Wednesday, March 20, 2019


காண்டல் வரலாறு


ஆதி
முன்னோர்களின் கூற்றுப்படி காண்டல சமூகத்தினர் மனு மகாராஜா வழி வந்தவர்கள். இவர்களின் முன்னோர்களில் ஒருவரான திரு விமல விதுடு என்பவர் கைலாஷ் யாத்திரை செல்லும் வழியில் முனி விஸ்வம்பரரின் ஆசிரமத்தை கடக்க நேர்ந்தது. முனி விமல விதுவை ஆசிரமத்திற்குள் வரவேண்டாம் என்றதன் காரணமாக கோபமடைந்த விமல விதுடு முனியை எள்ளளவு துண்டுகளாக வெட்டி கொன்றார். இதை கேள்விப்பட்ட விஸ்வம்பர மகரிஷி விமல விதுடுவை எள்ளலவு வெட்டி செக்கில் இட்டு சாக சாபமிட்டார். தவறை உணர்ந்து மன்னிப்புகேட்டதால் விமல விதுடுவை மன்னித்த மகரிஷி பரிகாரமாக எள்ளிலிருந்து எண்ணெய் எடுத்து தீபம் வைத்து இறைவனை வழிபட கூறினார். இதன் காரணாமாக இந்த தொழிலை இவர்கள் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

வரலாறு
பண்டைய காலத்தில் தாவர எண்ணெய் ஆனது காண எனும் எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டது. எண்ணெய் எடுக்கும் மனிதன் காணிக என்றழைக்கப்பட்டனர். பிற்காலத்தில் தொழிலின் அடிபடையில் சாதிகள் அமைந்ததில் இத்தொழில் செய்தவர்கள் காணிக, காண்டல என்றழைக்கப்பட்டனர். கி மு 500 ல் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட புராணத்தில் காண என்ற வார்த்தை பயண்படுத்தியதற்க்காண ஆதாரங்கள் காணப்படுகின்றது. ஆனாலும் அதைப்பற்றிய விரிவான விளக்கங்கள் அதில் இடம்பெறவில்லை. 

மனுதர்மம்
மனுதர்ம சாஸ்திரத்தின்படி பண்டைய இந்தியாவில் பிராமணர், சத்திரியர், வைஷ்னவர்கள், சூத்திரர்கள் என்ற நான்கு விதமான பிரிவுகள் இருந்தனர். இவர்கள் செய்த தொழிலின் அடிப்படையில் இந்த வகைபாடு இருந்தது. பிராமணர் வேத சாஸ்திரங்கள் படிப்பவர்களாகவும், கோவில்களில் மந்திரம் ஓதுபவர்களாகவும், சத்திரியர்கள் மக்களை ஆள்பவர்களாகவும், போர்வீரர்களாகவும் இருந்தனர். வைஷ்யர்கள் வியாபாரிகளாகவும் மற்ற அணைத்து வகையினரும் சூத்திரர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். இதில் காண்டல சமூகத்தினர் எந்த பிரிவில் வகைபடுத்தப்பட்டனர் என்ற சரியான தகவல் இல்லை. ஆனால் தொழில், பொருளாதார நிலை மற்றும் பிற்காலத்து குறிப்புகளை வைத்து பார்க்கயில் இவர்கள் வைஷ்யர்களாக இருந்திருக்கவேண்டும் என்பது புலணாகிறது.

இருப்பிடம்
காண்டல சமூகத்தினர் ஆந்திராவில் அனைத்து மாவட்டங்களிலும் கர்நாடகாவில் பீஜாபுர், பெல்காம், பெங்களுர், குல்பர்கா, மங்களுர், பத்ராவதி, சிக்மங்களுர், கார்புர், சிந்தாமணி, ஹாசன், ஹவேரி, கெ ஜி எஃப், மாண்டியா, மைசூர், சிமோகா, தும்கூர், டிப்டூர், உடுப்பி மற்றும் சில மாவட்டங்களிலும், தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் காணப்படுகின்றனர். இவர்களை தவிர கேரளா, மகாராஷ்ட்ரா மற்றும் ஒடிசாவிலும் காணப்படுகின்றனர்.

பிரிவுகள்
கர்நாடகாவில் காண்டல சமூகத்தினர் சோமசத்திரிய காணிக, காணிக ஷெட்டி, ஜோதிநகர காணிக, ஜோதிபன காணிக, ஒற்றெருது காணிக, ரெண்டெருது காணிக, வீரசைவ காணிக, விஜயநகர காணிக எனும் பிரிவுகளாகவும், ஆந்திராவில் தேவ காண்டல மற்றும் சஜ்ஜன காண்டல என்றும் அழைக்கப்படுகின்றனர். மேலும் தமிழகத்தில் வாணிய செட்டியார், வாணிக வைஷ்யா என்றும், கேரளாவில் வாணிய செட்டியார், செக்காள நாயர் என்றும், மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் வட இந்தியாவில் தெலி, காணிசா, சாஹீ என்றும் அழைக்கப்படுகின்றனர்.

குலகுரு
தென்னிந்தியாவில் உள்ள அனைத்து காண்டல சமூகத்தினருக்கும் குலகுருவாக இருந்தவர் பாடகர் திரு.எஸ் பி பாலசுப்பிரமணி அவர்களின் தந்தையான திரு. பண்டிதாச்சார்யா சாம்பா மூர்த்தி என்பவர் ஆவார். இவர் ஒரு பிராமணர் ஆவார். காண்டல சமூகத்தினரின் குல கோத்திர பெயர் பட்டியல்களை நிர்வகித்து வந்தவரும், குடும்ப விழாக்களை முன்னின்று நடத்தி வந்தவரும் இவரே. இவரது மறைவிற்க்கு பிறகு ஆந்திரா மாநிலம் குண்டூரை சேர்ந்த திரு மல்லிகார்ஜுண சர்மா என்பவர் குலகுருவாக இருக்கிறார்.

பொருளாதாரநிலை
பெரும்பாலும் காண்டல சமூகத்தினர் இயந்திரங்களின் வளர்ச்சிக்கு பிறகு எண்ணெய் எடுக்கும் தொழிலிலிருந்து மாறி கடைகள், வியாபாரம் மற்றும் விவசாய வேலைகளை செய்ய ஆரம்பித்து விட்டனர். கல்வியின் மூலம் வேலைவாய்ப்பை பெற்றவர்களும் பரவலாக காணப்படுகின்றனர். தமிழக, கர்நாடகா, மகாராஷ்ட்ரா மாநில அரசுகள் இவர்களை பிற்படுத்தப்பட்டவர்களாக அறிவித்துள்ளது.

அமைப்புகள்
அகில காண்டல தெலிகுல சங்கம், ஹைதராபாத்.
சோம சத்திரிய விஷ்ணவ சமாஜ், பெங்களூர்
காணிக சமாஜ் மும்பை
சாஹு சமாஜ், டெல்லி.
நரேந்திர மோடி குஜராத் முதல் அமைச்சர்.
BJ
புட்டண்ண சாமி MLA, கர்நாடகா
PL
கட்டி கௌடர் MP, கர்நாடகா

இன்றைய நிலை
வெவ்வேறு மாநிலங்களில் வாழ்வதாலும் மற்றும் தெலுங்கு, தமிழ், கன்னடா, துளு மற்றும் பல மொழிகளை பேசுவதாலும் வேறுபட்ட கல்வி மற்றும் பொருளாதார காரணமாகவும் வெவ்வேறு பிரிவுகளாக பிரிந்து அதிக ஒற்றுமைஇன்றி வாழ்கின்றனர்.

**முக நூலிலிருந்து எடுத்து பதிவிடப்பட்டது.