வாணியரும் கருடனும்
( பருந்தின் தொன்மம் )
முன்னுரை:
வாணியரும்,
அற்றைய வாணிகர்களும் கருடன் எனப்படும் பறவையினோடு சங்க காலம் தொட்டே
தொடர்புபடுத்தப்பட்டு வருகின்றனர். தமிழர்களின் வாழ்வானது தொன்று தொட்டு
இயற்கையோடு இணைந்த வாழ்க்கையினை வாழ்வியல் நெறியாகவே கொண்டு வாழ்ந்து வந்தனர்.
இதற்க்கு சான்று பகர்வது கோவில்களும், ஓவியங்களும், கல்வெட்டுக்களும் ஆகும்.
தமிழகத்தில் பிறந்த அனைத்து தெய்வங்களும் தத்தம் வாகனமாகவோ அல்லது தனக்கு
துணையாகவோ விலங்கினங்களையும் பறவைகளையும் கொண்டிருந்தன.. அவ்விலங்கினங்களையும் பறவையினங்களையும் உடன்
வணங்கி வருதல் தமிழ் மரபின் வழமை ஆகும்.
சிவனுக்கு
துணையாக நாய் எனப்படும் பைரவனும், நல்லரவமும் விடையும், முருகனுக்கு மேடமும்,
மயிலும், அரவமும், இந்திரனுக்கு நல்வெள்ளைக்கரியும், கிருத்திணணுக்கு ஆவும்
பருந்தும், வீட்டிணணுக்கு பின்னாளில் ஐந்தலை அரவமும் பருந்தும், அய்யனார்க்கு
யானையும் பின்னாளில் குதிரையும் துணையாம். இவ்விலங்கினங்கள் துணைசெய்வது
மட்டுமின்றி தன் இறையின் அற்றை வரலாற்றையும், தன்னுள் புதைத்து வைத்துள்ளன.
(இதன் விளக்கங்கள்
பின் வெளியிடப்படும் கட்டுரைகளில் வழங்கப்படும்.)
முதன்மைத்
தமிழக விலங்குகள்:
தமிழகத்தில் பல விலங்கினங்களும் பறவையினங்களும்
இருந்த போதிலும் பின்வரும் இனங்களே முதன்மையாக கருதப்பட்டன. வெள்ளாடு, காளை, எருது, பசு, சேவல், கோழி, யானை, நாய், பூணை,
அரவம், ஆமை, கொக்கு, கிளி, நாரை, புறா, மயில், காகம், பருந்து, அன்னம், நுணல்,
மீன் சிங்கம் மற்றும் புலி போன்ற விலங்கினங்களும் பறவைகளும் தமிழர்களால்
பயன்படுத்தப்பட்டும், தெய்வங்களாக வணங்கப்பட்டும் வந்துள்ளன. இதில் விதிவிலக்கானவை
நுணல், ஆமை, கொக்கு, பருந்து, பூனை, சிங்கம், புலி போன்றவை இவைகள் சின்னங்களாகவும்
வழிகாடியாகவும் பயன்படுத்தப்பட்டவை.
வேளாண்மைக்கு – ஆடு, எருது, காளை, பசு, யானை.,
ஊஞ்சோற்றுக்கு - கோழி, சேவல், ஆடு. மீன்
காவலுக்கும் வேட்டைக்கும், - நாய்
ஆன்மீகத்திற்க்கு - அரவம், பருந்து,
சகுனத்திற்க்கு - காகம், பருந்து, நுணல், பூனை
அழகியலுக்கு -
மயில், அன்னம்,
வழிகாட்டியாக -
கொக்கு, ஆமை, பருந்து.
சின்னங்கள் -
சிங்கம், புலி.
தமிழக
இறையோர்களுக்கு கொடிய விலங்கினங்கள் வாகனமாய் உருப்படுத்தும் வழக்கம் இல்லை. ஐந்தினைகளில் பாலை
மட்டும் கொற்றவை வழிபாட்டியலில் சிங்கக் கொடியும்,
பசுங்கிளியும்
ஏந்தியவளாக உருப்படுத்தப்படுகின்றாள்.
பருந்து என்ற கருடன்:
கழுகும்
பருந்தும் ராசாளி இனத்தைச் சேர்ந்தவையாகும். பருந்தும் கழுகும் ஊணுண்ணிப் பறவையாகும். தமிழில் இவ்வினம் எழால், கழுகு, கங்கு, கங்கம், கூளி, பருந்து, பணவை, பாறு, பூகம், வல்லூறு எனப் பலவாறாக அழைக்கப்படுகின்றன. இவற்றில் பருந்து மூன்று வகைப்படும்.
1. பெரும்பருந்து
2. செம்பருந்து
3. கரும்பருந்து
பெரும்பருந்து;
பெரும் பருந்து இப்பறவை ஊன்
உண்ணிப் பறவைகள் இனத்தைச் சார்ந்தவையாகும். இவற்றின் வாழ்விடம் ஆசியப் பகுதிகளில்
அமைந்துள்ள வெப்பமண்டலக்காட்டுப் பகுதிகள் ஆகும். தோற்றத்தில் பருந்து போலும்
வல்லூறு போலும் காணப்பட்டாலும் இவை இது அக்விலா என்ற தனிப் பேரினத்தைச்
சார்ந்தவையாகக் கருதப்படுகிறது.
பொதுவாக இந்தியாவில் மேற்கு தொடற்ச்சி
மலைப்பகுதியில் அதிகமாகக் காணப்படுகிறது. மேலும் நேபாளம், அசாம், இமயலைப்பகுதி, கிழக்குத்தொடற்ச்சி மலைப்பகுதி போன்றஇடங்களிலும், இலங்கை, பர்மா, தாய்லாந்து,
கைன், இந்தோனேசியா,
சுமாத்திரா, போர்னியோ,
பிலிபைன்ஸ், சுவெசி, மேலும் சும்பாவா போன்ற
நாடுகளிலும் பரவியுள்ளது.
செம்பருந்து:
செம்பருந்து செம்மண் நிற
இறக்கைகளைக் கொண்டு உடலின் நடுப்பகுதியை வெண்ணிறமாக உடைய பருந்து. இந்து சமயப்
புராணங்களில் திருமாலின் வாகனமாக வரும் செம்பருந்தினைக் கருடன் என்ற பெயரில் வணங்குவர். இவை இந்திய துணைக்கண்டம், தென் கிழக்காசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில்
காணப்படுகிறது. இதன் தலை, கழுத்து, நெஞ்சு மற்றும் சிறகின் விளிம்பு தனிப்பட்ட வெள்ளை
நிறத்தில் காணப்படும். இது கரும்பருந்தின் நெருங்கிய உறவினர். இது சில சமயம் 5000 அடிக்கு மேலுள்ள
இமயமலையிலும் காணப்படும்.
இதைப் போன்ற பருந்து வகைகள்
இந்தியா, இலங்கை, பாக்கித்தான்,
வங்காளம்
போன்ற நாடுகளில் அதிகம் காணப்படும்.சாவகத்தில் இந்த இனம் அழிந்து போய்விட்டது. பெரும்பாலும் இப்பறவை இறந்த மீன்களை உணவாகக் கொள்வதால்
கடற்கரைப் பகுதிகளிலும் உள்நாட்டு நீர்நிலைகளிலும் காணப்படும். கருடன் என்ற
பெயருடைய செம்பருந்து ஒன்றை இந்துக்கள் கடவுளாகவும், கரியமாலின்
வாகனமாகவும் வழிபடுகின்றனர். இந்தியாவிலும்,
ஜகார்ட்டாவிலும்
இதை பார்த்தால் நற்பேறுக்கான அறிகுறியென நம்பப்படுகிறது.
கரும்பருந்து:
கரும்பருந்து அல்லது கள்ளப் பருந்து என்பது ஒரு நடுத்தர அளவுள்ள கொன்றுண்ணிப் பறவை ஆகும்.
இப்பறவை தவிட்டு நிறமுடையது. பறக்கும்போது இதன் வால் பிளவுபட்டு தோன்றுவது, இதைப் போன்ற பறவைகளில் இருந்து வேறுபடுத்திக்காட்டும்
அடையாளமாகும்.
ஆடு, மாடு அறுக்குமிடங்கள், மீன் பிடிக்குமிடங்கள், மீன்
விற்குமிடங்கள் போன்ற இடங்களில் வட்டமடிப்பதைக் காணலாம். மேலும் கரும்பருந்தின் ஒருவகை சிறுகரும்பருந்து ஆகும். இது
ஆஸ்திரேலியாவில் காணப்படும்.
ஆசியாவின் தொன்மைச்சின்னம்
பருந்து:
பல நாட்டுக் கொடிகளில் கருட உருவம் காணப்படுகிறது.
இந்தோனேசியா, தாய்லாந்து நாடுகளின் தேசிய சின்னமாக கருடன்
உள்ளது. இந்தோனேசியா நாட்டின் பயணிகள் விமான நிறுவனத்தின் பெயர் கருடா ஆகும்.
மனோ,
ஹவாய் பல்கலைக் கழக அருங்காட்சியகத்தில் உள்ள, 12-13ஆம் நூற்றாண்டு கம்போடியா கெமர் பேரரசின் கருடச் சின்னம் காணப்படுகின்றது.
மங்கோலிய நாட்டின் தலைநகர் உலன்படாரின் சின்னம் கருடன். ஆகும். காத்மாண்டு தர்பார்
சதுக்கத்தில் கருடன். காணப்படுகின்றது. கிழக்கு ஜாவாவில், பாலியில்
கருட சின்னம் காணப்படுகின்றது.
அங்கோர்வாட், கம்போடியா, கருட
வாகனத்தில் அமர்ந்து விஷ்ணு போரிடும், 12ஆம் நூற்றாண்டு
சிற்பம் காணப்படுகின்றது.
8ஆம் நூற்றாண்டு இறக்கை அற்ற
கருடச் சிற்பம், கொபுஜி, ஜப்பானில்
காணப்படுகின்றது. மேலும் எகிப்தில் பருந்து கடவுல் காணப்படுகின்றார். சிந்து சமவெளியில்
கிடைத்த முத்திரைகளில் பல கருட முத்திரைகள் கிடைத்திருக்கின்றன.
குறிப்பு: பருந்தும்
கழுகாவும், கழுகு பருந்தாகாவும் மாற்றி மாற்றி வெளிநாடுகளில்
உருவகப்படுத்தப்பட்டுள்ளன.
பருந்தில் சாதீயம்:
உயர்வு/தாழ்வு, உயர்பிறப்பு/தாழ்பிறப்பு,
இழி-பிறவினன், தூய்மை/தீட்டு என தாழ்த்தப்பட்ட
மக்கள் மீது தீண்டாமையை திணித்த பார்ப்பனியம், பறவைகளின்
மீது, 'அழகு/ அழகின்மை' என்ற
பாகுபாட்டை ஏற்றி, தனது மேலாதிக்கத்தை எவ்வடிவிலும் கோலோச்ச
துடிக்கிறது. அதன் வெளிப்பாடாகவே, செம்பருந்து என்ற அழகிய
தமிழ்ப் பெயர், 'பார்ப்பனப் பருந்தாகி'யது.
கரும்பருந்து என்ற பெயர், 'பறைப் பருந்தாக' மாறியது. அமெரிக்க அரசின் இலட்சினையாக உள்ள 'Bold Eagle' -இன் அழகையும், அதிகாரத்தையும் பெற்ற சாயலாக,
'செம்பருந்தை' கண்ட பார்ப்பன 'பறவையியல் அறிவாளி' எவரோ திட்டமிட்டு, 'பார்ப்பனப் பருந்து' என்ற பெயரைச் சூட்ட,பல பத்தாண்டுகளுக்கு அதுவே நிலைநிறுத்தப்பட்டது. இதற்கு எதிர்மறையாக,
செம்பழுப்பு நிறத்தில், சற்று வெளிறிய மெல்லிய
வெள்ளைக் கோடுகளோடு தோற்றமளிக்கும், 'கரும் பருந்தை' தீண்டத்தகாத மனிதனுக்கு ஒப்பீடு செய்து, 'பறைப்
பருந்து' என்ற பெயரை பார்ப்பனிய அறிவாளி எவரோ சூட்ட நீண்ட
நாட்களுக்கு அதுவே வழக்கத்திலும், நூல்களிலும் இருந்தது
வேதனைக்குரிய செய்தியாக உள்ளது.
தமிழகத்தில்
பறவைகள் உள்ளிட்ட உயிரினங் களுக்கு வட்டாரத்திற்கேற்ப பலப் பெயர்கள் வழங்கப்
பெறுகின்றன. 'பறைப் பருந்து', 'பார்ப்பனப்
பருந்து'(Bhramani Kite) போன்ற பெயர்கள் வட
மொழிஆதிக்கத்தால்விளைந்தவை என்றும்,இவை இடைக்காலத்தில்
நுழைக்கப்பட்டிருக்கலாம் என்றும் தமிழிலக்கியத்தில் பாடப்பெற்றுள்ள உயிரினங்கள்
குறித்து பல நூல்களை எழுதியுள்ள தமிழறிஞர் பி.எல்.சாமி கூறுகிறார்.
பறவைகளின்
பெயர்களில் சாதிய குறி யீட்டிற்கான அடிப்படைக் காரணத்தை ஆதாரப்பூர்வமாக
அறியமுடியவில்லை. இருப்பினும், தாம்முதன்முதலாக நுழைந்த
ஆங்கில வழிக் கல்வியின் மூலமும் பெருந்திரளான மக்கள் சமூகத்தை அடக்கியாள முடியும்
என்ற நம்பிக்கை கொண்ட பார்ப்பனச் சமூகம், இவ்விரண்டு
பறவைகளின் ஆங்கிலப் பெயர்களை, Pariah Kite’’ (கரும்பருந்து),
'Brahminy Kite’ (செம்பருந்து)
என மாற்றியதில் இருந்து அறிய முடிகிறது. சாதிய படிநிலையில் மனிதன் அல்லது
பறவைகள் (உயிரினங்கள்) என்ற வேறுபாடில்லாமல் கருத்தியலை திணிப்பதிலேயே தங்களது
வெற்றி அடங்கியுள்ளதாக பார்ப்பனர்கள் கருதி, தமிழில்
மட்டுமின்றி ஆங்கிலத்திலும் பெயர் மாற்றம் செய்திருப்பார்கள் என்று கருத்தும்
தவிர்க்க இயலாதபடி உள்ளது.
உயிரினங்களின் மீதான சாதிய குறியீடாக விளங்கும்
பெயர்கள் குறித்து அயோத்திதாசப்பண்டிதரின் கீழ்கண்ட மேற்கோள் முக்கியத்துவம்
பெற்றது. 'நம்முடைய பிராமணவேசங்களும்நிலைத்து சுகமடையலாம்
என்று எண்ணிமிலைச் சவேசப் பிராமணர்களும், இத்தேச
சிற்றரசர்களுக்கும், கருப்பாக இருக்கும் பருந்தைப், 'பறைப் பருந்தென்றும்' (கரும்பருந்து - Black
Kite) வெண்மெயாயிருக்கும் பருந்தைப், 'பாப்பாரப்
பருந்தென்றும்' (செம்பருந்து – Brahmini Kite) கருப்பாக இருக்கும் மைனாவைப்,'பறை மயினாவென்றும்',
கருப்பாக இருக்கும் பாம்பைப், 'பறைப் பாம்பு'
என்றும், வெண்மெயாய் இருக்கும்பாம்பைப் பாப்பாரப்பாம்பு'என்றும் சொல்லி வரும்படியானக்
கற்பனையில் விழுந்து பார்ப்பானென்னும் மொழியையும், பறையன்
என்னும்மொழியையும்பரவச்செய்துவந்தார்கள்' என்று கூறுவதோடு,
அவர்கள் கற்பித்துள்ளவாறு கறுப்பாயிருக்கும் நாயைப் பறை நாயென்றும்,
வெண்மெயாயிருக்கும் நாயைப் பாப்பார நாயென்று வழங்கினால் அம்மொழி
தங்களை இழிவுபடுத்தும் என்று கருதி பறை நாயென்னும் மொழியை மட்டிலும் பரவச் செய்து
திராவிட பௌத்தர்களை இழிவுபடுத்தி வந்தார்கள்'.அழகு/அழகின்மையை
தங்களுக்கு சாதகமாக பார்ப்பனர்கள் பயன்படுத்தியதை அயோத்திதாசர் குறிப்பிடுகிறார். (நன்றி;கீற்று)
ஆதாரம்: Miron winslow A
comprehensive Tamil and English Dictionary pruntu s. [vul. பராந்து.] Hawk, kite, சேனம்.--There are different kinds, கரும் பருந்து or பறைப்பருந்து, குடுமிப்பருந்து, பெரும் பருந்து, செம்பருந்து, முகவெள்ளைப்பருந்து or நரை யன், (c.) பருந்தும்நிழலும்போலே. As
closely as the hawk and its shadow. பருந்தின்வீழ்வு, v. noun.
வாணிகரும் பருந்தும்:
வளையல்.பறாஅப் பருந்தின்கட் பற்றி (கலித். 147). பாலை நிலத்து ஊன் உண்ணும் ஒரு பறவை: "இனம் தீர் பருந்தின் புலம்பு
கொள் தெள் விளி" (குறு:207:3). எனப் பருந்து சுட்டப்பெற்றது. தொல்காப்பியர் உணர்த்திய
சமுதாயத்தில் அந்தணர், அரசர் என்ற முறைக்குப் பின்பாக
அமைபவர்கள் வணிகர்கள். “வைசியன் பெறுமே வாணிக வாழ்க்கை”
(மரபியல்.78) என்று வணிகருக்கான இலக்கணம் தொல்காப்பிய மரபியலில் காட்டப்பெறுகின்றது.
மெய்திரி வகையின் எண்வகை உணவின்
செய்தியும் வரையார் அப்பாலான (மரபியல். 623)
என்ற நூற்பா நெல், காணம், வரகு, இறுங்கு, திணை, சாமை. புல்லு, கோதுமை
ஆகியனவற்றை உருவாக்குவதிலும், பேணுவதிலும், விற்பதிலும் வணிகருக்குப் பங்கு உண்டு என்று சுட்டப்பெறுகின்றது.
வில்லும் வேலும் கழலுங் கண்ணியும்
தாரும் ஆரமுந் தேரு மாவும்
மன்பெறு மரபின் ஏனோர்க்குரிய (மரபியல். 84)
என்ற நூற்பாவின்படி
வில்,வேல், கழல். கண்ணி,
தார், ஆரம், தேர்,
குதிரை ஆகியனவற்றை வைத்துக்கொள்ளும் மரபுகள்
வணிகருக்கும் உண்டு. வேளாளருக்கும் உண்டு என்று இலக்கணம் வகுக்கிறார்
தொல்காப்பியர். மேலும் வணிக வாகையை ஆறு பகுதியாக உரைக்கின்றது தொல்காப்பியம். ஓதல்,
வேட்டல், ஈதல், உழல்,
வணிகம், நிரையோம்பல் ஆகிய ஆறும் வணிகர்க்கு
உரியனவாகும். உழுதல், நிரையோம்புதல் ஆகிய முறையே மருதநில,
முல்லை நிலச்செயல்பாடுகள் ஆகும். இச்செயல்பாடுகள் வளர்ந்து வணிக
மரபாகியுள்ளன. நெய்தலிலும் உப்பு, மீன் விற்றல் ஆகியனவும் வணிகமுறைமையை
உடையனவாகும்.
“நெடுநுகத்துப் பகல்போல்
நடுவுநின்ற நல்நெஞ்சினோர்
வடு அஞ்சிவ வாய்மொழிந்து
தமவும் பிறவும் ஒப்பநாடிக்
கொள்வதூஉம் மிகைகொளாது, கொடுப்பதூஉம் குறைகொடாது
பல்பண்டம் பகர்ந்து வீசும்
தொல் கொண்டித் துவன்று இருக்கை”(பட்டினப்பாலை, 206- 2013)
என்று வணிக வாழ்க்கை
பற்றிக் குறிப்பிடுகின்றது பட்டினப்பாலை.
மதுரைக்காஞ்சி வணிகத்தெரு ஒன்றைப் பின்வருமாறு காட்சிப்படுத்துகின்றது.
“அறநெறி பிழையாது ஆற்றின் ஒழுகிக்
குறும்பல் குழுவின் குன்று கண்டன்ன
பருந்து இருந்து உகக்கும்பல்மாண் நல்இல்
பல்வேறு பண்டமோடு ஊண்மலிந்து கவினி
மலையவும் நிலத்தவும் நீரவும் பிறவம்
பல்வேறு திருமணி முத்தமொடு பொன்கொண்டு
சிற்நத தேஎத்துப் பண்ணியம் பகர்நரும்” (மதுரைக்காஞ்சி, 500-507)
என்ற நிலையில் வணிக
வீதி அமைந்திருந்ததாக மதுரைக்காஞ்சி குறிப்பிடுகின்றது. வணிகர்களின் வீடு பருந்து
வந்தமர்ந்து செல்லும் அளவிற்கு உயர உயரமானக் கோபுரங்களை உடையதாக இருந்ததாம்.
அவ்வில்லில் நீரில் கிடைக்கும் பொருள்களையும், நிலத்தில்
கிடைக்கும் பொருள்களையும் மணிகள், முத்துக்கள், பொன் ஆகியவற்றை அறநெறி பிறழாமல் விற்பவர்கள் என்று காட்டி அத்தகையோர்
உறையும் தெரு வணிகத்தெரு என்று குறிக்கின்றது மதுரைக்காஞ்சி. அறவிலை வணிகன் என்று
வணிகர் அறவழி நின்றதைப் புறநானூற்றின் 134 ஆம் பாடல்
குறிக்கின்றது.
இவ்வாறு தொல்காப்பியர் சுட்டிய வணிக மரபுகள் சங்க இலக்கியங்களில்
பின்பற்றப்பெற்றுள்ளன.
சமஸ்கிருதத்தில் பருந்து
ரிக் வேதத்தில் ஸ்யேன,
சுபர்ணா முதலிய
சொற்களால் இப்பறவைகள் குறிப்பிடப்படுகின்றன. இந்திரன், வருணன் போல பருந்தையும் ஒரு தேவதையாக
வைத்து ஒரு துதி உள்ளது (4-27).
மஹா சுபர்ண என்று
சதபத பிராமணத்தில் சொல்லப்படுகின்றது (12-2,3,7)
சகன் என்று ஒரு
பறவை குறிப்பிடப்படுகிறது;
இது பற்றி
யாருக்கும் தெளிவாகத் தெரியவில்லை; பருந்தோ,
கழுகோ என்று சந்தேகத்துடன்
எழுதுவர்! (தைத்ரீய சம்ஹிதை 3-2,1,1)
சுபர்ண
இதற்கு இரண்டு பொருள் உண்டு; நல்ல இறக்கை உடைய; நல்ல இலை உடைய. இது கழுகு அல்லது கருடன் அல்லது பருந்து
போன்ற பறவை என்று ரிக்வேத உரைகாரர்கள் எழுதுவர். சுபர்ண என்ற சொல்லுக்கு
அன்னம் என்ற பொருளும் உண்டு என்று விஷ்ணு சஹஸ்ரநாம உரை கூறுகின்றது. ஸ்யேன என்ற சொல்லாலும் இப்பறவையை வேதம்
குறிப்பிடும். சுபர்ணாவின் அரசனே கருடன் என்று அதர்வண வேதம் சொல்லும்; புராணங்களில் கருடனே விஷ்ணுவின் வாகனமாக அமைந்தது.
வைணவத்தில் பருந்து
கருடன்
(Garuda), காசிபர் - வினதை தம்பதியர்க்கு பிறந்த
பறவை இனங்களின் அரசன். சூரியனின் தேரை ஓட்டும் அருணன் இவரின் தம்பி. காசிபர் –
கத்ரு தம்பதியர்க்கு பிறந்த நாகர்கள், கருடனின்
எதிரிகள். திருமாலின் வாகனமாக அமைந்தவர் கருடன். சமஸ்கிருத மொழியில் கருடன்
என்பதற்கு பெரும் சுமையைச் சுமப்பவன் என்று பொருள். வைணவ புராணங்களில் விஷ்ணுவின்
பெரிய திருவடியாக கருடன் போற்றப்படுகிறார். வைணவ சமயத்தின் பெருமாள் கோயிலின்
மூலவரை வணங்குவதற்கு முன்னர் கருடனை வழிபட வேண்டும் என்பது வைணவ ஆகமத்தின்
நியதியாகும். விஷ்ணுவின் வாகனமாக கருடன் இருப்பதால், வைணவர்கள்
இவரைப் பெரிய திருவடி என்பர். சிறிய திருவடி – அனுமார்
ஆவார்.
ஒரு
முறை வானத்தில் சென்று கொண்டிருந்த இந்திரனின் உச்சைச்சிரவமென்னும் குதிரையின்
நிறம் குறித்து, கத்ரு கேட்டதற்கு, அதன்
நிறம் வெண்மை என வினதை கூற, கத்ரு அதன் நிறம் கருமை எனக்
கூறியதால், குதிரையின் சரியான நிறம் குறித்த போட்டியில்
தோற்றவர், வென்றவர்க்கு அடிமை என ஒப்பந்தமாயிற்று. கத்ரு
போட்டியில் வெல்ல வேண்டி தன் மக்களான ஆயிரக்கணக்கான கருநாகங்களை அழைத்து, உச்சைச்சிரவம் எனும் இந்திரனின் தேவலோக குதிரையின் உடலைச் சுற்றிக்
கொள்ளுங்கள் என ஆணையிட, அவ்வாறே கருநாகங்கள் உச்சைச்சிரவம்
என்ற வெண் குதிரைச் சுற்றிக் கொள்ள, குதிரை பார்ப்பதற்கு
கருநிறமாக மாறியது. கத்ரு உடனே வினதையை அழைத்துக் கொண்டு கருமையாக இருந்த
உச்சைச்சிரவம் எனும் குதிரையைக் காட்டினாள். வினதையும் குதிரையின் நிறம் கருமை என
ஏற்றுக் கொண்டு, வினதை தன் குழந்தைகளான கருடன் மற்றும்
அருணன் உடன் நாகர்களின் தாயான கத்ருவுக்கு அடிமையானாள்.
(இக்கதையானது காடுகளில் வாழ்ந்த நாகர்களின் இனத்தை அடிமைப்படுத்தி
நாட்டை விட்டு வெளியேற்றிய கதையை கூறுகின்றது. அவ்வாறு விரட்டப்பட்ட நாகர்கள்
இன்றைய நேபாளத்தில் குடியேறினர். மேலும் புராணங்களில் குறிப்பிடப்பட்ட கருடனும், இங்கு குறிப்பிடப்படும் கருடனும் ஒன்றே. கருடன்
என்னும் பருந்தானது கிருட்டிணரின் வான் படை தலைவரை குறிப்பிட்டது ஆகும். கிருட்டிணரின்
வான்படைத் தலைவரே கார்க்கோடகன் அல்லது காளிங்கன் என்ற நாகர் இன தலைவரை போரில் வெற்றி
கொண்டார். எனவே வான்படைத் தலைவர் வாகனமாக உருவகிக்கப்பட்டர்.
வேத
கால பருந்துக்கும் இக்கதையில் குறிப்பிட்ட பருந்துக்கும் எத்தொடர்பும் இல்லை. கிருட்டிணனுக்கு
மட்டுமே கருடன் வாகனமாகும், வீட்டிணனின் வாகனம் ஐந்தலை அரவம் மட்டுமே. பின்னாளில்
கிருட்டிணன் வீட்டிணனின் அவதாரமாக சித்தரிக்கப்பட்டது. கருடனின் கதை ஒரு வரலாற்று நிகழ்வு ஆகும்.)
வெற்றியின்
நினைவாக நவ நாகங்களில், ஆதிசேசனை இடது கால் நகத்திலும், குளிகனை கழுத்தின் பின்புறத்திலும், வாசுகியை பூணூலாகவும், தட்சகனை
இடுப்பிலும், கார்க்கோடனை
கழுத்து மாலையாகவும், பதுமம்
மற்றும் மகாபதுமம் எனும் நாகர்களை இரண்டு காதணிகளாகவும், சங்கசூடனை தலைமுடியிலும் அணிந்திருப்பார்
கருடன்.
பருந்திடம் கற்கவேண்டியவை:
பருந்துகளின் பார்வை
நம்பமுடியாததும் அசாத்தியமானதும்.சுமார் 5 கிலோமீட்டர்
வரைக்கும் இதன் தெளிவான பார்வை எல்லை இருக்குமாம்.இதன் அவதானம் உன்னிப்பானது. எல்லாவற்றையும் மிக கூர்மையாக கவனித்த பின்னர் தான்எச் செயலிலும் ஈடுபடும். இதை போல நாம் எப்போது
தூர நோக்குடன் செயற்பட வேண்டும்.அமைதியாக இருந்தாலும் கலவரமாக இருந்தாலும் எமது
அவதானிப்புகள் கூர்மையாக இருக்க வேண்டும்.
பருந்துகள் தானாக
இறந்த விலங்கு மாமிசத்தை உண்பதில்லை.தானே வேட்டையாடி உடனடியாக உண்ணும் பழக்கம்
கொண்டது.
அடுத்தவர்
உருவாக்கிய பாதையில் செல்வது வழமையா நடைமுறைகள் என கட்டுபட்டு கிடக்காமல் புதிய வெற்றிகரமான பாதைகளில் செல்லுங்கள் என்பதே இதன் மூலம்
சொல்லப்படும் பாடம்.
மற்றப் பறவைகள்
எல்லாம் மழைக்கு ஒதுக்கம் தேடும். ஆனால் பருந்தின் அணுகுமுறை சற்று
வித்தியாசமானது.மழையை தவிர்க்க முகில்களுக்கு ஊடக பறந்து அதை கடந்து முகிலுக்கு
மேல் பறக்கும்.உலகத்துக்கு தான் மழை பெய்யும் அதற்கு பெய்யாது. அதை போல நாம் பிரச்சனைகளுக்கு ஒதுங்காமல்.தடைகள்
அகலட்டும் என்று காத்திருக்காமல் பிரட்சனைகள் ஊடாக பிரட்சனைகளை கடந்து அதை தாண்டி
பயணிக்க வேண்டும்.
ஒன்று இரையை தூக்கும் முன்னர் பல நேரம்
வட்டமிட்டு
தன்
இரையையும் சூழலையும் உறுதி செய்தபின்னரே இரையை தூக்கும். வாழ்கையில் எல்லோரையும் நம்பி
விடவும் முடியாது.எல்லாத்தையும் சந்தேக படவும் முடியாது.நம்பித்தான் ஆக வேண்டும்.நம்ப முன்னர் ஒன்றுக்கு பலமுறை
உறுதிபடுத்தி கொள்ளுங்கள்.
தாய் பருந்து ஒரு
குறித்த நாட்களின் பின்னர் தன் குஞ்சுகளை கூட்டினுள் இருக்க அனுமதிக்காது.ஒவ்வொரு
குஞ்சாக பயிற்சிவிக்கும். கூட்டில் இருந்து குஞ்சை தள்ளி
விடுமாம்.குஞ்சு பதறிப்போய் சிறகடித்து பறக்க முயலும்.ஆனால் அதனால் முதல் தடவையே
பறக்க முடியாது.அது தாய்க்கும் தெரியும் கொஞ்சம் சிறகடித்து குஞ்சு தினற தாய்
திடீரென குஞ்சுக்கு கீழால் பறந்து குஞ்சை தாங்கும் .இந்த ஆரம்ப கட்ட பயற்சி . கீழே விழும் குஞ்சுகளை தன் சிறகில் ஏற்றி
கொண்டு தாய் பருந்து தூர உயர பறக்குமாம் .பறக்கும் போது திடீரென குஞ்சை
சரித்து விடும் .சற்றும் எதிர்பாராத குஞ்சு சட சட வென சிறகடிக்கும் .சற்று தாமதித்து
தாய் பறவை குஞ்சை தாங்கும். கூடு திரும்பும் போது பெரும்பாலும் குஞ்சு தானாக
பறந்தே வருமாம். இங்கு நமக்கு சொல்லி தரப்படும் பாடம் பயிற்சி, கடுமையான பயற்சி தேவை என்பதாகும். போர்ப் பயிற்சியின்
போது பருந்து வியூகம் பின்பற்றப்படும்.
கருடன் வ்ழிபாடு பற்றிய
செய்திகள்:
கருட
பெருமான் திருமாலின் இரண்டு திருவடிகளையும் தம் இரு கரங்களால் தாங்கி ஊர்வலமாக
வரும் காட்சியே கருட சேவை எனப்படும். அப்போது பெருமான், கருடன் ஆகிய இருவரின் அருளும் ஒருங்கே கிடப்பதைப் பக்தர்கள் புனிதமாகக்
கருதுகிறார்கள்.
திருமாலைப் போல அணிமா, மகிமா, லகிமா, கரிமா, ஈஸித்வம், வசித்வம், பிராபதி -
பிராகாம்யம் ஆகிய எட்டு விதமான சம்பத்துக்களாக இருந்து கொண்டு, பக்தர்களுக்கு அவற்றைத் தருபவராக ஸ்ரீ கருடன் விளங்குகிறார்.
கருடனுக்கு
சார்பர்ணன் என்றொரு பெயருண்டு. கருடனுடைய மனைவியர் ருத்ரா, சுகீர்த்தி.
கருடனுடைய
மகிமையை ஏகாதசி, திருவோணம் போன்ற புண்ணிய தினங்களில்
படிப்பவர்களும், கேட்பவர்களும் கடும் நோய்களில் இருந்து விடுதலை
பெறுவர்.
கேரள
மன்னரான சுவாதி திருநாள் இசை வித்தகராக மட்டுமின்றி பல கலைகளிலும் வல்லவராக
இருந்ததற்குக் கருடோபாசனையே காரணம்.
கொலம்பஸ்
கடலில் திக்குதிசை தெரியாமல் தவித்த போது கருடன் வானத்தில் வட்டமிட்டு திசை
காட்டியதாக சரித்திரம் சொல்கிறது.
கருடனுக்கு
கருத்மான், சாபர்ணன், பந்தகாசனன்,
பதகேந்திரன், பகிராஜன், தார்ச்டயன்,
மோதகாமோதர், மல்லீபுஷ்யபிரியர், மங்களாலயர், சோமகாரீ, பெரிய
திருவடி, விஜயன், கிருஷ்ணன், ஜயகருடன், புள்ளரசு, கலுழன்,
சுவணன்கிரி என்றும் ஓடும்புள் கொற்றப்புள் என்றும் பெயர்கள் உண்டு.
வைணவ
ஆழ்வார்கள் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் 36 இடங்களில்
கருடனை போற்றிப் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள்.
சிவகங்கை
மாவட்டத்தில் -காரைக்குடியை அடுத்துள்ள அரியக்குடி. இங்கு எழுந்தருளி இருப்பவர்
ஸ்ரீநிவாசப் பெருமாள். இங்கு மூலைக் கருடன் வழிபாடு சிறப்பானது. நல்லது நடக்கவும்.
தீமைகள் மறையவும் இங்கு மூலைக் கருடனுக்கு சிதறுகாய் உடைப்பது வழக்கம்.
மௌரியர்கள்
கருடனை மிகவும் அதிர்ஷ்ட தெய்வம் என்று கருதினார்கள்.
குப்தர்காலத்தில்
குமார குப்தன், சமுத்திர குப்தன் என்ற இரண்டு அரசர்கள் தங்கள்
பொன் நாணயங்களில் கருடனைப் பொறித்தார்கள். கருட முத்திரை தங்கள் நாட்டிற்கு வளம்
சேர்க்கும் என்று அவர்கள் நம்பிக்கைப்படி குப்தர்கள் காலம் வரலாற்றின்
பொற்காலமாகத் திகழ்ந்தது.
சந்திரகுப்த
விக்ரமாதித்தன் முதன் முதலில் நாட்டின் நலனைக் கருதி டெல்லியில் ஒரு கருட
ஸ்தம்பத்தை ஸ்தாபித்தார்.
பதினெட்டு
நாட்கள் நிகழ்ந்த மகாபாரதப் போரில் கடைசி நாள் போர் கருட வியூக யுத்தமாக நடந்தது.
இதுவே பாண்டவர்களுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது.
நேபாள நாட்டில் கருட நாக யுத்தம்
என்று ஒரு விழா நடைபெறுகிறது. அப்பொழுது கருடனுடைய திருமேனியில் வியர்வைத் துளிகள்
தோன்றும். அதைத் துணியால் ஒற்றி எடுத்து அதை அரசருக்கு அனுப்புவார்கள். அந்தத்
துணியின் நூலிழையை பாம்பு கடித்த மனிதனுக்கு சுற்றினால் பாம்பு கடி விஷம் உடன்
இறங்கி விடும்.
கருடனால்
ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கொண்டு வரப்பட்ட வைரமுடி என்கிற அணிகலன் தற்பொழுது
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்கோட்டை என்னும்
திருநாராயணபுரத்து பெருமாளுக்கு சூட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி இன்றும்
ஒவ்வொரு பங்குனி ஏகாதசியில் வைரமுடி சேவை என்று திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
பிரான்ஸ்
சக்ரவர்த்தி மாவீரன் நெப்போலியனுடைய கொடி கருடக் கொடியாகும். எனவேதான் அவரால்
பலவெற்றிகளை அடைய முடிந்தது.
ஸ்ரீவில்லிப்புத்தூரில்
ரங்க மன்னர் ஆண்டாளுடனும் கருடனுடனும் ஒரே ஆசனத்தில் காட்சி தருவது வேறு எந்த
தலத்திலும் இல்லாத சிறப்பு. இப்படி இங்கு கருடனுக்கு தனிமரியாதை கொடுப்பதன் காரணம்
கருடன் பெரியாழ்வாராக அவதரித்ததால் மாமனார் ஸ்தானம் ஆகிறது.
29. பாண்டி
நாட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருத்தங்கல்லில் (திருத்தண்கால்) கோவிலில்
கருடாழ்வார் சர்ப்பத்துடனும், அம்ருத கலசத்துடனும்
காட்சியளிக்கிறார்.
நம்பாடுவான்
என்ற ஹரிஜன வைணவ பக்தனுக்காக கருடாழ்வாரும், கொடி மரமும்
சற்று விலகி உள்ள தலம் திருக்குறுங்கடி.
ஆயிரம்
ஆயிரம் சுப சகுணங்கள் கிட்டினாலும் ஒரு கருட தரிசனத்திற்கு ஈடாகாது! தன்னிகரற்றது
கருட தரிசனம்!
கெட்ட
சகுணங்கள் துர்சேட்டைகள், துர் குறிகள் போன்ற அசுபங்கள் அனைத்தும் கருட
தரிசனத்தால் சூரியனைக் கண்ட பனிபோல் பறந்தோடிவிடும்!
பறவைகளில்
நான் கருடன் என்று கருடனைப்பற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது பகவத் கீதையில்
கூறியுள்ளார்.
நவரத்தினங்களில்
ஒன்றான பச்சை நிறமுள்ள மரகதத்திற்கு கருடோத்காரம் அல்லது காருடமணி என்று பெயர்.
கருடனால் விழுங்கி துப்பப்பட்ட பலாசுரன் என்ற அசுரனின் எலும்புகளே மரகதமாக மாறின.
இதை அணிவதால் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களால் துன்பம் ஏற்படாது.
அமிர்தக்
குடத்தை எடுத்துவர தேவலோகம் சென்ற கருடன், அங்குள்ள
தர்பைப் புல்லையும் பூலோகத்திற்குக் கொண்டு வந்தார். அமிர்தத்துடன் தர்ப்பையையும்
கொண்டு வந்ததால் அதனை அமிர்தவீர்யம் என்ற பெயரில் அழைக்கின்றனர்.
ஒரு
காலத்தில் சுவேதத் தீவில் இருந்த பாற்கடலின் பால் கட்டிகளை தன்னுடைய சிறகு
முழுவதும் அப்பிக்கொண்டு வந்து எங்கும் உதறினார் கருட பகவான். அவற்றையே ஸ்ரீ
வைஷ்ணவர்கள் திருமண் என்று அணிந்து கொள்கின்றனர்.
ஸ்ரீமந்
நாராயணனின் அவசர காரியத்திற்காக, கருட பகவான் அவரைத்
தாங்கிக்கொண்டு விரைந்து சென்று கொண்டிருப்பார். எனவே அவர் பறக்கும்போது
கையெடுத்துக் கும்பிட்டால், அவரது வேகம் குறைந்து எம்பெருமானின்
செயலுக்கு ஊறு நேரிடலாம் என்பதால் அப்படி சொல்லி உள்ளனர்.
கருடன்
மட்டுமே இறக்கைகளை அசைக்காமல் பறக்கும் சக்தி உடையவர். எனவே உயர பறக்கும் போது
இறக்கைகளை அசைக்காமல் இருந்தால் அது கருடன் என்று முடிவு செய்யலாம்.
ஜைன மதத்தினர் கருடனை சுபர்ணா என்ற பெயரில் வழிபட்டு வருகின்றனர்.
பவுத்தர்கள் உராசனா, பன்னகாசனா, நாகத்தகா
ராஜநிர்ஹனா என்னும் பெயர்களில் கருடனை வழிபட்டு வருகின்றனர்.
கார்க்கோடகன்
பெயரைச் சொன்னால் ஏழரைச்சனியினால் ஏற்படும் கஷ்டம் விலகும் என்கிறது நளசரித்திரம்.
அந்தக் கார்க்கோடகனை ஹாரமாக அணிந்திருப்பவர் கருடன்.
ஹோமர்
எழுதிய இலியத் என்ற ரோமானிய காவியத்தில் ஒரு பெரிய பாம்பைப்பற்றியபடி கருடன்
வானத்தில் வட்டமிடுவதாகக் கூறப்பட்டுள்ளது. காம்போஜத்தில் கருடனே யோக தேவதையாக
இருந்திருக்கிறார்.
கருடன்
தகர்த்த மேருமலையின் சிகரத்துண்டே சமுத்திரத்தில் விழுந்த இலங்கைத்தீவு என்று
பேசப்படுகிறது.
கோவில்
கும்பாபிஷேக நேரத்தில் வானத்தில் கருடன் வட்டமிட்டால் நாடு சுபிட்சம் பெறும்
என்பது ஐதீகம்.
ராம ராவண யுத்தத்தில் பெருமாளையும், இளைய
பெருமாளையும் நாகபாசத்தில் இருந்து விடுவித்தவர் ஸ்ரீ கருடன் தான்.
பாற்கடலைக்
கடையும்போது திருமாலின் கட்டளைப்படி மந்திர மலையைத் தன் முதுகில் சுமந்து வந்து
பாற்கடலில் வைத்தவர் கருடன் தான்.
கண்ணபிரான் துவார கைக்கு வெளியே இருந்த போதெல்லாம் துவாரகையைக் காத்தவர்
கருடன்.
கருடனின்
நிறம், பழுப்பு, கழுத்து வெள்ளை,
இந்த வகை கருடன் மணிக்கு 105 கி.மீ. வரை
பறப்பதாக பறவை ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
வைணவர்கள்
பழுப்புநிற கருடப்பறவையைத்தான் கருட தரிசனத்திற்காக எதிர்பார்த்துக்
கொண்டிருப்பார்கள். வீர வைணவர்கள் கருட தரிசனம் செய்யாமல் உணவருந்த மாட்டார்கள்.
அமெரிக்க
நாட்டுச் சின்னம் கருடன். இதனால்தான் அந்நாடு செழிப்புடன் விளங்குகிறது. அவர்கள்
கருடனை கோல்டன் பறவை (தங்கப் பறவை) என்றும் அதிர்ஷ்ட பறவை என்றும் கூறுகிறார்கள்.
கருடனின்
குரல் சாமவேத த்வனி ஆகும். பறவை இனங்களின் ராஜாவாக இவர் கருதப்படுவதால் இவருக்கு
பட்சி ராஜன் என்றும் பெயர்.
கருட் என்றால் சிறகு எனப்பொருள். இதிலிருந்து கருடன் என்ற பதம் வந்துள்ளது.
. தட்சணின்
மகளான வினதா என்பவருக்கும், கச்யப முனிவருக்கும் பிறந்தவரே
கருடன். அதனாலேயே அவருக்கு விநதேயன் என்ற பெயரும் உண்டு.
. ஸ்ரீவைகுண்டத்தில்
திருமாலுக்கு எப்பொழுதும் தொண்டு செய்து கொண்டிருப்பவர்கள் நித்யசூரிகள்
எனப்படுவர். அதில் முக்கியமானவர் கருடன். இவர் திருமாலுக்கு வாகனமாக இருந்து
தொண்டு செய்து வருகிறார்.
கருடன்
பெரிய திருவடி என்றும், ஆஞ்சநேயர் சிறிய திருவடி எனவும் சிறப்பித்துக்
கூறப்படுகிறார்கள்.
வைணவ
ஆலயங்களில் நான்கு மதில் சுவர்களின் மூலையிலும் கருடனின் உருவம் இருக்கும்.
கருடன்
கற்பு நெறியில் நிற்கும். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இணை சேர்ந்து
முட்டையிடும்.
அதர்வண
வேதத்தில் முப்பத்திரண்டு வித்தைகளில் கருடனுக்கு முதல் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
துறவிகளின் முக்கிய தேவதை கருடனே.
தஞ்சை
நகரின் அமைப்பு கருடன் சிறகை விரித்து பறப்பது போன்ற வடிவில் உள்ளது.
கருடனின்
பார்வை மிகக் கூர்மையானது என்று வேதம் கூறுகிறது.
வீட்டிற்குள்
பாம்பு தென்பட்டால் கருடனை நினைத்து அபஸர்ப்ப ஸர்ப பத்ரம்தே தூரம் கச்சமஹாயசா! ஜனமே
ஜயஸ்ய யக்ஞாந்தேஹ்யாஸ்தீக வசனம் ஸ்மரண்!! என்று கூறி கையைத் தட்டினால் அங்கிருந்து
பாம்பு சென்று விடும்.
முடிவுரை:
பருந்து கம்பீரமும்,
போர் திறனும் சுதந்திரமனதுமான ஓர் பறவை.
தன் சிறகினை அடிக்காது. பல
நிமிடங்கள் வானில் ஒர் இடத்தில் நிற்க்கும் திறன் வாய்ந்த பறவையாகும். வணிகருக்குத்
தேவயான பண்புகளான அடையாளம் காணுதல், கூர் நோக்குதல், வணிகம் செய்தல்,
பயிற்றுவித்தல், வருங்காலம் பற்றிய தூர நோக்கோடு சிந்தித்தல். இப்பண்புகள்
பருந்திடமிருந்தே பெறப்பட்டவை. பருந்துகள் திரை செல்லும் வணிகற்க்கு துணை
நின்றதாய் கூறப்பட்டுள்ளது. எனவே இவை வாணிகர்களின் சின்னமாகவும், வாணியர்களின்
கொடிகளிலும் இடம்பெற்றுள்ளன.
என்
எண்ணப்படி கருத்மன் என புராணங்களில் அழைக்கப்பட்ட பருந்து, கரும்பருந்தாய்
இருந்திருக்க வேண்டும் பின்னாளில் நிற வெறி காரணமாக செம்பருந்து வழிபாட்டில்
திணிக்கப்பட்டிருக்கலாம்.