். பல்லவர்கள்
காஞ்சியில் குடிபுகும் முன் அப்பகுதி சோழர்தம் வட எல்லைப் பகுதியாக அமைந்ததோடு,
சோழர் பிரதிநிதிகளுக்கும் தலைநகரமாக இருந்திருந்தது என்பதை சங்க
நூல்களின் வாயிலாக அறியலாம்.
சிலப்பதிகாரக்
காலத்தில் காஞ்சியில் சோழர் பிரதிநிதியாக இருந்தவன் தொண்டைமான் இளந்திரையன்
என்பவன். இவனே கடியலூர் உருத்திரங்கண்ணனாரால் பெரும்பாணாற்றுப் படை என்ற நூலில்
பாடப்பட்டவனாவான். பல்லவர் குடியேரும் முன் காஞ்சியில் வாழ்ந்த திரையர்க்கு
இவ்விளந்திரையனே தலைவன். இத்திரையர்கள் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சோழர்களுக்கு
அடங்கி வாழ்ந்தவர் ஆவார்கள். காஞ்சியைக் குறிப்பிட்ட சிலப்பதிகாரம் எந்த வகையிலும்
பல்லவ மன்னர்களைக் குறிப்பிடவில்லை. இதனால் சிலப்பதிகாரம் இயற்றப்பட்ட
காலத்திற்குப் பின்னரே பல்லவர்கள் காஞ்சியில் குடியேறி இருக்க வேண்டும். இதனால்
சிலப்பதிகாரம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது எனக் கூறுகின்றனர்.
சேரன்
செங்குட்டுவன் காலம்
சேரன்
செங்குட்டுவனின் மனைவி வேண்மாள் என சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது. இவளை இளங்கோ
வேண்மாள் என்பதும் பொருந்தும். பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்தில் செங்குட்டுவனுக்கு
குட்டுவன் சேரல் என்ற மகன் இருந்தான் எனவும் அம்மகன் சங்கப்புலவருள் ஒருவரான
பரணருக்கு பிற பரிசில்களோடு ஒரு பரிசிலாகக் கொடுக்கப்படான் எனவும் அறியலாகிறது. அக
நானூற்றில் அறியலாகும் சேரன் செங்குட்டுவனின் தந்தையான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் இறந்திருக்க வேண்டும். இமய
வரம்பனுக்கு இரு தேவியரும் நான்கு பிள்ளைகளும் இருந்தனர். அவர்களுள் ஒருவனான
செங்குட்டுவனே இமயவரம்பனுக்குப் பின் அரசக்கட்டிலேறினான். உடன் பிறந்தவரான
இளங்கோவடிகள் துறவு பூண்டார். எஞ்சிய இரு புதல்வருள் ஒருவனான நார்முடிச்சேரல்
நன்றாக் குன்றத்தின் அருகில் உள்ள கொங்கு நாட்டின் வட பகுதியை ஆண்டு வந்தான்.
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் குட்ட நாட்டுக்கு அரசனானான். இவர்கள் இருவரும் வஞ்சியைத்
தலைநகராகக் கொண்ட சேரன் செங்குட்டுவன் ஆணைவழி ஆட்சி புரிந்தனர்.
சேரன்
செங்குட்டுவன் காலம் சான்றுகளுடன் :
கரிகாலச்சோழன்
இமயம் நெடுஞ்சேரலாதனை போரில் வென்ற பிறகு சேர நாட்டின் அரசனாக வருபவர் சேரன்
செங்குட்டுவன் .அதாவது கரிகாலன் நெடுஞ்சேரலானுக்கு இளையவனாகவும் சேரன்
செங்குட்டுவனுக்கு முதியோனாகவும் வருகிறான். சிலப்பதிகாரத்தில் கரிகாலனை காவிரி
ஆற்றோடு சேர்த்து பாடுகிறார் இளங்கோ .அதாவது கரிகாலன் கல்லனையை கட்டின பிறகே
பாடப்படுகிறான் மேலும் வட ஆரியரை வென்றது பற்றியும் பாடப்படுகிறான் . பாண்டியன்
நெடுஞ்செழியனும் இறந்த பிறகே பாடப்பட்டது என்பதாலும் சேரன் செங்குட்டுவனும்
அக்காலத்தில் வாழ்ந்ததாலும் அதாவது இம்மூவேந்தர்களின் வயதான காலத்தில்
எழுதப்பட்ட சிலப்பதிகாரம் கி.மு 3 ஆம் நூற்றாண்டின் மத்தியில் எழுதப்பட்டது என்பதே பொருத்தமான சான்றாகும்
கயவாகு காலம்
இலங்கை
வேந்தன் கயவாகு பத்தினிக் கடவுள் பிரதிட்டிக்கப்பட்ட காலத்தில் வஞ்சியில் உடன்
இருந்தான் என சிலம்பு கூறுகிறது. கயவாகு கி.பி. 114- ஆம் ஆண்டு பட்டத்திற்கு வந்தவன். அவன்
அரசுக் கட்டில் ஏறிய பிறகே இலங்கையை விட்டு தமிழகம் வந்திருக்க வேண்டும். ஆயிரம்
ஆண்டுகள் இடையீடு பட்டவர்களாக மகாவம்சத்தில் கூறும் கயவாகுக்களுள் முதல்கயவாகுவே
வரந்தரு காதையில் கூறிய இலங்கை வேந்தன் எனவும் அவ்வேந்தனே செங்குட்டுவனால்
பத்தினிக் கடவுட்காக எடுக்கப்பட்ட விழாவில் கலந்து கொண்டான் எனவும் கூறுகின்றனர்.
டாக்டர். வில்ஹெம்கெய்கர் என்னும் அறிஞர் தான் மொழிபெயர்த்த மஹாவமிசத்தின்
முகவுரையில் இலங்கை வேந்தர் அடுத்தடுத்து ஆண்ட காலங்களையும் அவர்தம் பெயர்களையும்
புத்தராண்டிலும் கிறித்துவ ஆண்டிலும் குறிப்பிட்டுள்ளார். அவர் காட்டிய இலங்கைத்
தொல்வேந்தருள் கி. பி. 114-136 ஆம் ஆண்டு வரையில் ஆட்சி
புரிந்த நாற்பத்தாறாம் வேந்தன் என கயவாகுவைக் குறித்துள்ளார். இவனே சிலப்பதிகாரம்
கூறிய கயவாகு எனும் பெயரிய இலங்கை வேந்தனாவான்.இதனால் சிலப்பதிகாரக் காலம் கி.
பி. இரண்டாம் நூற்றாண்டு எனலாம்.
சிலப்பதிகாரம்
கயவாகுவின் காலம் கிடையாது :
வரந்தருகாதையில்
கண்ணகியின் உறவினர்கள் வந்து கண்ணகியை வழிபச்டுகின்றனர்.ஆரிய அரசர்கள், குடகுக்கொங்கர்,
மாளவ வேந்தர் ,இலங்கை அரசன் கயவாகு போன்றோர்
கண்ணகி விழாவில் கலந்து கொள்ள அழைக்கப்படுகின்றனர். ஆனால் இலங்கை அரசர் கயவாகு
தவிர மற்ற அரசர்கள் சேரன் செங்குட்டுவனோடு போரிட்டதற்கு சங்க கால பாடல்கள்
இருக்கின்றன. அவர்கள் செங்குட்டுவன் காலத்தில் வாழ்ந்த மற்ற தமிழ் அரசர்களுடன்
போர் புரிந்த சங்க கால பாடல்கள் உள்ளன. ஆனால் எவ்விடத்திலும் இலங்கை அரசர்
கயவாகுவோடு சேரன் போரிட்டதற்கோ ,மற்ற தமிழ் அரசர்கள் போரிட்டதற்கோ
சான்றுகள் இல்லை. அதாவது கி.பி 2 ஆம் நூற்றாண்டில் கயவாகு
காலத்தில் வாழந்த புலவரால் இடைச்செறுகளாக கயவாகுவின் பெயரும் மற்ற மூன்று
அரசர்களோடு சேர்க்கப்பட்டுள்ளது.. இவ்வாறு இருக்கையில் கயவாகுவின் காலம்தான் சேரன்
செங்குட்டுவன் காலம் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. அவ்வாறு ஏற்றுக்கொண்டால்
மௌரிய தமிழக படையெடுப்பு பற்றி கூறிய மாமூலனார் ,ஊன் பொதி
பசுங்குடையார் ,கள்ளில் ஆத்திரையனார் போன்றோரின் பாடல்கள்
பொய்யாகிவிடும். மேலும் அசோகரின் கல்வெட்டில் உள்ள மூவேந்தரை பற்றிய குறிப்பும்
மாறுபடும். மேலும் 'புலன் அழுக்கற்ற அந்தனாளன்' என புகழப்பட்ட கபிலரும். கபிலரால் பாடப்பட்ட வேளிர்குள மன்னன்
(இருங்கோவேளின்) தலைமுறை கணக்கும் தவறாகிறது. இதன் மூலம் சிலப்பதிகாரத்தின்
காலம் கி.மு 3 ஆம் நூற்றாண்டின் மத்தியப்பகுதி என
தெரிய வருகிறது.
சிலப்பதிகாரக்
காலம் கி.பி. 8-ஆம் நூற்றாண்டு (வானியல் கணிப்பு)
கோவலனும்
கண்னகியும் காவிரிப்பூம்பட்டினத்தை விட்டுப் புறப்பட்ட காலம் பற்றியும், மதுரை எரியுண்ட காலம்
பற்றியும் வரும் சோதிடக் குறிப்புகள் கொண்டு நோக்கின் கி. பி. 756 ஆகிய ஓராண்டே நன்கு பொருந்தும் என்பது திவான் பகதூர்
சுவாமிக்கண்ணுப்பிள்ளை அவர்கள் கருத்து ( An Indian Ephemeris, VoL-1,pt-1,
app.iii) இதனால் சிலப்பதிகாரம் கி.பி. 8-ஆம்
நூற்றாண்டில் தோன்றியது எனபது கருத்து.
சிலப்பதிகார
காலத்தை வானியல் நெறியில் கணித்த நெறி துல்லியமாயினும், அவர் கொண்ட பாடத்தில்
பிழை நேர வாய்ப்பு உண்டு. மேலும் அக்காலப் பல்லவர்கள் பற்றிய கருத்து இரட்டைக்
காப்பியங்களில் இல்லை. எனவே ஒப்புமை வரலாற்றோடு பொருத்திக் கணிக்கப்பட்ட
கயவாகு மன்னனின் கி. பி. 117 கண்ணகிக்குக் கல்
நட்ட காலம் என்றும், அடுத்த வாழ்நாள் காலம் மணிமேகலை காலம்
என்றும், இளங்கோவின் சிலப்பதிகாரமும், சாத்தனாரின்
மணிமேகலையும் கி. பி. 150-250 கால இடைவெளியில் தோன்றியவை
என்றும் தெளிவாக உணரமுடிகிறது.
வாணியல்
கணக்கெடுப்பு சரியே சான்றுடன் :
சிலப்பதிகாரத்தின்
உண்மை காலத்தை கணிப்பதற்கு திவான் பகதூர் சுவாமிக்கண்ணுப்பிள்ளை அவர்களின் வாணியல்
கணக்கு உதவி செய்துள்ளது . ஆம்,
உதாரணத்திற்கு, வாணியல் கணக்கின மூலம் ஒருவர்
கி.மு 3000 ல் பிறந்தார் என்று கொண்டால் அதே வாணியல் கணக்கு
கி.மு 2000 கும் பொருந்தும் என்றே வல்லுனர்கள் கூறுகின்றனர்.
அதாவது 1000 வருட இடைவெளியில் ஒரே வாணியல் கணக்கே. ஏற்கனவே
சிலப்பதிகாரத்தின் காலம் கி.மு 3 ஆம் நூற்றாண்டின் மத்திய
பகுதி(கி.மு 250) என கூறியிருந்தோம். சுவாமிக்கண்ணுப் பிள்ளை
அவர்களின் வாணியல் கணக்கு கி.பி 750. மாமூலனார் காலத்தின்
மூலம் சிலப்பதிகாரத்தின் காலம் கி.மு 250. ஆம் 250+750=1000 வருடம். ஆக வாணியல் கணக்கின் மூலம் கணிக்கப்பட்டதில்
சுவாமிக்கண்ணுப்பிள்ளை 1000 வருடம் குறைவாக
மதிப்பிட்டுள்ளார். 1000 வருட இடைவெளியில் ஒரே வாணியல்
கணக்கே வரும் என்றே கூறியுள்ளனர். இதன் மூலமும் சிலப்பதிகாரத்தின் காலம் கி.மு 3 ஆம் நூற்றாண்டின் மத்தியபகுதி என தெளிவாக தெரிகிறது. இவ்வாறு பல சான்றுகளுடன் சிலப்பதிகாரத்தின் உண்மைக் காலம்
கணிக்கப்பட்டுள்ளது. (கி.மு 3 ஆம் நூற்றாண்டு).
சிலப்பதிகாரம்
சங்க நூல் அன்று என்ற கருத்து
சிலப்பதிகார
நூலில் பரத நாட்டியக் கருத்துக்கள் மிகுதியாக வந்துள்ளன.. மயமதம், கரவடநூல் முதலிய வட
நூல்களும் ஆளப்படுகின்றன. வடமொழிப் பஞ்ச தந்திரத்தின் ஒரு கதையும் (கீரிப்பிள்ளையைக் கொன்ற பிராமணியைக் குறித்தது இக்கதை. இவளுக்கு கோவலன்
பொருளளித்து, தானம் செய்து, இவளைக்
கணவனுடன் கூட்டி நல்வழிப்படுத்தினானம்) ஒரு சுலோகமும் குறிக்கப்பட்டுள்ளது. மேலும்
இந்நூலில் நான்மணிக்கடிகை, பழமொழி, ஆசாரக்கோவை
முதலிய கீழ்க்கணக்கு நூல்கள் எடுத்தாளப்படுகின்றன.
இலக்கணம்
இந்நூலில்
முன்னிலைப்பன்மையாகைய 'நீர்' என்ற சொல்லும் தன்மையொருமையாகிய ' நான்' என்ற சொல்லும் (செங்குட்டுவற்குக் கண்ணகி
கூற்று; தேவந்தி சொல்; காவற்பெண்டு
சொல்; அடித்தோழி சொல்)இந்த என்ற சுட்டுச் சொல்லும்; அறிகுவன், போக்குவன், உறுவன்
என எதிர்காலத்துத் தன்மையொருமையில் வரும் அன் விகுதி முதலிய பிற்காலத்து
வழக்குகளும் வந்துள்ளன. அன் ஈறு தமது காலத்து வழக்கென இளம்பூரனார்
குறிப்பிடுகிறார்.
பிற்காலப்
பெயர்கள்
சிலப்பதிகாரத்தில்
வங்க தேசத்தினரை பங்களர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது பிற்காலப் பெயராகும்.
மேலும் பக்கம், வாரம், திதி முதலியனவும், திரையல்,
அடைக்காய் முதலிய பிற்காலத்து நுகர்ச்சிப் பொருள்களும்
கூறப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் நோக்குங்கால் சிலப்பதிகாரம் சங்க நூல் அன்று
என்பது உறுதியாகிறது என்பர். இந்நூலின் கண் மிகுதியாக ஆளப்படுகின்ற வடமொழிச்
சொற்களும் இக்கருத்தையே வலியுறுத்துகின்றன.
"சினவரன்
தேவன் சிவகதி நாயகன்
பரமன் குணவதன்
பரத்திலொளியோன்
தத்துவன்
சாதுவன் சாரணன் காரணன்...
சங்கரன் ஈசன்
சயம்பு சதுமுகன்
அங்கம் பயந்தோன்
அருகன் அருண்முனி" ( சிலம்பு.10.180-187)
என வரும் அடிகள்
இவற்றை உணர்த்தும். சங்க கால நூல்களில் இவை போன்ற சொற்கள் வரும் என நினைக்கவும்
கூடவில்லை.
தமிழிலக்கிய
வரலாறு
சங்க
காலத்துச் செய்யுள்கள் தனித் தனியாகத் தோன்றிப் பின்னர் தொகையாகவும் பாட்டாகவும்
தொகுக்கப்பட்டன. அதன் பின்னர் நாட்டிலே ஜைன சமயம், வைதீகச் சமயம் என்ற இருவகைக் கிளர்ச்சிகள்
தோன்றின. இக்காலத்தே பதினென் கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றலாயின. பக்தி
இலக்கியங்களும் எழுந்தன. வடமொழியும் தமிழும் கலந்து உறவாடின. இதன் பயனாய் காவிய
காலம் தோன்றியது. உதயணன் பெருங்கதை, மணிமேகலை, சிந்தாமணி முதலியன இக்காலப் பகுதியில் தோன்றியனவே. இம்மூன்றிலும்
காப்பியம் என்ற சொல் பயின்று வந்துள்ளது. பொதுவாக இலக்கிய வரலாற்றில் ஒரு காலத்தே
எழுந்த நூல்கள் அமைப்பு-நெறியில் ஒரு தன்மையவாய் அமைதல் இயற்கையாகும். ஆகவே,
சிலப்பதிகாரமும் இப்பிற்காலப்பகுதியைச் சார்ந்தது என்றே ஊகிக்கலாம்.
ஊழ்வினை
நம்பிக்கைகள்
ஒழுக்கத்தை
வற்புறுத்தி வந்த ஜைன சமயத்தினர் நாளடைவில் சமயத் தத்துவங்களை பாராட்ட
ஆரம்பித்தனர். அவற்றுள் கருமம் பற்றிய கொள்கைகளை ஆழ்ந்து நூல் எழுதத் தொடங்கினர்.
வடநாட்டிற் பிறந்த ஜாதகக் கதைகளை முன்மாதிரியாகக் கொண்டு நூல்
அமையலாயிற்று.முற்பிறவியில் நிகழ்ந்த கருமங்களின் விளைவே அடுத்த பிறவியின்
நிகழ்ச்சிகளாகும் என்ற கொள்கை தமிழகத்தில் சம்பந்தர் போன்றோர் காலத்திற்குப் பிறகு
நுட்பமாகச் செய்யப்பட்டன. சிலப்பதிகார வரலாறும் இந்நெறியைப் பின்பற்றுகிறது.
ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பதூஉம்'
எனப் பதிகத்தில் குறிப்பிடுவதோடு.
வினை விளை
காலமாதலின் யாவதும்
சினையலர்
வேம்பன் தேரா னாகி ( XVI.
148-149)
எனவும்
உம்மை வினைவந்
துருத்த காலைச்
செம்மையிலோர்க்குச்
செய்தவம் உதவாது (XXIII..171-172)
எனவும் வினையின்
இயல்பை வற்புறுத்திக் கூறுதல் காணலாம். மேலும் கோவலன் முதலியவர்களது துன்ப
நுகர்ச்சிக்குக் காரணமாக ,
அவர்களது முற்பிறப்பு வரலாறு கூறப்படுகிறது. இவ்வகைப் பிறப்பு
வரலாறுகள் சங்க காலத்து வழஙகியவனவாகத் தெரியவில்லை. இதனை நோக்குமிடத்தும் இது சங்க
கால நூல் இல்லை என்பது தெளிவு.
பத்தினி
வழிபாடு
இந்நூல்
பத்தினிக் கடவுள் வழிபாடு தமிழ் நாட்டிலும் பிற நாடுகளிலும் ஏற்பட்டிருக்க
வேண்டும். இறுதியிலுள்ள வஞ்சிக்காண்டம் முழுவதும் பத்தினி வழிபாட்டையே தலைமைப்
பொருளாகக் கொண்டுள்ளது. இப்பத்தினி வழிபாடு எப்பொழுது தோன்றியது என்பதற்கு
சான்றுகள் இல்லை. ஆனால் சங்க காலத்திலோ ஆழ்வார்கள் நாயன்மார்கள் காலத்திலோ கூட
சான்று காணப்படவில்லை. ஆனால் சக்தி வழிபாடும் அவை பற்றிய நூல்களும் தோன்றிய காலம்
கி. பி. 500
முதல் 900 வரை என்பர். (An Outline of the Religious
Literature or India. O.U.P) இதனை நோக்கினும் சிலப்பதிகாரம் சங்க
நூலன்று எனலாம்.
சமுதாய நிலை
சிலப்பதிகாரதில்
விளங்கும் நாட்டிய நிலையும்,
இசையின் நிலையும், கணிகையர் நிலையும் பிறவும்
இக்காலத்துச் சமுதாயம் நாகரீகச் சுழற்சியில் மூழ்கி மகிழ்ச்சியில்
திளைத்திருந்தமையைத் தெரிவிக்கின்றன. இவைகளுக்கும் சங்க காலத்துச் சமுதாயத்தில்
புலப்படும் எளிமை, நேர்மை, வீரம்,
காதல் முதலியவற்றுக்கும் வெகு தூரம். எனவே, சங்க
இலக்கிய காலத்திற்குப் பிற்பட்ட சமய, சமுதாய நிலையுமே
சிலப்பதிகாரத்தில் வெளிப்படுகின்றன எனலாம்.
சிலப்பதிகார காப்பிய
காலம் பற்றி நாம் அறிய வருவன:
- செவிவழிச் செய்தியாய் அல்லது கர்ண பரம்பரைக் கதையாய் வழங்கப்பட்ட கண்ணகி கதையானது, இளங்கோவடிகள், சாத்தனார், புகழேந்தி புலவர்களால் தொகுக்கப்பட்டது.
- விவழிச் செய்தி அம்மானைப் பாடலாகவும், வில்லுப்பாடலாகவும் வழங்கி வந்தமையை அறியலாம்.
- கொடுங்களூர் பகவதி அம்மன் கோவில் கண்ணகி கோயிலே.
- தொல்காப்பியச் செய்யுளியல் உரையில் (237) தொன்மை என்பதை 'உரைவிராஅயப்பழமையாகிய கதைப் பொருளாகச் சொல்லப்படுவது' என்பதன் மூலம் இஃது கடைச்சங்க காலத்துக்கு முன் நிகழ்ந்தமையை அறியலாம்.
- நற்றினை மூலம் கண்ணகி வரலாறு சங்ககாலத்துக்கு முன் நிகழ்ந்த ஒன்று எனபதை மெய்ப்பிக்கின்றன.
- யாப்பருங்கலம் மூலம் சிலப்பதிகார காப்பியம் தோன்றியதற்கு முன்பே கண்ணகி வரலாறு தோன்றி வளர்ந்து தமிழகம் முழுதும் பரவியது என அறியலாம்.
- இளங்கோவடிகள் தன் காலத்தில் நிகழ்ந்த உண்மைச் செய்திகளை அவர் காவியமாக அமைக்கவில்லை மாறாக செவி வழிச் செய்தியினையே காப்பியமாய் படைத்துள்ளார்.
- சாத்தனாரும், இளங்கோவடிகளும் சம காலத்தவர் இல்லை
- இளங்கோவடிகளும் கூலவாணிகனும் பிற்காலத்தவரேயாவர். இவர்கள் தம் காலத்து வழங்கிய கர்ண பரம்பரைக் கதைகளைக் கொண்டே தம் காப்பியங்களைப் படைத்தார்கள் என்பது தெளிவு.
- கி. பி. 117 கண்ணகிக்குக் கல் நட்ட காலம் ஆகும்.
- சிலப்பதிகாரம் சங்க நூல் அன்று.
- சங்க இலக்கிய காலத்திற்குப் பிற்பட்ட சமய, சமுதாய நிலையுமே சிலப்பதிகாரத்தில் வெளிப்படுகின்றன.
பெயர் விளக்கம்:
கண்ணகி:
கண்ணகி
கண்களால் நகுபவள் எனப் பொருள்ப்படும்
கள்+நகி= கண்ணகி
கள் =
மது, மயக்கம் தருவது,
நகி =
புன்னகை செய்பவள் (பெண்பால் விகுதியை குறித்தது)
மயக்கம் தரும் புன்னகையை
உடையவள் எனப் பொருளாம்
கோவலன்:
கோவிலில் வீற்றிருப்போன்
பொருள்ப்படும்.
கோவலன்=கோ+இல்+அன்= கோயிலன், கோவிலன் =கோவலன்
கோ= அரசன், இறைவன்
இல்= இருக்கும் இடம் அல்லது வீடு
அன்= முற்று விகுதி.
இதிலிருந்து கோவிலன்
என அழைக்கபட்டதே மருவி கோவலன் என்றானது என்பதனை அறியலாம். கோவலன் என்றால் இறைவனை வலம் வருபவன் என பொருள்ப்படும்
மாதவி:
மா+த்+அ+வ்+இ=மாதவி
மா= மிகப்பெரிய
தவ= தவம்
இ= பெண்பால்
விகுதி
மாதவம் இயற்றி பெறப்பட்ட குழவி
என பொருள்ப்படும். அல்லது மாதவம் செய்த பெண் என பொருள்படும்.
(வெளிநாட்டிலிருந்து மாதவி தமிழகம்
வந்து ஆடல் தொழில் புரிந்ததாய் கருத்தும் உண்டு.)
மாநாய்கன்:
பெரிய நாவாய் மற்றும்
கலங்களை தன்னிடம் கொண்டவன் என பொருள்படும்
மா= மிகப்பெரிய
நாய்= நாவாய் என்பதன் மருவிய வடிவம்.
கன்= விகுதி, தன்னிடம் கொண்டவன் என பொருள்ப்படும்
மாசாத்துவன்:
மிகப்பெரிய சாத்து
வணிகம் செய்ததால் மாசாத்துவான் எனப்பட்டான்.
சாத்து வணிகம் என்பது எண்ணற்ற மாட்டு வண்டிகளில் பயணம் செய்து வணிகம்
செய்வோர்களின் தலைவன் என பொருளாகும்
மா= மிகப்பெரிய
சாத்து= சாத்து வணிகத்தை குறித்தது..
அன்= விகுதி, தன்னிடம் கொண்டவன் என பொருள்ப்படும்
திருமாவுண்ணி
கண்ணகி
போல் இருக்கவேண்டிய தலைவி தன்னிடம் சினம் கொள்கிறாளே என்று பரத்தை ஒருத்தி
அங்கலாய்த்துக் கொள்கிறாள். அவள் கண்ணகி முலையை அறுத்து மதுரையை எரித்த செய்தியை
நினைவுகூர்கிறாள். கண்ணகியை அவள் திருமாவுண்ணி என்று குறிப்பிடுகிறாள். அழகால்
திருமகளைத் தின்றவள் என்பது இத்தொடருக்குப் பொருள். திருமா = திருமகள்
ஒரு முலை அறுத்த திருமாவுண்ணிக்
கேட்டோர் அனையராயினும்,
வேட்டோர் அல்லது, பிறர் இன்னாரே (நற்றிணை 216 அடி 9-11)
கேட்டோர் அனையராயினும்,
வேட்டோர் அல்லது, பிறர் இன்னாரே (நற்றிணை 216 அடி 9-11)
(கண்ணகி வேறு திருமாவுண்ணி வேறு என்ற கருத்தும் நிலவுகின்றது.)
சிலப்பதிகாரத்தின் பெருமை:
சிலப்பதிகாரத்தின் பெருமை:
இலக்கிய மரபினை உடைத்த முதல் நூல் சிலப்பதிகாரம் ஆகும். அனைத்து ஏடுகளிலும் முதற்பாடல்
இறைவாழ்த்தாக அமையும், இக்காப்பியத்தில் மட்டும் இறைவாழ்த்து
பாடாது இயற்கை வாழ்த்து பாடப்பெற்றது. தமிழகத்தின் ஐம்பெரும்
காப்பியங்களுள் முதன்மையானது இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம். சிலம்பு மற்றும்
அதிகாரம் இணைந்து சிலப்பதிகாரமாய் ஆனது. சிலம்பினால் உண்டான கதை ஆதலால்
சிலப்பதிகாரம் என பெயர்வைக்கப்பட்டது. மற்ற நூல்களை போல் கடவுள்களை வாழ்த்தாமல்
கோவலன், கண்ணகி
போன்ற சாதாரண மனிதர்களை வைத்து பாடப்பட்டதால் இது குடிமக்கள் காப்பியம் என்றும்
அழைக்கப்படுகிறது.
கண்ணகி நடந்த
வழி ஆய்வு:
கண்ணகி கோயிலைக்
கண்டு பிடித்து, இவ்வுலகிற்கு அறிவித்தப் பெருமைக்கு
உரியவர் பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களாவார். கண்ணகியின் அடிச்சுவட்டில், கண்ணகி பயணித்த பாதை வழியே பயணித்து, பதினேழு ஆண்டுகள் நடந்து, கண்ணகி கோயிலைக்
கண்டு பிடித்த ஆய்வாளர் இவர் ஒருவரே. பேராசிரியர்
சி.கோவிந்தராசனார் அவர்கள், தஞ்சாவூர், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், கரந்தைப் புலவர் கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிந்தவர்.
சிலப்பதிகாரத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டதன் பயனால், 1945 ஆம் ஆண்டு, மயிலாடுதுறை என்று, இன்று அழைக்கப்பெறுகின்ற, மாயுரம்
சென்றார்.மாயுரம் முழுதும் வாடகை மிதிவண்டியில் சுற்றி வந்து, விசாரித்த போது, காவிரிப் பூம்பட்டிணம் எங்கிருக்கிறது என்று
யாருக்குமே தெரியவில்லை. பலமுறை முயன்று, கடற்கரையில் மீனவர்களின் ஒரு சில
குடிசைகளுடன், மணற் பரப்பும், மணல் மேடுகளும், கள்ளியுடன் காரைச் சூரைச் செடிகளும்,
செறிந்த புதர்களும், சவுக்குத் தோப்புகளும், புனங்காடுகளும் சூழ்ந்திருந்த பட்டணம் என்று அழைக்கப்பட்ட பகுதியே,
பண்டைய புகார் நகரம் இருந்த இடம் என்பதைக்
கண்டு பிடித்தார்.
அங்கிருந்த மீனவர்களின் துணையோடு, கட்டுமரத்தில் ஏறி, கடலில் பயணித்தார். கடல் ஆழமின்றி
இருந்ததைக் கண்டார். கடலில் மூழ்கி, மூச்சை அடக்கிக்
கொண்டு, கடலுள் பயணிக்கும் பயிற்சி பெற்றிருந்த
முழுக்காளிகள் சிலரை, கடலினுள் மூழ்கச் செய்து, கடலடி ஆய்வு செய்தார். கடலில் மூழ்கிய மீனவர்கள் பழமையான செங்கற் பகுதிகள், சுண்ணாம்புக் காரைகள், பாசி படிந்த
பானை ஓடுகள் என பலவற்றை எடுத்து வந்து தந்தனர்.
இவ்வாராய்ச்சியின் பயனாக, கடற்கோளினால் அழிந்து கடலடியில் மறைந்து நிற்கும், நிலப் பரப்பே காவிரிப் பூம்பட்டிணம், கண்ணகி பிறந்த இடம் என்பதை உறுதி செய்தார்.
1945 ஆம் ஆண்டில் பூம்புகாரில் ஆய்வினைத்
தொடங்கி, கால் நடையாகவே ஆராய்ந்தவாறு, நடந்த மதுரை வரை செல்வதற்கே, பன்னிரெண்டு ஆண்டுகள் தேவைப்பட்டன.
திருப்பரங்குன்றம் செல்லும் சாலையில்,
பழங்காலத்தில், இடுகாடாக இருந்த கோவலன் திடல் என்ற பகுதியினையும், செல்லத்தம்மன் கோயிலில் இருந்த, கண்ணகி சிலையினையும் கண்டு பிடித்தார். பிறகு மதுரையில் கோவலனை இழந்த
கண்ணகி, சேரநாடு நோக்கிச் சென்ற வழியில்,
இளங்கோ அடிகள் தந்த குறிப்புகளின் உதவியுடன்
நடக்கத் தொடங்கினார். வையை ஆறானது, சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டுள்ள, பாதை வழியாகவே, தடம் மாறாமல்
இன்றும் பயணிப்பதைக் கண்டு கொண்டார்.
சிலப்பதிகார வழிகளின் படி, மதுரையில இருந்து, வையை ஆற்றின் தென் கரையை பின் பற்றி
நடந்தார். சுமார் 40 மைலகளுக்கும் மேல் பயணித்த, சுருளி மலைத் தொடரை அடைந்தார். மேல் சுருளி மலையை அடைந்து ஆராயத்
தொடங்கினார். சுருளி மலைதான் நெடுவேள் குன்றம் என்பதை உறுதிசெய்தார்.
சித்தன் இருப்பு என்ற பெயருடன் விளங்கிய மலை, ஆவினன் குடியாகி, பின்னர் பொதினி மலையாக மாறி, தொடர்ந்து அதுவும் திரிந்து பழநி மலை என்று ஆனது போலவே, நெடுவேள் குன்றம் என்னும் பெயர், மலையில் இருந்து சுருண்டு விழும், அருவியின் பெயரால் சுருளிமலையாக மாறியிருக்க வேண்டும் என்பதை
உணர்ந்தார்.
சுருளி மலைத்தொடராலும், பழநி மலைத்தொடராலும் இணைந்து முப்புறமும் சுவர் வைத்தாற்போல்
சூழப்பட்ட பகுதியில், வருச நாடு எனப்படும், கம்பம் பள்ளத்தாக்கின் காட்டுப்
பிரதேசம் பரந்து விரிந்து கிடக்கிறது. வருச நாட்டின் மலை அடிவாரப் பகுதிகளை ஆராய்ந்த பேராசிரியர்
சி.கோவிந்தராசனார், கீழக் கூடலூருக்குத் தெற்கே உள்ள கோயிலில் கல் வெட்டு ஒன்றினைக் கண்டுபிடித்தார்.
கி.பி.14 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த கல்வெட்டு அது. மங்கல தேவி அம்மன்
பூசைக்கு, சேர மன்னன் ஒருவன், தானமாக வழங்கிய நிலங்களைப் பற்றிய செய்தி, அக்கல்வெட்டில் பொறிக்கப் பட்டிருந்தது. கண்ணகிக்கு அடைக்கலம் தந்த பொழுது, அவளுக்கு உரிய சிறப்புப் பெயரில் ஒன்றான, மங்கல மடந்தை என்னும் பெயரை, கவுந்தி அடிகள், இடையர் குல
மகளான மாதரியிடம் கூறும் காட்சி, இவருக்கு
நினைவிற்கு வந்தது.
1963 ஆம் ஆண்டு
நவம்பர் 17 ஆம் நாள், மங்கல தேவி மலையின் மேற்பரப்பிற்குச் சென்றார். கோரைப் புற்காடு
எட்டடி உயரத்தற்கு வளர்ந்து மண்டிக் கிடந்தது. 200அடி
பக்கமுள்ளதாகவும், ஓரளவு சதுரமாக உள்ளதுமாகிய கோட்டத்தைக்
கண்டார். கருங்கற்கள் அடுக்கிய நிலையில், யானைகள் உள்ளே
வராத வகையில் மதிற்சுவர் அமைந்திருந்தது. உட்பகுதி முழுவதும் புதர் மண்டிக்
கிடந்தது.
செடி கொடிகளால் சூழப்பட்டு சிதைந்த நிலையில்
நிற்கும் கற்படைக் கோயில்கள் நான்கு ஆங்காங்கே இருந்தன. இரண்டு கோயில்கள்
சிறியதாகவும், அழகுடனும் காட்சியளித்தன. இக்கோயிலின் உட்பகுதி வேரும், விழுதும், தழை மடிசல்களும், மழை நீரும் நிறைந்து, இடிபாடுகளுடன் இடிந்து கிடந்தது. கோட்டத்தின் கிழக்குப் பகுதியில் ஓர்
அழகானப் படிக்கட்டு. அதற்கு முன்னர் அரைகுறையாகக் கட்டப்பட்டு குத்துக் கற்களுடன்
நிற்கும் வாயில், கோட்டத்திற்கு வெளியே சிறு சுனை. சுனையினைச் சூழ்ந்து, அடர்ந்த இருண்டு நிற்கும் காட்டு வேங்கை மரங்கள். மிகப் பழமையோடு
கூடியதும், பலி பீடத்துடன் உள்ளதுமாகிய மூன்றாவது
கோயிலின் அருகினில் சென்றார்.
உள்ளே சுமார் இரண்டடி உயர அளவில், ஒரே கல்லில், இரண்டு கைகளுடன், இடது காலை பீடத்தில் மடக்கி, வலத காலை ஊன்றிய
நிலையில், ஒரு பெண்ணின் சிலை. அப்பெண்ணின்
தலையில் கிரீடம் இல்லை. விரிந்த கூந்தல். இடதுபுற மார்பு சிறிதாக இருந்தது. பல நூற்றாண்டுகளாக, இச்சிலை வழிபாட்டிற்கு உரியதாக இருந்துள்ளது என்பதனை, சிலையில் இருந்த வழவழப்பான தேய்வு புலப்படுத்தியது.
இவ்வாறாக பதினேழு ஆண்டு கால அயரா
உழைப்பிற்குப் பின், தேடலுக்குப் பின், பேராசிரியர் சி.கோவிந்தராசனார், கண்ணகி சிலையினையும், கண்ணகி கோயிலையும் கண்டு பிடித்தார்.
கோவை நன்னெறிக் கழகத்தின் சார்பில், 21.3.1965 அன்று சிலம்புச் செல்வர் மா.பொ.சிவஞானம் அவர்கள் தலைமையில்
நடைபெற்றக் கூட்டத்தில், பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள்,
முதல் முதலில் கண்ணகி சிலையினைக் கண்டு
பிடித்தது பற்றிய செய்தியை உலகிற்குத் தெரியப் படுத்தினார். இரண்டாவது உலகத்
தமிழ் மாநாட்டின் போது, தனது கண்டுபிடிப்பு பற்றி, சிறிய ஆங்கில நூல் ஒன்றினையும் வெளியிட்டார். அன்றைய தமிழக முதல்வர் அவர்கள், இளங்கோவடிகள் சிலைத்திறப்பு விழாவின்போது, பேராசிரியர் சி.கோவிந்தராசனாரின் கண்டுபிடிப்பு பற்றி, தமிழ் உலகிற்கு அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்.
மதுரையில் கண்ணகி
வழிபாடு
ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு
பெருங் குடியில் பிறந்து ஏற்றம் பெற்ற கண்ணகி “நாண் இழந்ததும்” நாடு புகழும் சிறப்பைப் பெற்றதும் மதுரையில் தான். ஏதிலியாக வந்த ஒரு பெண்ணால்
செங்கோலையும் வீழ்த்த முடியும். நீதியையும் நிலை நாட்ட முடியும் என்பதைக்
காட்டுவது கண்ணகி வாழ்வுதான். செல்லத்தம்மன் கோயிலென்றும் செப்பப் படுகிற செல்லியம்மன் கோயிலே
கண்ணகி கோயிலென வழங்கப்படுவதை பலபேர் அறிய மாட்டார்கள்.
ஆற்றுக்கால், கொடுங்கல்லூர், பாலக்காடு, மண்டைக்காடு பகவதிகளாக
கேரளத்திலும்,
கண்ணகை
அம்மனெனத் தமிழ் ஈழத்திலும் பத்தினித் தெய்யோ எனச் சிங்களவராலும், மாஸதி எனக் கர்நாடகத்திலும்
அழைக்கப்படுகிற கண்ணகிதான், தமிழகத்தில் வெற்றிவேலம்மன், வட்டப் பாறையம்மன், செல்லத்தம்மன், மதுர காளியம்மன், வஞ்சியம்மன், கண்ணாத்தாள், கொப்புடையம்மன், மங்கலதேவி, வீரமாத்தி என்று பலபட
அழைக்கப்படுகிறாள்.
தெருவுக்குத் தெரு கோவில் கொண்டு
மக்களைக் காப்பவளாகவும், நோய் நொடிகளைப் போக்குகிற மக்கள் டாக்டர்களாகவும் அழைக்கப் படுகிற
மாரியம்மன்தான் கண்ணகியின் மறு பெயரிலான வடிவம் என்பதைச் சான்றோர்கள் ஆய்வு
நூல்களிலும் மேடைக் கருத்தரங்குகளிலும் மேன்மைப்படுத்தியுள்ளனர்.
ஆடி மாதம் வெள்ளிக்கிழமையன்றுதான்
கண்ணகி ஆவேசமுடன் வஞ்சினம் கூறி மதுரையைச் சாம்பலாக்கினாள் எனச் சாத்திரம்
பேசுகிறது. ஆடிமாத வெள்ளிக்கிழமைகளில் தாய்த்
தெய்வ ஆலயங்களில் இன்றளவும், கூழ் வார்த்தல், இளநீர் சொரிதல், பானகம் படைத்தல், பச்சரிசி மாவினால் விளக்கு ஏற்றுதல் எனும் மாவிளக்கு ஏற்றுதல்
ஆகியவைகளால் குளிர்ச்சிப்படுத்தப் படுகின்றன.
.5-ஆம் நூற்றாண்டில் ஆடிமாதம்
வெள்ளிக்கிழமையில் பாண்டியன் இழைத்த தீங்கினால் மதுரையில் மழைவளம் குன்றி மாரி
பொய்த்தது. அம்மை முதலிய வெப்பு நோய்கள் பல்கிப் பெருகின. அரசன் நெடுஞ்செழியன்
இழைத்த அநீதியே இதற்குக் காரணம் என மக்கள் நம்பினர்.
மதுரையில் இச்செயல் நடந்து
பாண்டிய நெடுஞ்செழியன் மரணமடைந்தபோது அவன் தம்பியும் அடுத்த இளவரசனுமான வெற்றிவேற்
செழியன் கொற்கையில் முகாமிட்டிருந்தான். அவன் மதுரைக்கு விரைந்து வந்து ஆட்சிப்
பொறுப் பேற்று நடந்ததை விசாரணை செய்து காரணமான பொற்கொல்லனையும் அவனது பரிவாரங்களான
ஆயிரம் பேர்களையும் தூக்கிலிட்டான். கண்ணகிக்கு நடுகல் எடுத்து வழிபாடு செய்தான்
என்றும் கூறுகின்றனர்.
ஈழத்து மன்னன் கயவாகு கண்ணகி
வழிபாடு செய்தவன். இலங்கையில் கண்ணகி கண்ணகையம்மனாகக் காட்டப்படுகிறாள். பாண்டியன்
அவைக்கு கண்ணகி சென்றபோது வேப்பந் தழையும், சிலம்பும் ஏந்திச் சென்றாள் என ஈழக் கதை கூறுகிறது. வேப்பிலை
மாரியம்மன் பொருட்களில் ஒன்றெனக் கூறுகின்றனர்.
சிலப்பதிகாரம் உரை பெறுகாதையில்
கண்ணகியை மாரியும் இவளோ?
காளியும்
ஆவாளோ? என மக்கள் வியந்ததாகக் கூறப்
படுகிறது. சிலப்பதிகார நிகழ்விற்குப் பின்
தமிழகத்தின் பல பகுதிகளிலும் இலங்கை, கேரளப் பகுதிகளிலும் கண்ணகிக்கு என வழிபாட்டுக் கோயில்கள் எழுப்பப்
பட்டன. ஆதியில் கண்ணகிக்கு நடுகல்
வழிபாடே (நடுகல்காதை) செய்யப்பட்டதாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. நடுகல் வழிபாடே
அன்று தெய்வ வழிபாடாக இருந்தது.
பின்னர் மண்ணாலும் கற்களாலும்
கோவில்கள் எழுப்பப்பட்டன. மனித நிலையி லிருந்து தெய்வ நிலைக்கு ஏற்றம் பெற்றதால்
சிலை வடிவம் செய்யப்பட்டது. இதனால் கண்ணகி கோயிலும் படிமமும் ஏற்பட்டு நடுகல் மரபு
ஆகம மரபுப்படி
சிலைமரபுக் கோயிலானதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.
ஒரு முலை எறிந்த திருமா பத்தினி என்பதற் கேற்ப கண்ணகியை ஒற்றை முலைச்சியம்மன் என்று கூறினர். “முத்தார மார்பின் முலைமுகம் திருகினாள்” என்பது சிலப்பதிகாரம். இதனால் திருநெல்வேலிப் பகுதியில் வழங்கப்படும் முத்தாரம்மன், ஒற்றை முலைச்சியம்மன் என்று கண்ணகி வழிபடப்படுகின்றாள்.
ஒரு முலை எறிந்த திருமா பத்தினி என்பதற் கேற்ப கண்ணகியை ஒற்றை முலைச்சியம்மன் என்று கூறினர். “முத்தார மார்பின் முலைமுகம் திருகினாள்” என்பது சிலப்பதிகாரம். இதனால் திருநெல்வேலிப் பகுதியில் வழங்கப்படும் முத்தாரம்மன், ஒற்றை முலைச்சியம்மன் என்று கண்ணகி வழிபடப்படுகின்றாள்.
பெண் தெய்வங்களைக் கொற்றவை, பிடாரி என்பர். பூவாடைக்காரி
என்ற பெயரும் கண்ணகிக்கு உண்டு. மண்ணுலக வாழ்வில் அமங்கலமாக இருந் தாலும்
இறுதியில் மங்கலதேவி மலையில் இவளை மாலையிட்டு கோவலன் விண்ணுலகுக்குக் கூட்டிப்
போனான் என்பதால் இப்பெயர் வந்தது என்பர். சிலப்பதிகாரத்தில் கண்ணகி தன்
தாலியைக் கழற்றினாள் என்ற செய்தி எங்கும் இல்லை. மாறாக மாதவியே மங்கலநாண்
களைந்தாள் என்றும் கூறுவர். பின்னால் கோயில் வழிபாடுகளில் தமிழ் மரபுப்படியான பண்டாரங்களும், பூhசரிகளும் நடத்தி வந்த வழிபாடுகளில் மெல்ல
மெல்ல நுழைந்த பார்ப்பனரால் ஆரிய நாகரீகம் நுழைந்து நிலைமை மாறியது.
தமிழனின் மாரி, காளி, பிடாரி, கண்ணகி கோயில்களை துர்க்கை
கோயில்களாக மாற்றம் பெறச் செய்தனர். வேறுபாடுகளைக் காட்டு வதற்காக காலடியில்
மகிஷாசூரன்,
எருமைத்தலை, சிம்மவாகினி என்று இடைச்செருகல்
செய்தனர். சிலம்புக்குப் பதிலாக சூலாயுதம் வந்தது. இன்றுள்ள துர்க்கை, திரௌபதி கோவில் களெல்லாம் ஒரு
காலத்தில் தமிழ்த் தெய்வ மரபுப் படி கண்ணகி வழிபாடாக இருந்தது என்பது தொன்ம
வரலாறு. பேச்சி,
ராக்காயி, மகமாயி போல இவர்களும்
வழங்கப்பட்டனர்.
மதுரைக்குள் நுழைந்தபோது
கவுந்திஅடிகள் மாதரி என்னும் இடைக்குல மங்கையிடம்தான் கண்ணகியை ஒப்படைத்துச்
சென்றார் என்கிறது சிலப்பதிகாரம். கண்ணகி தன் ஒரு மார்பை பிய்த்து
எறிந்து மதுரையை எரித்தபின் ஆங்காரத்தோடு அமர்ந்த இடமே இன்றைய வடக்கு மாசி வீதி. இடது மார்பில் ரத்தத்தோடும்
கண்களில் சினத்தோடும் உடல் நடுங்க அமர்ந்திருந்த கண்ணகியை இடைக்குல மங்கையர்
ஆறுதல் படுத்தினர்.
ஒரு பெண் கண்ணகி மார்பில்
வெண்ணெயை எடுத்துப் பூசினாள் . வெண்ணெய் உருகி எரிச்சல் குறைந்த கண்ணகியின்
மார்பின் மீது பறையர் குலப் பெண் ஒருத்தி தனது முந்தானையால் விசிறி பின்
கிழித்துக் கட்டினாள். இதன் பிறகு இளநீர், பானகம்,
மாவுப்
பொருள்களை பருகவும்,
உண்ணவும்
கொடுத்தனர்.
இதனால் மனமும் உடலும் குளிர்ந்த
கண்ணகி இடையர்குலப் பெண்களைப் பார்த்து “எனது நெருப்பால் எந்தத் தெரு வெந்தாலும் இடைச் சேரி வேகாது” என்றும் பறையர் குலப் பெண்ணிடம் ‘பார் மதுரை எரிந்தாலும் பறையர்
தெரு எரியாது’
என்றும்
கூறி வாழ்த்தியதாக செவிவழிக் கதைகள் கூறுகின்றன.
கண்ணகியின் வாழ்க்கை அக்காலத்தில் பல இடங்களிலும் பரவிப் பேசப்பட்டும் வியந்து போற்றப்பட்டும் வந்ததாகக் கூறுகின்றனர்.
கண்ணகியின் வாழ்க்கை அக்காலத்தில் பல இடங்களிலும் பரவிப் பேசப்பட்டும் வியந்து போற்றப்பட்டும் வந்ததாகக் கூறுகின்றனர்.
பாண்டியன் அரசவையில் கண்ணகி
சூரியனைச் சாட்சியாக வைத்து வஞ்சினம் கூறியதுபோல் இன்றும் பாமர மக்கள் கோபத்திலும்
மனச் சங்கடத்திலும் எதிர்பாலரைப் பேசும்போது ‘சூரியபகவானே;
நீ தான்
கேக்கணும்’
என்று கூறி
வானை நோக்கிப் பேசுவதை நாம் பார்க்கிறோம் கண்ணகி தலைவிரி கோலமாக வலம் வந்ததால்
பெண்கள் தலையை விரித்துப் போடுவதை அமங்கலமாகக் கருதினர்.
பல இடங்களில் கண்ணகிக்கு எழுப்பிய
கோயில்களில் கண்ணகியின் படிமம் ஒரு முலை இல்லாத நிலையிலேயே அமைக்கப்பட்டு ஒற்றை
முலைச்சியம்மன் என்று அழைக்கப்பட்டு வணங்கப்பட்டது.
ஆனால் பின்னர் வந்தவர்கள் ஒரு
சிலை என்பது எல்லா உறுப்புக்களோடும் அமைய வேண்டும். இவ்வாறு இடது மார்பு இல்லாமல்
அங்கஹீனமாக இருப்பதால் இதனை வைக்கக் கூடாது. “அங்க சிதைவு ஆகம மரபு ஆகாது” என்று கூறியதால் இச்சிலைகள்
அகற்றப்பட்டு வேறு சிலைகள் இடம்பெற்றன.
கண்ணகி சிலைகளெல்லாம் காணாமல்
போனது இப்படித்தான். அலுவலகம் போகும் வழியில் கண்ணகி சிலை இருப்பதால் ஆபத்து.
அபசகுனம் என்று கடற்கரை கண்ணகி சிலையும் இப்படித்தான் அகற்றப்பட்டது. பாண்டியன்
முதல் இன்று வரை அதிகாரவர்க்கத்திற்கு கண்ணகி என்றாலே அச்சம் தரும் பெண்தான்
போலும்.
சிலப்பதிகாரத்தில் மதுரையின்
வாழ்வு முறைகள் சிறப்பாகக் காட்டப்படுகின்றன. மதுரையின் முதல் கண்ணகி சிலை
கோவிலில் இடம் பெற்று உள்ளது என்பது பெருமைக்குரிய செய்தி. தெய்வ மாகவும் புசனைகள்
தினமும் செய்யப்படுகின்றன.
மதுரையின் வடக்கு மாசி வீதிக்கும்
வடக்கு வெளி வீதிக்கும் இடைப்பட்ட செல்லத்தம்மன் கோவில் பகுதி மக்கள் நடமாட்ட
மிக்கது. இங்கு உள்ள செக்குகளில் ஆட்டப்படும் நல்லெண் ணெயை வாங்க காலை முதலே
செக்கடிகளில் நின்று எண்ணெயும், எள்ளுப் பிண்ணாக்கும் வாங்கிச்
செல்ல இன்றும் வரிசை உண்டு. எள் பிண்ணாக்கு தின்னுவதற்கு ருசியானதாகும்.
பழ மரபு இப்பகுதியை இடைச்சேரி
என்கிறது. இன்றும் மதுரையின் யாதவர்கள் இங்குதான் வசிக்கின்றனர். இப்பகுதியில்
தான் மதுரையை முன்பின் அறியாத கவுந்தி அடிகள் கண்ணகியை நம்பிக்கையோடு ஒப்படைத்தார்
என்பதிலிருந்தே இம்மக்களின் வாழ்வு நலம் புரியும்.
கண்ணகியை இங்குள்ள முதிய இடைக்குல
மக்கள் செல்லமாகப் பாதுகாத்தனர். எங்கள் செல்லத்தம்மனே என்றனர். சிறிய பெண்ணாக
இருந்ததால் செல்லம் கொஞ்சிப் பாராட்டினர். இப்பகுதியில் வடக்கு நோக்கிய ஒரு கோவில்
மரங்களின் நிழலோடு அமைந்துள்ளது. இக்கோவில் நான்கு புறமும் உயரமான மதில்களோடு அமைந்துள்ளது.
சாலையிலிருந்து கோவிலை நோக்கி
உள்ளே செல்லுகையில் பரந்த வெளி உள்ளது. இதன் நடுவே கோவில் உள்ளது. வடபுறம்
கோவிலில் இருந்து 100
அடி
துரத்தில் சிம்மச் சிலை உள்ளது. இதனால் இப்பகுதிக்கு சிம்மக்கல் எனப் பெயர்
உள்ளது. செல்லத்தம்மனை திருவிளையாடற் புராணம் வடக்கு வாச்செல்வி என்று கூறுகிறது.
கோவிலின் உள்ளே கொடி மரம், பலி பீடத்தோடு சிம்மம் ஒன்றும்
கருவறையை நோக்கி உள்ளது. இதன் முன் பேச்சியம்மன் உருவம் உள்ளது. முன் மண்டபம்
தாண்டி மகாமண்டபம் அமைந்துள்ளது. அர்த்த மண்டபமாக ஒரு சிறிய நீளப்பாதை தாண்டி
செல்லத்தம்மன் சிலை அமர்ந்த கோலத்தில் உள்ளது. சிற்பத்திறன் மிக்கது இக்கருவறை. கருவறை வெளியே மகாமண்டபத்தில்
மேற்குப்புறம் இக்கோவில் மூலத் தெய்வமான செல்லத்தம்மன் உற்சவச் சிற்பம்
அலங்கரிக்கப் பட்டு வைக்கப்பட்டுள்ளது. கண்ணகி சிலையும் இதே தோற்றத்தில்
காணப்படுவது குறிப்பிடத் தக்கது.
உற்சவரின் இடதுபுறம் தனியான ஒரு
மேடையில் தரையிலிருந்து இரண்டடி உயரத்தில் சிலப்பதிகார நாயகி கண்ணகியின் சிலை
அமர்ந்த கோலத்தில் உள்ளது. செவ்வாடைபூண்டு வெள்ளிக் கவசம் வெள்ளிக்கிழமைகளில்
காட்சி தருகிறது. அறியப்படாத ஆவணங்களாலும் புகழப் படும் இக்கண்ணகியின் திருவுருவம்
பிற்காலப் பாண்டியர் வளர்த்த சிற்பக் கலையாகும். உயரிய நுணுக்கமான நுட்பங்களுடன்
மானிட வடிவில் இரண்டு கைகளோடு உள்ளது.
கருணை பொழியும் முகம். அடர்ந்த
கரிய கூந்தலை வாரி இடதுபுறம் கொண்டையிட்ட நேர்த்தி. அக்காலப் பெண்களைப் போல தோளளவு
தொங்கும் அணிகள் இல்லாத தொள்ளைக் காதுகள், கூர்ந்த நாசி,
சிறிய
நெற்றி மங்கல அணியுடன் விளங்கும் மார்பு. வலதுகை தாமரை மலரை ஏந்தி நிற்க
இடதுகையில் கால் சிலம்பை லாவகமாக ஏந்திக் காட்டப்படுகிறது.வலதுகாலைக் குத்திட்டு
இடதுகாலை மடக்கி அமர்ந்த தோற்றம். அருகே பிற தெய்வங்கள் அமர்ந்துள்ளனர்.
வணிகர் குலத்தில் பிறந்து
வரலாற்றுப் பெண்ணாக மாறிய கண்ணகிக்கு ஆண்டுதோறும் இப்பகுதியில் பெரிய விழா
எடுத்துப் பெருமைப் படுத்துகின்றனர். ஆதியில் கண்ணகிக்குச் சிலை எடுத்தபோது மூலவர்
ஆகவே வழிபடப்பட்டாள். ஆனால் இச்சிலை வைக்கப்பட்ட போது இப்பகுதியில் அடிக்கடி தீ
விபத்து ஏற்பட்டு மக்கள் வருந்தினர். கண்ணகி சினிமாவாக வந்தபோது தியேட்டர்
தீப்பிடித்தது முக்கிய நிகழ்வு. பின்னர்தான் கண்ணகி சிலை கருவறையின் வெளியே இடப்புறம் உயரமான
கல்மேடையில் நிறுவி,
கிழக்குநோக்கிய
பார்வையுடன் உரு வாக்கினர். தற்போதுள்ள சிலை இதுதான்.
மதுரையை எரித்த பின் கண்ணகி
மதுரையின் பல பகுதிகளுக்கும் சென்று அரற்றி வெதும் பினாள். அவ்வாறான ஒரு இடமே
இன்றைய மதுரையின் தெப்பக்குளம் மாரியம்மன் எனும் வண்டியூர் மாரியம்மன் கோவிலாக
மாறி உள்ளது. இங்கும் கண்ணகி சிலை போலவே மாரி சிலையும்
வடிக்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி யம்மன் கோவிலின் கம்பத்தடி மண்டபத்தில் உள்ள
நின்ற கோல காளி சிலையும் கண்ணகி யாகவே கருதப்படுகிறது.
மதுரையின் வைசியச் செட்டியார்கள்
ஆண்டு தோறும் இக்காளிக்கு விழா எடுத்து மகிழ் கின்றனர். மதுரையின் பல பகுதிகளிலும்
உள்ள மாரி,
காளி
கோவில்கள் கண்ணகி வழிபாட்டின் வெளிப்பாடே எனில் வியப்பில்லை. புதுக்கோட்டை
மாவட்டம் பொன்னமரா வதியில் உள்ள அழகிய நாச்சியம்மன் கண்ணகி யாக
உருவகப்படுத்தப்படுகிறாள். இதே போல திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் உள்ள கண்ணகி கோயிலில்
விழா நாளன்று பொற்கொல்லர் ஒருவரின் தலைமுடியை ஒட்ட வைத்து பின் சிலையை மண்ணில்
கரைக்கின்றனர்.
மதுரை விராட்டிபத்து கிராமத்தின்
வழியே கண்ணகி சென்றபோது எரியும் மதுரையைத் திரும்பிப் பார்த்ததால் இங்கே திரும்பிப்
பார்த்த அம்மன் கோவில் உருவாகி சமீப காலத்தில் மறைந்து போனதாகக் கூறுகின்றனர். திருச்சி அருகே திருவாச்சூரில்
உள்ள மதுர காளியம்மன் கண்ணகியாக இன்றளவும் வணங்கப் பட்டு வருகின்றாள்.
தஞ்சையில் உள்ள சிங்களநாச்சியார்
கோவில் கண்ணகி கோவிலே என்றும் இலங்கை அரசி இக்கோவிலுக்கு வழிபட வந்ததால் இப்பெயர்
என்கின்றனர். ஆனால் இக்கோவிலில் உள்ள சிலை கண்ணகியா? அல்லது சிங்கள அரசியா? என்ற ஐயமும் கிளப்பப்பட்டுள்ளது.
திருச்சி தொட்டியத்தில் உள்ள
காளியம்மன் கோவிலே கண்ணகி கோயிலாகும். இப்பகுதியில் வைசிய மரபுச் செட்டியார்கள்
அதிகம் வசிக் கின்றனர். கண்ணகியும் செட்டி குலப்பெண் என்பதால் இப்பகுதி வாணியச்
செட்டியார்கள் இக்கோவிலை செட்டியம்மன் கோயில் என்று அழைப்பதோடு ஆண்டுதோறும் மாசி
சிவராத்திரி,
ஆடி
மாதங்களில் குலதெய்வ வழிபாடும் செய்கின்றனர்.
யாதவர்கள், மலைவாழ் பழங்குடி மக்கள்
குறிப்பாக தேனி மாவட்டத்தின் தென் எல்லை யான வண்ணாத்திப்பாறை எனும் மங்கலதேவி
மலையைச் சுற்றி வாழும் பளிஞர் இன மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிலம்பாயி, கண்ணகி. மங்கலமாரி, மங்கலதேவி எனப் பெயர் சூட்டு
கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முத்தார அம்மன் என்னும் கண்ணகி
தென் தமிழ்நாட்டில் குறிப்பாக ஆயிர வைசிய மஞ்சப் புத்தூரார் அதிகமாக வாழும்
இடங்களில் முத்தாலம்மன் என்ற பெயரில் வழிபடப் பெறுகிறாள்.
மதுரை செல்லத்தம்மன் கோயிலின்
உள்ளே கிழக்கு நோக்கிய மூலவராகக் காணப்படும் கண்ணகி சிலை தான் தமிழ்நாட்டுக்
கோயில்களில் இடம்பெற்ற முதல் சிலையாகும். சேரன் செங்குட்டுவனால் கட்டி
முடிக்கப் பட்ட மங்கல தேவிக் கோட்டம் இன்று சிதில மாகிக் கிடக்கிறது. தேனி
மாவட்டம் கம்பம் தாண்டி லோயர்கேம்ப் முன்பாக முல்லை ஆறு (வைகை) ஓடும் கிழக்குக்
கரையில் பகவதி கோயில் உள்ளது.
மங்கலதேவி மலைக்குப் போகுமுன்
இந்த இடத்தில்தான் கண்ணகி அமர்ந்திருந்தாள் என் பதால் கேரள முறைப்படி பகவதி என்ற
பெயரால் அழைக்கின்றனர். இதன் எதிரே கிழக்கே மலையடிவாரத்தை ஒட்டிச் செல்லும் பளிஞர்
குடியிருப்பிலிருந்து 6 கி.மீ. தொலைவில் மலை உச்சியில்தான் செங்குட்டுவச்சேரன் நிர்மாணித்த
கற்கோயில் உள்ளது.
தமிழர்களால் புகழ்பெறும்
கோவில்களைத் தனது கோயில்கள் என்று உரிமை கொண்டாடி வருவது கேரள அரசாகும். தமிழரின்
சாத்தன் கோயிலை அய்யப்பன் கோவிலென்று உரிமை கொண்டாடுவதுபோல இக்கோயிலையும் கேரள
அரசு தனது துர்க்கை கோவிலென்று உரிமை கொண்டாடுகிறது. தொன்மமும், காப்பியச் சிறப்பும் கொண்ட
இக்கண்ணகிக் கோவிலின் கண்ணகி சிலை இமய மலைக் கல்லாக நிகர்த்து பேசப்படுகிறது.
ஆண்டிற்கு ஒருமுறை இம்மங்கலதேவிக்
கோயிலுக்கு சித்திரை முழு நிலவு நாளில் தமிழக மக்கள் மாவட்ட நிர்வாகத் துணையோடு
வரிசையில் நிற்க கேரள மக்கள் இங்கு சொந்த இடம்போல, சுற்றி வருவதை ஒவ்வொரு சித்திரை
பௌர்ணமி யிலும் காணப்படுகிற காட்சியாக உள்ளன. கொல்லப்பட்ட கணவன் கோவலன் இறந்து
கிடந்த இடம் கோவலன் பொட்டலாக மாறிக் கிடக்க, “கொன்று அச்சிலம்பைக் கொணர்க” என்ற ஆணை மூலம் கோவலன் மரணம் நிகழக் காரணமான பாண்டியன் நெடுஞ்செழியன்
மதுரை ரிங்ரோட்டில் பாண்டி முனியாகப் பெருங்கோயில் கொண்டு திகழ, சேரன் எழுப்பிய நினைவாலயம்
சிதிலமடைந்து அங்கு வைக்கப்பட்ட கண்ணகி சிலை எங்கு உள்ளது என்பதே தெளிவாகத்
தெரியாமல் இருக்க, மதுரையில் சிலப்பதிகார நிகழ்வுகள்
நடந்தது என்பதற்கு உள்ள ஒரே சாட்சியம் செல்லத்தம்மன் கோயிலில் சிறப்பாகத் திகழும்
கண்ணகி சிலை மட்டுமே.
மதுரையில் இன்று:
பழங்கானத்தம்
அருகில் உள்ள கருமாரியம்மன் கோவில் கண்ணகி கோயிலாகும். இங்கு
கோவில் புதுப்பிக்கும் பணியின் போது சிதிலமடைந்த கண்ணகி சிலை ஒன்றும் (வட்டக்காதணியுடன்) கிடைக்கப்பெற்றது. மேலும் தோண்டுகையில் தலையுள்ள சிலை மட்டும் தனியாக கிடைத்தது. இங்கு கண்ணகிக்கு வெண்ணெய் பூசும் நிகழ்வு நடைபெறுகின்றது. கண்ணகி தன் நீதி கேட்கும் முன் ஒற்றைகால் சிலம்பினை கழற்றிய இடமாக இது
அறியப்படுகின்றது.
மதுரை செல்லாத்தம்மன் கோவிலும் கண்ணகி கோவிலே.
இக்கோவிலானது, கவுந்தியடிகள் கண்ணகியை இடையர்குலத்தில்
அடைக்கலமாக தங்கி இருந்த இடமே இன்றைய செல்லத்தம்மன் கோவில். கோவலன்
பொட்டலில் உள்ள தலைவெட்டிய இடத்தை தோண்டும்போது அங்கும் ஒரு கண்ணகி சிலை கிடைத்தது. இன்றும் அக்கோவிலில் அச்சிலை இருப்பதைக் காணலாம்.
வைதீக இந்து சமயத்தின் புரட்டு:
வைதீகச் சமயத்தினர் ஜமதக்னீ எனும்
முனிவரின் பத்தினியான ரேணுகாதேவி என்பவள் நீராடச் செல்கையில் வானத்தில் சென்ற
கந்தர்வனின் அழகில் மயங்கி மனதால் கற்பிழந்தாள். இதனால் அவளை அவள் கணவரின் ஆணையால்
அவள் மகன் பரசுராமன் தலையை வெட்டிக் கொன்றதாக புராணம் கூறுகிறது.
இவளே பிழைத்தெழும்போது தலைமாறிய
தால் மாரியம்மன் ஆக மாறினாள் என்பர். கணவன் இறந்ததும் ‘ஒட்டேன் அரசோடு மதுரையை எரிப்பேன்’ என்று கற்புக்கடம் பூண்ட கண்ணகியை
ரேணுகாதேவியுடன் ஒப்பிடுவது புராணப் புளுகே தவிர வேறில்லை. பின்னர் அங்குசம், பாசம், சூலாயுதம், தாமரை மலர்களை உருவாக்கி நிறுவன
சமயப் பெண் கடவுளர்களாக்கி விட்டனர். அதற்கேற்ப கதைகளும் எழுதினர்.
தமிழகத்தில் கண்ணகியை மறுத்தவர்கள்:
ஈ.வெ.ராமசாமி
தமிழின
பண்பாட்டு ஆய்வுகளும் வரலாறுகளும் ஏதோ ஒரு வகையில் வடமொழி ஆதிக்கத்திற்கு உட்பட்டே மேற்கொள்ளப்பட்டன. ஆயினும் தமிழிசை
இயக்கம் தோன்றுவதற்கான அடிப்படையாக இருந்தது சிலப்பதிகாரத்தின் அரங்கேற்று காதையே
ஆகும். சுப்பிரமணிய பாரதியார் போன்றவர்கள் பாரதம் முழுவதுக்குமான தேசியக்
காப்பியம் என பதிவுசெய்திருந்தனர். ஆனால் அறிஞர் அண்ணா போன்றோர் அந்தக்
கருத்துக்களை மறுதலித்து சிலம்பு தனித்தமிழ்ப்பண்பாட்டை பிரதிபலிப்பது என்று
கூறினர். சிலப்பதிகாரத்தை தமிழ்நாட்டின் மூலை முடுக்கெங்கும் கொண்டு செல்லும்
பணியும் ம.பொ.சி இனால் ஆரம்பிக்கப்பட்டது.
பெரியார்
என்று அழைக்கப்பட்ட இராமசாமி நாயுடு என்ற
தமிழின விரோதிகள் சிலப்பதிகாரம் பெண்ணடிமை பற்றி பேசுகின்றதென்றும் அது ஆரிய
புகழ்பாடும் நூலென்றும் மூடக் கருத்தாக்கத்தினைப் பரப்பியிருந்தார்.
. இது
விபச்சாரத்தில் ஆரம்பித்து பத்தினித்தனத்தில் மூடநம்பிக்கையில் முடிந்த
பொக்கிஷமாகும்.. மதுரை மாநகர் மீது தனது முலையைத் திருகி எறிகிறாள்..
கோபாவேசத்தோடு.. உடனே மதுரை பற்றிக் கொள்கின்றது. இதுதான் அவளுடைய கற்புக்கு
எடுத்துக்காட்டு. இன்று எந்த ஒரு பெண்ணாவது அவள் எவ்வளவதான் கற்புடைய
கன்னியாயிருந்த போதிலும் இந்தக் காரியத்தைச் செய்யமுடியுமா?“ என பெரியாரின் சிலப்பதிகாரம் தொடர்பான பதிவினைக் கூறலாம்.
பகுத்தறிவில் பேசுவதாக நினைத்து, தமிழ்க்
காப்பியமொன்றினை இகழ்கிறார். பெண்ணின்
கற்புநிலையை பாடும் ஒரு நூலாக மட்டுமே சிலப்பதிகாரம் சித்தரிக்கப்படுகின்றமைக்கு
இவ்வாறான மனிதர்களும் அவர்களை பின்தொடர்வோரும் காரணர்களாகின்றனர்.
தமிழர்களின் மரபினையும்தமிழ்த்தேசிய கூறுகளையும் கூறுகின்றதான தமிழின
இருப்பினைக் கூறும்அடையாளங்களை அழித்தொழிப்பதில் பெரியாரின்
பங்கும்குறிப்பிடத்தக்கது. ஆனால் மிக மோசமான தமிழின அடையாள அழிப்பாக சிலப்பதிகாரத்தின்
அழிப்பினைக் கூறலாம். தமிழ்த்தேசிய
மரபினைக்கூறும் நூல் சார்ந்து, அதனை முறையான
வாசிப்பிற்கு உட்படுத்தாது ஆரியமரபினது என்று கூறி தமிழர்களிடமிருந்து ஒரு தேசிய
காப்பியத்தைபிரித்தெடுக்கும் நயவஞ்சகச் செயல் தமிழ்த் தேசியப் பரப்பில்
மன்னிக்கமுடியாத குற்றமாகும்.
ஆறுமுக
நாவலர்:
பதினெட்டாம்
நூற்றாண்டில் இலங்கையில் வாழ்ந்த சைவ நெறிப் பற்றாளர் ஆறுமுகநாவலர் மிகக்
கடுமையாகக் கண்ணகி வழிபாட்டை எதிர்த்துள்ளார். கண்ணகி ஒரு தமிழச்சி. முதல்
புரட்சிப்பெண். தமிழர்களின் அடையாளம் எனப் பலவாறு புகழ வாய்ப்பிருந்தும்,
அவளை மிகச் சாதாரணமாக ‘சமண மதத்து
செட்டிச்சி’ எனக் குறிப்பிட்டார் ஆறுமுக நாவலர். “அவளை ஏன்
வழிபடுகிறீர்கள்?” எனக் கொச்சையாகக் கேட்டு,
தன் அசுரச் செல்வாக்கால் ஆலயத்தில் இருந்து வெளியே எடுத்துள்ளார். எனினும்
இலங்கையில் இன்றும் செல்வாக்கோடு இருக்கிறாள் கண்ணகி என்பது ஓர் ஆறுதல்.
இலங்கையில்
கண்ணகி வழிபாடு
ஐம்பெருங்
காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் தலைவியான சோழ நாட்டில் பிறந்த கண்ணகி
பாண்டி நாட்டில் வீரக் கற்பரசியாகி, சேர நாட்டிலே
பத்தினித் தெய்வம் எனப் போற்றப்பட்டு, இலங்கையிலே
சிங்கள மக்கள் மத்தியில் பத்தினி தெய்யோ என வணங்கப்பட்டு, இலங்கை மட்டக்களப்பு பிராந்தியத்தில் கண்ணகை அம்மனாக
கோவில்கள் கொண்டுள்ளாள்.
சிங்கள மக்கள் வழிபாடு
இரண்டாவது
நூற்றாண்டில் அநுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த கஜபாகு[1]என்கிற மன்னனால் கண்ணகி வழிபாடு சிங்கள மக்களிடையே அறிமுகம்
செய்யப்பட்டது என சிங்கள வரலாற்று நூல்களில் ஒன்றான இராஜாவளி என்ற நூலில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசனை கடல்சூழிலங்கைக் கயவாகு வேந்தன் என
சிலப்பதிகாரம் சிறப்பித்துக் கூறுகிறது. கஜபாகு மன்னன் வருடந்தோறும் ஆடி மாதத்தில்
பத்தினி தெய்வத்திற்கு விழா எடுப்பித்தான். சிங்களத்திலே ஆடி மாதம் எசல எனப்படும்.
அதிலிருந்து இந்த விழா எசல பெரஹர என அழைக்கப்பட்டது. (பிரகாரம் என்பதே பெரஹர எனத்
திரிபடைந்தது என்ற ஒரு கருத்தும் உண்டு.) ஊர்வலமாக வரும் ஆடித் திருவிழா என
தமிழில் கூறலாம். இந்த ஊர்வலத்தில் நாத தெய்யோ(சிவன்/விநாயகர்), விஷ்ணு தெய்யோ (திருமால்),
கதிர்காம
தெய்யோ (முருகன்) தெய்வங்களும் இடம் பெற்றன. மிக பக்தியுடன் இந்த விழா சுமார் 1800 ஆண்டுகள் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. சிங்கள மன்னர்கள்
காலத்துக்குக் காலம் தலைநகரை மாற்றியபோது, பத்தினி
விழாவும் அந்தந்த தலைநகரங்களில் நடைபெற்றது.
பதினெட்டாம்
நூற்றாண்டில் சீய நாட்டிலிருந்து (தாய்லாந்து) இலங்கைக்கு வந்த புத்த துறவிகளின்
விருப்பப்படி விழாவில் புத்தரின் புனித தந்தம் தாங்கிய பேழையும் எடுத்துச்
செல்லப்படலாயிற்று. தற்போது இந்த விழா சிங்கள மன்னர்களின் கடைசி தலைநகரமான கண்டி
நகரில் வருடந்தோறும் ஆடி மாதத்தில் நடைபெறுகிறது. இலங்கை சுதந்திரம் அடைந்த பின்
படிப்படியாக மாற்றங்கள் செய்யப்பட்டு இப்போது ஒரு புத்த சமய விழாவாகவே
கொண்டாடப்பட்டு வருகிறது. எனினும் விழாவில் இரண்டாவது ஊர்வலம் நாத தெய்யோ
ஆலயத்திலிருந்தும், மூன்றாவது ஊர்வலம்
விஷ்ணு தெய்யோ ஆலயத்திலிருந்தும், நான்காவது
ஊர்வலம் கதிர்காம தெய்யோ ஆலயத்திலிருந்தும், ஐந்தாவது
ஊர்வலம் பத்தினி தெய்யோ ஆலயத்திலிருந்தும் தொடங்குகின்றன. இப்போது பத்தினி தெய்யோ
தொற்று நோய்கள், பஞ்சம், வரட்சி ஆகியவற்றிலிருந்து காக்கும் தெய்வமாக சிங்கள மக்கள்
மத்தியில் வருணிக்கப்படுகிறது.
வடக்கு மாகாணம்
இலங்கையில் வட
மாகாணத்தில் வற்றாப்பளை என்னும் ஊரில் உள்ள கண்ணகை அம்மன் ஆலயம் புகழ் பெற்றது.
இங்கே வைகாசி மாதத்தில் விழா நடைபெறுகிறது. யாழ்ப்பாணத்தில் கச்சாய் என்னும் ஊரில்
ஒரு கண்ணகை ஆலயம் இருப்பதாக ஒரு தகவல். புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில்
தீவுப்பகுதியிலுள்ள ஒரு கண்ணகி வழிபாட்டுத்தலமாகும். கிளிநொச்சி மாவட்டத்தின்
பூநகரியில் உள்ள, நல்லூர் எனும் ஊரில்
ஓர் பிரசித்தி பெற்ற கண்ணகை அம்மன் ஆலயம் உள்ளது. இது, கண்ணகி ஓர் நாள் தங்கி ஓய்வு எடுத்த இடமாக ஆலய வரலாற்றில்
குறிப்பிடப்படுகிறது. தவிர கண்ணகி வழிபாடு வட பகுதியில் வேறு இடங்களில்
நடைபெறுவதாகத் தெரியவில்லை. வடபகுதியிலிருந்த கண்ணகி ஆலயங்கள் பல, நாவலர் காலத்திலேற்பட்ட சைவ எழுச்சியை அடுத்து, வைதிக வழிபாட்டுக்குட்பட்ட அம்பிகை ஆலயங்களாக மாற்றப்பட்டமை
வரலாறு.
தமிழகத்தில்
சேரன் செங்குட்டுவன் காலத்தில் சோழ, பாண்டி
நாடுகளிலும் கண்ணகி கோவில்களும் வழிபாடும் எழுந்தன. கணவன் இறந்தான் எனக்
கேள்வியுற்ற கண்ணகி ஒற்றைச் சிலம்புடன் பாண்டியனுடைய அரண்மனை வாயிலில் நின்றபோது
வாயில் காவலர்கள் அவளது தோற்றத்தை கொற்றவை, காளி, துர்க்கை என நினைத்ததாக சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் கேரளத்திலுமுள்ள, மாரியம்மன்
மற்றும் பகவதியம்மன் வழிபாடுகள், கண்ணகி
வழிபாடு வைதிக வழிபாட்டுக்குள் உள்ளீர்க்கப்பட்டபின்னர் ஏற்பட்ட
வழிபாட்டுமாற்றமாகவே இருக்கவேண்டும்.
கிழக்கிலங்கை
இலங்கையில்
தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு கிழக்கு பகுதியில், மட்டக்களப்பு பகுதியிலேயே (மட்டு - அம்பாறை மாவட்டங்கள்)
கண்ணகி வழிபாடு பெரும்பாலும் காணப்படுகிறது. இங்கு சைவக் கோவில்கள் பல இருக்கின்ற
போதிலும் கண்ணகை அம்மன் கோவில்களே அதிக சிறப்புப் பெற்று விளங்குகின்றன.
உடுகுச்சிந்து என்னும் நூலில் மட்டக்களப்பிலுள்ள கண்ணகி கோவில்கள் பற்றி தகவல்கள்
கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நூலில் யாழ்ப்பாணத்தில் உள்ள அங்கணாமைக் கடவை கண்ணகி
கோவில் பற்றியும் சில பாடல்கள் உள்ளன. இந்த நூலின் பாடல் ஒன்றில் "காமனகர்
வாழ்குளக் கண்டியுறை மாதே" (பாடல் 63) எனக்
கூறப்பட்டிருப்பதால் கண்டியிலுள்ள கண்ணகி கோவிலும் (பத்தினி தெய்யோ கோவில்)
மட்டக்களப்பில் பிரசித்தி பெற்றிருந்ததென்று தெரிகிறது.
கண்டிக்கும்
மட்டக்களப்புக்கும் இடையே பண்டைய காலத்தில் வாணிபத் தொடர்பு இருந்தது. இதனால் இரு
இடங்களையும் இணைக்கும் பழைய வீதி ஒன்று இருந்தது. இந்த வீதி மட்டக்களப்புவிற்குத்
தெற்கே உள்ள காரைதீவுவிலிருந்து, சம்மாந்துறை, வீரமுனை ஆகிய ஊர்களினூடாக கண்டிக்கு சென்றது. எனவே கண்ணகி
வழிபாடு கண்டியிலிருந்து வீரமுனை வழியாக வந்து மட்டக்களப்பின் பிற ஊர்களுக்குப்
பரவியது எனக் கொள்ளலாம்.
மட்டக்களப்பிலே
25 இற்கும் அதிகமான
ஊர்களிலே கண்ணகை அம்மன் கோவில்கள் அமைந்துள்ளன. வீரமுனை, காரைதீவு, தம்பிலுவில்
ஆகிய ஊர்களில் கிடைக்கும் சில சான்றுகளால் கண்ணகி வழிபாடு அங்கிருந்தே மற்ற
ஊர்களுக்கும் பரவியிருக்கக்கூடும் எனத் தெரிகிறது.
உடுகுச்சிந்து நூலின் 71 ஆம் பாடல்
பட்டிநகர், தம்பிலுவில், காரைநகர்,
வீரமுனை
பவிசுபெறு
கல்முனை, கல் லாறு, மகிழூர்,
எருவில், செட்டிபாளையம், புதுக் குடியிருப்பு, செல்வ
முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை,
அட்டதிக்கும்
புகழு வந்தாறுமூலை
அன்பான
சிற்றாண்டி நகரதனில் உறையும்
வடிவப்
பூங்குழல் மண்முனைக் கண்ணகையை
மனதினில்
நினைக்கவினை மாறியோ டிடுமே
என்று ஊர்களைப் பட்டியலிட்டுக் கூறுகின்றது.
மட்டக்களப்பு
பகுதியில் கண்ணகை அம்மன் கோவில்களில் நடக்கும் திருவிழாவை சடங்கு என்று கூறுவது
அங்குள்ள வழக்கம். வருடந்தோறும் வைகாசி மாத பூரணை நாளுக்கு முந்திய வளர்பிறை
காலத்தில் (பூர்வ பட்சம்) விழா நடத்தப்படுகிறது.
மட்டக்களப்பில்
கிடைத்த கண்ணகி சிலை ஒன்று லண்டனிலுள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் காணப்படுவதாக
கலாயோகி ஆனந்த குமாரசுவாமி தனது இந்திய, இந்தோனேசிய
கலை வரலாறு[6] என்ற நூலில்
பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட அந்த சிலையின் சிறப்பினை வியந்து எழுதியுள்ளார்.
எனினும் "இச்சிலை, முலை ஒன்றை இழந்த
பத்தினியான கண்ணகிக்குரியது அல்ல" என கலைப்புலவர் க. நவரத்தினம் கருத்துத்
தெரிவித்துள்ளார்.
கண்ணகி
அம்மனின் கோபத்தினாலேயே வைசூரி, குக்கல், வெப்பு, சின்னம்மை, வயிற்றுக்கடுப்பு, மங்கமாரி, கண் நோய், பெருஞ்சுரம்
போன்ற சூட்டு நோய்கள் பரவுகின்றன என மட்டக்களப்பு மக்கள் பலர் நம்புகின்றனர். காளி
அம்மனின் அம்சமான கண்ணகையின் பரிகலங்கள் (அணுக்கத் தேவதைகள்) எண்மர் உளர் என்றும்
அவர்களே இந்த நோய்களுக்குத் தலைவர்கள் என்றும் அங்கு கூறப்படுகிறது.
வழக்குரை காவியம்
மட்டக்களப்பு
கோவில்களில் படிக்கப்படும் கண்ணகி வரலாறு கண்ணகியின் பெயராலோ அல்லது சிலம்பின்
பெயராலோ அழைக்கப்படுவதில்லை. வழக்குரை காவியம் அல்லது வழக்குரை என்றே அழைக்கப்
படுகிறது. இதில் வரம்பெறு காதை தொடங்கி குளிர்ச்சிக் காதை வரையான பதினொரு காதைகள்
உள்ளன. வழக்குரை காவியம் ஏறக்குறைய 2220 பாடல்களைக்
கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக ஒன்று -
கானிரங்கு
தொடைமார்பன் காவிரிசூழ் வளநாட்டில்
வானிரங்கு
புகழ்கொண்ட மாசாத்தர் கோவலற்காய்த்
தேனிரங்கு
மொழிமடவார் சேயிழையார் மாதவியார்
தானிரங்கு
கதைபாடத் தரணியுள்ளோர் கேளுமெல்லாம்
மட்டக்களப்பின் இலக்கியச் செல்வமான
வழக்குரை காவியம் கண்ணகியை பிறப்பிலிருந்தே தெய்வநிலை சேர்த்து வளர்த்துவரும்
பாங்கினைக் கொண்டதாக அமைந்துள்ளது.
வழக்குரை காவியத்தில்
கூறப்படும் கண்ணகி கதை
சிவபெருமான்
பராசர முனிவரின் மகளது அழகினையும் நற்குணங்களையும் கண்டு "நீ பூலோகத்தாரால்
தெய்வமாகப் போற்றப்படும் தகைமை உடையவள். ஆதலால்,
கற்புக்கரசியாக
விளங்கவும், மானிடர்கள் உன்னை
பத்தினித் தெய்வமாக வணங்கவும் உனக்கு வரம் தந்தோம்" என்று சொன்னார். (சில
கிராமிய இலக்கியங்கள் அவள் பெயர் "நாகமங்கலை" என்கின்றன).
அச்சமயம்
பார்வதி தேவி, "பாண்டிய மன்னன் தனது
தவப்பேற்றினால் பெற்ற நெற்றிக்கண்ணால், தான் ஈசனுக்கு
நிகரானவன் என ஆணவம் கொண்டிருக்கிறான். அதை அழிப்பாய் என அவளுக்கு ஆணையிட்டாள்.
அந்த ஆணையை நிறைவேற்றுவதற்காக பராசர முனிவரின் மகளுக்கு பாண்டிய நாடு பிறப்பிடமாக
கற்பிக்கப் பட்டது.
பாண்டிய நாட்டில்
புதுவகையான மாங்கனி ஒன்று காணப்பட்டது. கண்ணுக்குத் தெரிந்த அக்கனி அதனைப் பறிக்க
யாரேனும் மரத்தில் ஏறிச்சென்றால் மறைந்துவிடும். பாண்டிய மன்னன் அம்பெய்து
அக்கனியை வீழ்த்தினான். ஆனால் அக்கனி நிலத்தில் விழாது அந்தரத்தில் தொங்கியது.
அதனைப் பிடிக்க அரசன் கையை நீட்டியபோது அந்தக் கனி நெருப்புக் கோளமாகி அரசன்
கைகளில் வீழ்ந்தது. அரசன் பயந்து கனியை நிலத்தில் விட்டெறிந்தான். தன் நெற்றியில்
அரும்பிய வியர்வையை தன் கையால் துடைத்தான். மாங்கனியைத் தொட்ட கை நெற்றியில்
பட்டதும் நெற்றிக்கண் அழிந்தது–––.
நிலத்தில்
வீழ்ந்த கனியை அரசன் மனைவியிடம் கொடுத்தான். அக்கனி தெய்வத்தன்மை பொருந்தியது என அவள் அதனை ஒரு பொற்
குடத்தில் இட்டு வைத்தாள்.மூன்றாம் நாள் பொற்குடத்தை அரசவைக்குக் கொண்டு வந்தபோது
மாங்கனி பெண்குழந்தையாக மாறியிருந்தது.
அச்சமயம்
அரண்மனைச் சோதிடர்கள் இக்குழந்தை "பீடுறும் மதுரை அரசோடழியக்
காரணமாகும்" எனச் சொன்னதால் மன்னன் குழந்தையை அழகிய பேழை ஒன்றில் வைத்து
ஆற்றில் விட்டான்.
இக்காலத்தில்
சோழ நாட்டில் கரிகால் பெருவளத்தான் ஆட்சி செய்து வந்தான். சோழ நாட்டின் தலை
நகரமாகிய காவிரிப்பூம்பட்டினத்தில் மாசாத்துவான்,
மாநாய்கன்
என்ற இரண்டு வணிகர்கள் வாழ்ந்தனர். மாசாத்துவானுக்கு கோவலன் என்றொரு மகன்
இருந்தான். மாநாய்கனுக்கு குழந்தைப்பேறு இல்லாதிருந்தது. இருவரும் ஒரு நாள்
கடற்கரையில் நிற்கும்போது குழந்தையுடன் பேழை வருவதைக் கண்டனர். மாநாய்கன்
அக்குழந்தையை தன் குழந்தையாக ஏற்றுக்கொண்டான். தன் வாழ்வில் ஒளியும் மகிழ்ச்சியும்
ஏற்றிய காரணத்தால் குழந்தைக்கு கண்ணகை எனப் பெயர் சூட்டி வளர்த்து வந்தான். இதன்
பின்னர், வழக்குரை கதை பெருமளவு
சிலம்புடன் ஒத்தும், சில இடங்களில்
மாறுபட்டும் செல்கிறது.
இராஜராஜ சோழன்
தஞ்சையில் ஏற்படுத்திய கண்ணகி ஆலயம்
பதினோராம்
நூற்றாண்டில் தமிழகம் முழுவதையும் ஒரு குடைக்கீழ் ஆண்ட மாமன்னன் முதலாம் இராஜராஜ
சோழன்இலங்கையைக் கைப்பற்றி சிங்கள மன்னனாகிய ஐந்தாவது மகிந்தனையும் அவனது
மனைவியையும் சிறைபிடித்து வந்தான். அவர்கள் இருவரும் சகல மரியாதைகளுடன் ஒரு
மாளிகையில் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். சிங்கள மன்னனின் மனைவி பத்தினி வழிபாடு
இல்லாமையால் வருந்தினாள். பண்பும் கருணையும் மிகவும் உடையவனான இராஜராஜ சோழன் அவள்
விருப்பப்படி கண்ணகி கோவில் அமைத்துக் கொடுத்ததோடு பத்தினி விழாவும் அங்கு
நடைபெறச் செய்தான். அக்காலத்தில் சோழநாட்டில் பத்தினி வழிபாடு மறைந்து போயிருந்த
காரணத்தால் தமிழக மக்கள் கண்ணகியை சிங்கள நாட்டிலிருந்து வந்த தெய்வமாகக் கருதி
சிங்கள நாச்சி கோவில் என அக்கோவிலை அழைத்தனர். நாளடைவில் அப்பெயர் செங்களாச்சி என
திரிபடைந்து பின்னர்
சாதாரண மக்களால் செங்காச்சி அம்மன் என அழைக்கப்பட்டது.
கண்ணகி வடிவம்:
மெலிந்த உடலோடு, கொண்டைமுடியணிந்து காது வளர்த்து, காதொன்றிக்கும் இரு வளையங்கள் பூட்டி தடக்கையில் சுருள் வளை அணிந்து, இடமுலையில்லா ஒற்றை சேலை மாராப்புடன் மூக்கில் இரு பெரியவட்ட நீலக்கல் சுற்றிய வெள்ளைக்கல் மூக்குத்தியுடனும் கூர் மூக்குடனும் சினங்கொண்ட கண்களினைக் கொண்டு இருக்கைக்குப் பின் வளைவோடு திகழ்பவளே கண்ணகியாள்.
தமிழகத்தில்
கண்ணகி வழிபாடு, கண்ணகி மரபு அழிக்கப்பட்டமையும் அரசியல் பின்புலமும்:
- கண்ணகி தொன்மம் எப்பொழுது தோன்றியது என்பதை அறுதியிட்டு உரைத்தல் இயலாது.
- திருமாவுண்ணி, கண்ணகி அல்லள் என்பதும் ஒருமுலை அறுத்த செயல் ஒன்றே ஒற்றுமையுடன் காணப்படுகின்றது என்பதும் இருவரும் வேறுவேறானவர் என்பதும் அறிஞர்களால் விளக்கப்பட்டுள்ளன.
- கண்ணகி தொன்மம் தமிழ்நாட்டின் புராதன தாய்ச் சமூக அமைப்பில் உருவான ஒன்றாகும். இதனைப் பின்வருமாறு உணரமுடியும்.
- இயற்கையை ஏவல் கொள்ளுதல், முதலிய பண்புகள் யாவும் கண்ணகியிடம் அமைந்து கிடந்தன. இவற்றுள் மழையாற்றல் என்பது சமூக மாற்றத்திற்கு ஏற்பக் கணவனோடு இணைக்கப் பெற்றது. அணங்கு உறைந்த முலை எதிரியை அழித்துள்ளது. முலையாற்றல் எதிரியை அழிக்கும் என்பது தாய்ச் சமூக மரபுசார் நம்பிக்கை ஆகும்.
- குஜராத்தில் உள்ள பாட், சாரன் பழங்குடிப்பெண்கள் இவ்வாறு எதிரியை அழிக்க முலையை அறுத்துப் பின்னர்ப் ‘பகுச்சாரா’ எனும் பெண் தெய்வமாகி உள்ளனர். இவ்வாறு புராதன தமிழ்ச்சமூகத்தின் பெண் தெய்வமாகக் கண்ணகி தொன்மம் வழக்குப் பெற்றிருத்தல் வேண்டும்.
- இமயம் வென்ற சேரன் முன்னிறுத்தும் சமயமாகக் கண்ணகி சமயம் காட்சி தருகின்றது.
- கண்ணகி வழிபாடு உச்சம் பெற்ற காலத்தில் பல்வேறு தெய்வங்கள் பெருஞ்சமய/ஏகசமய நிலையை நோக்கித் தமிழகத்தில் நகரத் தொடங்கி விட்டன. சிவன், மாயோன் வழிபாடு வலுப்பெறத் தொடங்கியது. கொற்றவை மரபு மேனிலையாக்கம் பெற்று நகர்ச்சியைப் பெற்றது. முருக வழிபாடும் ஸ்கந்த, சுப்பிரமணிய, கார்த்திகேய மரபுகளை உள்வாங்கிப் பெருஞ்சமய நிலையை நோக்கி நகரத் தொடங்கியது.
- இவற்றோடு கண்ணகி வழிபாடும் பத்தினி வழிபாடாக அல்லது தாய்த்தெய்வ வழிபாடாக நகரத் தொடங்கியது. தமிழகம் முழுவதும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் இவ்வழிபாடு பரவத் தொடங்கியது.
- தமிழினத்தைத் தமிழகம் எனும் பெயரில் தமிழ் மரபுசார் கூறுகள் விளங்கச் சிலப்பதிகாரம் உருவானபிறகு அது தமிழரின் அடையாளமாக மாறத் தொடங்கியது. அல்லது தமிழ்த் தேசியத்தின் அடையாளமாக மாறத் தொடங்கியது.
- இந்நிலையில் இந்த அடையாளத்தை வீழ்த்தும் அழிக்கும் நுண் அரசியல்சார் நிகழ்வுகளும் தமிழகத்தில் நிகழ்ந்தேறின.
- பெருஞ்சமய நகர்தல் உச்சநிலையை அடைந்த போது அனைத்துச் சமயங்களையும் வீழ்த்திச் சைவமும் வைணவமும் பெருஞ்சமயங்களாக மாறின. இது பல்லவர் காலத்து நிகழ்வாகும்.
- கொற்றவை மரபும் முருக மரபும் சைவத்தில் இணைந்தன. கண்ணகி வழிபாடு மறையத் தொடங்கியது. பத்தினி வழிபாடு எனும் நிலையைத் திரௌபதியம்மன் வழிபாடு உச்சம் பெற்று வீழ்த்தியது. திரௌபதியம்மன் வழிபாடு கால்கொண்ட பின்பு தமிழகத்தில் கண்ணகி வழிபாடு வழக்கு ஒழிந்து மாரி வழிபாடாக மாற்றமுறத் தொடங்கியது. இதனால் கண்ணகி வழிபாடு உருவமற்றுப் போனது. இந்நிலைக்குக் கண்ணகி ஒரு மானுடப் பெண்ணாக விளங்கியமையும் ஒரு காரணம் ஆகும்.
- கண்ணகி தொன்மத்தை அடிப்படையாகக் கொண்ட சிலப்பதிகாரம் எனும் பிரதியும் இந்நிலைக்கு ஆளானது. சிலப்பதிகாரம் காப்பிய மரபிற்கு உட்பட்டு ஆக்கம் பெறவில்லை எனவும் அது காப்பியம் ஆகாது எனவும் எடுத்துரைக்கப்பட்டது.
- தண்டியலங்காரம் கூறும் வடமொழி காவிய மரபிற்கு மாறுபட்டுச் சிலப்பதிகாரம் இயற்றப்பட்டுள்ளது என எடுத்துக் கூறப்பட்டது. மாறாகச் சிலப்பதிகாரத்திலிருந்து தமிழ்க் கவிதை மரபை எடுத்து மொழியும் நிலை இல்லாமல் போனது.
- இது வடமொழியானது பெரும்மொழியாக வழக்குப் பெற்ற சோழர் காலத்தில் உச்சம் பெற்றது. ஏனைய இலக்கண இலக்கியங்கள் போல அல்லாமல் அடியார்க்கு நல்லார், பழைய உரைக்காரர் என இரு உரைகளே சிலப்பதிகாரத்திற்கு எழுதப்பெற்றதையும் இத்தகு ஒதுக்கத்தின் பின்புலத்தில் பார்த்தல் வேண்டும்
- சமணபௌத்த சமயங்களுக்கும் வைதீக சமயங்களுக்குமான போட்டியும் மோதல்களும் கலவரங்களும் காலங் காலமாகத் தமிழ் மண்ணில் நிகழ்ந்துள்ளன. சைவ, வைணவ சமயங்கள் சமணத்தையும் பௌத்தத்தையும் வீழ்த்துவதில் வெற்றிகண்டன. சமயக் காழ்ப்பும் சமய அழிப்பும் அது சார்ந்த அனைத்தையும் அழித்தன.
- சமணர்களும் பௌத்தர்களும் தமிழுக்குச் செய்த கொடைகள் பலவாகும். ஏராளமான சமண பௌத்த இலக்கியங்கள் அழிக்கப் பெற்றதற்கு இத்தகு சமயக் காழ்ப்பு பெரும் காரணமாகும். இந்தச் சமயக் காழ்ப்பு சிலப்பதிகாரத்தையும் விட்டுவைக்க வில்லை.
- சமண முனிவர் ஒருவர் இயற்றிய காப்பியத்தை வைதீக சமயத்தார் படித்தல் ஆகாது என்ற கருத்து 16 -ஆம் நூற்றாண்டு முதல் 19- ஆம் நூற்றாண்டு வரை உரத்துப் பேசப்பட்டது. இந்தக் காலக்கட்டத்தில் திருக்குறள், சிலப்பதிகாரம், நாலடியார் முதலான நூல்கள் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தன. தேவாரம் முதலான பக்திப்பனுவல்கள் உச்சம் தொட்டன. இருபதாம் நூற்றாண்டிலும் இந்நிலையே நீடித்தது. இருபதாம் நூற்றாண்டு ஆய்வாளர் சிலரும் சிலப்பதிகாரத்தை வைதீக நூலாக மாற்றம் செய்த பிறகே ஏற்றம் தர முற்பட்டனர்.
- சிலப்பதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழின அடையாள உருவாக்கத்தின் இரண்டாம் நிலை இருபதாம் நூற்றாண்டில் தோற்றம் பெறுகின்றது. சமயக் காழ்ப்பால் ஒதுக்கம் பெற்று ஒடுங்கிக்கிடந்த சிலப்பதிகாரம் 1872இல் தி.ஈ.சீனிவாசராகவாச்சாரியாரால் பதிப்புரு பெறுகின்றது. இவரது பதிப்பில் ஒரு சில காதைகளே இடம் பெற்றன. சிலப்பதிகாரம் முழுவதும் அடங்கிய பதிப்பை உ.வே.சாமிநாதையர் 1892இல் வெளியிட்டார். இப்பதிப்பு வெளிவந்த பின்னரே சிலப்பதிகாரம் பற்றிய முழுச்செய்திகளும் தமிழுலகத்தைச் சென்றடைந்தன.
- 1850 களுக்குப் பிறகு தமிழ்மொழி, இனம், வரலாறு, பண்பாடு சார்ந்த ஆய்வுகள் உருவாக்கப்பெற்றன. ஆனால் இந்த ஆய்வுகள் யாவும் ஏதோ ஒருவகையில் வடமொழிக்குக் கடன் பட்டவையாக விளங்கின. தனித்த தமிழ் அடையாளங்களோடு கூடிய ஆய்வுகளை நிகழ்த்த முடியாமல் போயிற்று.
- தொல்காப்பியம் தொடங்கி எல்லா நிலைகளிலும் இது வெளிப்பட்டது. தொல்காபியமே ஆரிய மரபினரான அகத்தியரின் மாணவரால் உருவாக்கப்பட்டது என்றும் அவரும் திரணதூமாக்கினி எனும் ஆரியர் எனவும் தொன்மங்கள் பலவாக நிலைபெற்று இருந்தன.
- சிலப்பதிகாரம் தமிழின தமிழர் வரலாற்றைக் கட்டமைக்கப் பெரிதும் துணைநின்றது. தமிழர் வரலாற்றை உருவாக்கியதில் வி. கனகசபைப்பிள்ளைக்குப் பெரும் பங்குண்டு.
- தமிழர்கள் தம் அடையாளங்களை இழந்தவர்கள்; அடையாளங்களைக் கொண்டாடத் தெரியாதவர்கள் என்பதாகும். மொழி இழக்கப்பட்டது: நிறம், உணவு, சமயம், உடை, பண்பாடு என அனைத்து நிலையிலும் தமிழன் தன் அடையாளங்களை இழந்து நிற்பது அவலத்திற்குரியது, மாறாக அந்த அடையாளங்களைத் தாழ்வானவையாகவும் இழிவானவையாகவும் நம்ப வைக்கப்பட்டிருப்பது அதனைவிடவும் அவலத்திற்குரியது. இவ்வாறான ஒரு அவலநிலை உலகத்தில் வேறு எந்த இனத்திலும் இருப்பதாகத் தெரியவில்லை.
- தமிழர்க்கு அடையாளத்தை அல்லது முதன்மையைத் தரும் எந்த ஒரு கூறும் வடமொழியிலிருந்து கடன் வாங்கப் பெற்றது எனக் கூறுவது காலங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டு வரும் மரபாகும். தமிழ் மண்ணில் தமிழ் மரபிலிருந்து உருவான தொல்காப்பியத்தை உருவாக்கியவர் திரணதூமாக்கினி எனும் ஆரிய முனிவர் ஆவார் என்பது தொன்மம். அதே போல் தமிழ் எழுத்துகள் எல்லாமே அசோகரது பிராமியிலிருந்து உருவானது என்பதும் தமிழர் மகிழ்ச்சியோடு நம்பிக் கொண்டிருக்கும் நம்பிக்கை ஆகும். இதற்குச் சிலப்பதிகாரமும் விதிவிலக்கன்று.
- சீனிவாச ஐயங்கார், வையாபுரிப்பிள்ளை, கைலாசபதி மூவரும் சிலப்பதிகார பெருமையை நாசம் செய்தவர்கள் ஆவார்.
- தமிழில் எழுதப்பெற்ற முதற் காப்பியம் சிலப்பதிகாரம். காப்பிய வடிவம் சமஸ்கிருதத்திலிருந்து கடன் வாங்கப்பெற்றது. என்று பி.டி. சீனிவாச அய்யங்கார் (1989) கருத்துரைப்பார்.
- பி.டி.சீனிவாச அய்யங்காரின் (1989) கூற்று, சிலப்பதிகாரத்தை வரலாற்று நூலாகப் பார்க்கக் கூடாது என்பதை வற்புறுத்துவதோடு அதிலுள்ள வரலாற்றுச் செய்திகள் யாவும் கற்பனைப் புனைவுகள் என்பதையும் விவரித்துள்ளன.
- வையாபுரிப் பிள்ளை (1954) ‘மரபுவழி வந்த சில கருத்துகளையும் இசைப்பாடல் வடிவங்களையும் வடமொழி முலம் வந்த சில கதைகளையும் ஆதாரமாகக் கொண்டும் சிற்சில சரித உண்மைகளை அடிப்படையாகக் கொண்டும் இளங்கோவடிகள் தமது காப்பியத்தை இயற்றினார்’ என்று கருத்துரைத்தார்.
- சிலப்பதிகாரம் தொடர்பாக நீண்டதொரு ஆய்வுக் கட்டுரையை வழங்கிய கைலாசபதி (1996) சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ள செய்திகள் வரலாற்றுச் செய்திகள் இல்லை என்றும் அவற்றைப் பற்றி எடுத்துரைக்க விரும்பவில்லை என்றும் விவரிப்பர். இவரே, வாய்மொழியாக வழங்கிய சேர மன்னர் பற்றிய செய்திகளைப் பயன்படுத்திக் கொண்டு தன்னையும் கதையுடன் தொடர்பு படுத்தி இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தைப் புனைந்துள்ளார் என்று கூறுவர்.
- ‘உறுதி செய்யுங்கள்’ அல்லது ‘ஏலாது என மறுத்து ஒதுக்குங்கள்’ என்று கூறுவதையும் கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.ஆரிய மனநிலையை காட்டுகின்றது
- கைலாசபத்ஜீ கூறும் ‘மேன்மேலும் இவற்றைக் கட்டி மாரடிக்காதீர்கள்’ என்ற கருத்தும் கோடிடத்தக்கது. இவ்வாறான சொல்லாட்சிகள் யாவும் அன்றைய காலக் கட்டத்தின் கருத்து மோதல்களின் எதிரொலி என்றுதான் கூறுதல் வேண்டும்.
- கைலாசபதியின் ‘அடியும் முடியும்’ எனும் கட்டுரை, காலம் காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த ஒரு இனத்தை மொழிவழியாவும் இலக்கியங்கள் வழியாகவும் மீட்டெடுக்கும் முயற்சி நடைபெறும் போது ‘அடியும் முடியும்’ எனும் கட்டுரை ஆய்வுகள் அம்முயற்சிகளை முறியடித்தன. இவ்வாறான நிகழ்வுகள் வேறு இனங்களில் நடைபெறுவதை அவ்வின மக்கள் அனுமதிப்பது இல்லை.
- கொடுங்கல்லூர் பகவதியின் வழிபாட்டுச் சடங்குகள், பழமரபுக் கதைகள், வழிபாட்டுப் பாடல்கள், விழா நிகழ்வுகள் ஆகியவற்றைத் தொகுத்துப் பார்க்கும் போது கண்ணகி வழிபாடு சங்ககாலம் தொடங்கிக் கி.பி.16-ஆம் நூற்றாண்டு வரை தொடர்வதையும் அதன் பின்னர்ப் பகவதி அம்மனாக மாற்றப்பட்டதையும் காணமுடிகிறது. மாறினாலும் பழைய மரபுகள் மறையாமல் இருப்பதையும் அறியமுடிகின்றது.
- கேரளாவில் நாற்பதிற்கும் மேற்பட்ட கோயில்கள் கண்ணகி வழிபாட்டிற்குரியவையாகத் திகழ்வதைக் காணமுடிகின்றது.
- இவ்வழிபாட்டின் போது கோடிக்கணக்கான மக்கள் கூடி வழிபாடு நடத்துவதையும் அறியமுடிகின்றது. கோவலன் கொலையுண்ட போது கண்ணகி காளியாக மாறி நீதி கேட்கச் செல்கிறாள். இந்நிகழ்ச்சி கேரளத்தில் சாமியாடி செய்யும் ஒரு சடங்காக இடம் பெற்றுள்ளதை அறிய முடிகிறது. சாமியாடி ஒற்றைச் சிலம்பை அணிந்து தலைமயிரை விரித்துப் போட்டு உடம்பில் குருதி வழிய அருள் வாக்கு கூறுவது கண்ணகி தொன்மத்தின் தொடர்ச்சியே என்பர் இந்துசூடன்.
- தொடக்க காலத்தில் கேரளத்தில் சேரன் கண்ணகிக்காக நட்ட மாசதிக்கல் வழிபாட்டின் சடங்குகள் இன்னும் மடியவில்லை என்றும் அவை ஸ்ரீகுரும்பா, பத்திரகாளி, நல்லம்மா, மணியம்மா முதலிய தெய்வங்களை வாழ்த்திப் பாடும் பாடல்களில் கண்ணகி புராணம் உள்ளது என்றும் கே.கே.என்.குரூப் விளக்கி உள்ளார்.
- வட கேரளத்தில் உள்ள சீர்மக்காவு கோயில்கள் கண்ணகிக்கு உரியவை என்று வில்லியம் லோகன் கூறுவதை அறிஞர் விளக்கி உள்ளனர். பல்வேறு கண்ணகி கோயில்களில் பாடப்படும் தோற்றம் பாட்டு குறிப்பிடத்தக்கது. இப்பாட்டில் கண்ணகி வரலாறு இடம் பெறக் காணலாம்.
- ஈழத்தில் கண்ணகி வழிபாடு பரவலாகவும் செழிப்பாகவும் நடைபெற்றுவருவதை அறியமுடிகின்றது. நூற்றுக்கணக்கான கண்ணகி கோயில்கள் ஈழத்தில் இருப்பதை ‘ஊர் சுற்றுக் காவியம்’ எடுத்துக் கூறுகின்றது.
- பௌத்த மரபில்; உள்ள ‘பத்தினி தெய்யோ’ என்பது பத்தினி வழிபாட்டிற்குரிய தெய்வத்தைக் குறிக்கின்றது. ஈழத்தழிழர் தம் மீட்சிக்கான தெய்வமாக அண்மையில் கண்ணகி வழிபாட்டை நடத்தி வருவதை என். சண்முகலிங்கன் (2013) விவரித்துள்ளார்.
- ஈழத்தழிழர் வறுமை, வறட்சி, நோய், துன்பம் இவற்றிலிருந்து விடுபட்டு வாழ்வின் மீட்சிக்கும் வளத்திற்கும் வேண்டப்படும் தெய்வமாக இன்று கண்ணகி காட்சி தருகின்றாள்.
- கொம்பு முறித்தல், குளுத்திப்பாட்டு தேங்காய் விளையாட்டு, தீமிதித்தல், நீர் வெட்டும் சடங்கு, வசந்தன் ஆடல், குடுக்கைக் கூறல் எனப் பலவாறான மரபுகள், ஈழக் கண்ணகி வழிபாட்டுப் மரபுகளாகக் காட்சி தருகின்றன.
- இவ்வாறு கேரளத்திலும் ஈழத்திலும் கண்ணகி வழிபாடு செழிப்போடு விளங்கத் தமிழகத்தில் மட்டும் மறைந்து போனமைக்கான காரணங்கள் ஆராயத்தக்கவை.
- தமிழருக்கான புனித அடையாளமாகத் திகழவேண்டிய கண்ணகி வழிபாட்டை அழித்ததின் பின்புலத்தில் நிகழ்த்தப்பட்ட அரசியல் மிகவும் நுட்பம் வாய்ந்தது. இந்த அரசியல் தமிழகத்திலும் நிகழ்ந்துள்ளது; ஈழத்திலும் நிகழ்ந்துள்ளது.
- சைவ சமயத்தின் எழுச்சிக்காகப் பாடுபட்ட ஆறுமுகநாவலர் கண்ணகி வழிபாட்டை மறுதலித்துள்ளார். அவர் ‘சமண சமயத்துச் செட்டிச்சியைத் தெய்வமாக வழிபடுவதா, என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதன் விளைவாக ஒரு காலத்தில் கண்ணகி கோயில்கள் எல்லாம் ராஜராஜேஸ்வரியம்மன் கோயில்களாக மாறத் தொடங்கியுள்ளன. கண்ணகியை மக்கள் வழிபட்டதற்குக் காரணம் பக்தி உணர்வு இல்லை அவள் மேல் கொண்ட அச்சமே காரணம் என்று பிரண கார்த்தி ஹர சிவன் கூறியுள்ளார்.
- இவ்வாறான கருத்துகள் கண்ணகி வழிபாட்டை மறுத்ததோடு அல்லாமல் அவ்வழிபாட்டை மேற்கொள்ளுவோர் இழிந்தோராகவும் காட்சிப்படுத்தியுள்ளன. தவிரவும் கண்ணகி மானிடப் பெண் ஆவாள் என்பதையும் மானிடப் பெண்ணை வணங்குவது மரபில்லை என்பதையும் இக்கருத்துக்கள் தெளிவுப்படுத்தின.
- தமிழில் வழங்கப்பெறும் ஒரு பண்பாட்டுக் கூறு தமிழர்க்குரியது இல்லை என்று கூறும் ஒருவகை உயர் மனப்போக்குடைய கருத்தியல், காலம் காலமாக நிகழ்வதுதான். அவ்வாறான கருத்தியலை உண்மையே என்று நம்பும் ஒருவகை அடிமை மனவியலும் காலம் காலமாகத் தமிழர்க்குரியதாக இருந்து வந்துள்ளதையும் வரலாறு எடுத்து மொழியும்.
- தமிழரின் ஆதி பண்பாட்டிற்குரியதும் தமிழ்த் தாய்த் தெய்வ வழிபாட்டிலிருந்து தோற்றம் பெற்றதுமான கண்ணகி என்பதும் தமிழர்குரியது இல்லை என்று ஆராயும் மனப்போக்கின் எடுத்துக்காட்டாகவே பைனெஸின் ஆய்வினை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- சிலப்பதிகாரம் தோற்றம் பெற்ற காலத்தில் அது தமிழ்த்தேசிய நூலாகவும் தமிழரின் அடையாளங்களுள் ஒன்றாகவும் விளங்கியது. தமிழகத்தை மொழி வழியாகத் ஒன்றிணைத்த முதற்பெரும் தமிழ்க் காப்பியமாகவும் விளங்கியது.
- பெருஞ்சமய உருவாக்கம், அதன் வழிச் சைவமும் வைணவமும் உச்சநிலை அடைந்தமை, வடமொழி இலக்கிய அரசியல், சமண பௌத்த மதக் காழ்ப்புணர்வு முதலானவை சிலப்பதிகாரத்தையும் கண்ணகி வழிபாட்டையும் வீழ்த்தின. இதனால் சிலப்பதிகாரம் சமணர்களால் மட்டுமே பயிலப்பெற்றுப் பரவலாக்கம் பெறாமலேயே கிடந்தது. தமிழ் மண்ணில் கண்ணகி வழிபாடு உருமாறி வழக்கொழிந்து போனது.
- கேரள கண்ணகி வழிபாட்டின் தமிழ் அடையாளம் அழிக்கப்பெற்று மலையாள பகவதியம்மன் அடையாளம் உருவானது. இதற்க்கு துணை நின்றவர் ஆதி சங்கரர்.
- ஈழத்தில் சரிபாதி சிங்களவர்களால் வழிபடப்பெறும் கண்ணகி வழிபாடு பத்தினி வழிபாடு என்னும் பெயரைப் பெற்றதோடு அது பௌத்த மரபிற்கு உரியது என்றும் நிறுவப்பெற்றது.
- கண்ணகி வழிபாடு ஈழத்திற்குப் பரவும் முன்பே பத்தினி வழிபாடு சிங்களவர்களால் வழிபடப்பெற்றது என்றும் கூறப்பட்டது. மற்று, தமிழ்நாட்டில் பத்தினி வழிபாடு எகிப்திலிருந்து பரவியது என்றும் கருத்துரைக்கப் பெற்றது.
- இவ்வாறாகக் கண்ணகி மரபு தமிழ் மண்ணிற்குரிய புனித அடையாளம் எனும் கருத்தியலையும் அது அகண்ட தமிழ் நிலத்தைக் கட்டமைத்த புனித மரபு என்பதையும் ஆனிவேரோடு அழிக்கும் அரசியல் கடந்த ஈராயிரம் ஆண்டுகளாக நடந்து வருவதை அறியமுடிகிறது.
- எதிர்காலத்தில் கண்ணகி மரபை மீட்டெடுக்கவேண்டிய தேவையும் தமிழ்ச் சமுகத்திற்கு உள்ளது. நன்றி:இனம்
முடிவுரை:
செல்லாத்தம்மன்,
மாரியம்மன், கருமாரியம்மன் என தமிழகத்தில் வழங்கப்பெறும் அம்மன்களே கண்ணகி தெய்வம்
ஆகும்.
கண்ணகி வழிபாட்டை மேற்கொள்ளுங்கள், கண்ணகியை கண்ணகியாகவே அடையாளப்படுத்துங்கள். ஆரிய ஆங்கில மாயையில் வெந்து உலன்று சாகாதீர்கள். தமிழர்க்கென மாண்பும், பண்பும், மரபும், வரலாறும், உண்டு என்பதனை மறவாதீர். பெருகட்டும் கண்ணகி வழிபாடு..
நன்றி
கண்ணகி வழிபாட்டை மேற்கொள்ளுங்கள், கண்ணகியை கண்ணகியாகவே அடையாளப்படுத்துங்கள். ஆரிய ஆங்கில மாயையில் வெந்து உலன்று சாகாதீர்கள். தமிழர்க்கென மாண்பும், பண்பும், மரபும், வரலாறும், உண்டு என்பதனை மறவாதீர். பெருகட்டும் கண்ணகி வழிபாடு..
நன்றி
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்ஆன்ற பெருமை தரும்.
நன்றி:
www.venthar.tv
www.inam.com