Tuesday, May 16, 2023

வைசிய வாணிய கைவளம் ஆயிரமும் திருநாம கோத்திரமும்

  

வைசிய வாணிய ஆயிரவர் பிரபந்தம்

மதுரை கம்பர் ராமபத்திரபிள்ளையவர்களால் இயற்றப்பட்டது

வைசிய புராணத்தில் உள்ளபடி

 

வைசிய வாணிய கைவளம் ஆயிரம்

 திருநாம கோத்திரமும்

 

மதுரை வடக்கு லயன் தெரு வைசிய வாணிய

நாகந்தை மகரிஷி கோத்திரம்

சொ.கூ. பழனியப்ப செட்டியாரால்

பார்வையிடப்பட்டது.

 மதுரை செல்லாத்தம்மன் கோவில் தெரு

வைசிய வாணிய மயிலை கிழான் மகரிஷி கோத்திரம்

ம.லெ. வெங்கிடாசலம் செட்டியார்

ஷை வைசிய வாணிய இலுப்புடையான் மகரிஷி கோத்திரம்

சி.ப. சித்திரபுத்திரஞ் செட்டியார்

இவர்களின் வேண்டுகோளின் பேரில்

 

மதுரை வடக்கு லயன் சிம்மக்கல் தெருவிலிருக்கும்

வைசிய வாணிய மயிலை கிழான் மகரிஷி கோத்திரம்

மு.கோ. மாரியப்ப செட்டியாரால்

அச்சிடலாயிற்று.

Jhgfhgffg

மதுரை புதுத் தெரு

கே. ஆர். ரெங்கனாதம் அண்ட் பிரதர்ஸ்

அச்சுக் கூடத்தில் பதிப்பிக்கப்பெற்றது

1910

             வைசிய வாணிப ஆயிரவர் மாலை

வினாயகர் காப்பு

 சீர்த்தி மாலைத் தினந்தொழு தன்புறும்

ஆர்த்தி மாலையா யிரம்பேர்கள் தன்

கீர்த்தி மாலை கிளர்த்த வினாயக

மூர்த்தி தாளை முடிக்கணிவாமரோ. 

 

சகந்தருவா யென்றயனைத்தா மோதரன் பார்த்து

மகிழ்ந் துரைக்கத்தான் படைத்தமாமலெரென் றான்முகத்தில்

இகந்தழைக்க வந்தாரெழிற் மறையோர்மென் புயத்தில்

மிகுந்தவு லகாழுமுடி வேந்தர் பிறந்திட்டனரே (1)

 

அன்னான் றுடையிலருள் வணிகனென் றுரைக்கும்

மின்னார் நூன்மார்பன் மிளிர்வக்குவன் பிறந்தான்

பொன்னரும்பாத மதிற்போந்தனர் வேளாளர் தில

நன்னாவலர் புகழும் நல்வக்குவ முனிவன் (2)

 

வானவரில் மேலாக வாய்ந்தெதவம் புரிந்தான்

ஈனமறுந் தக்கனென் போனீன்ற யிருபத்தேழு

மீனவளி மானாளை வெண்ணிலா வுக்கீய

தானவனங் கோரிரண்டுதார் குழல் மேலின்ப முற்றான் (3)

 

கார்த்திகை மேல்ரோகணிமேற்காதல்மிகுந்தெங்கள் சுகம்

பார்த்திலனென் றேங்கியந்தப் பாவையர்கள் தந்தையிடம்

வேர்த்துரை க்கத்தக்கன் வெகுண்டு மதியைப்பார்த்து

ஆர்த்துங் கலைகளழிவா யெனப் பயந்தே (4)

 

தன்குறையைச் சொல்லியரன்றன் றலையிலூற்றிடு நாள்

மின்பரவும் பூவுலகில் மிக்கவிருளாய்ப் பரவ

பொன்பரவு மீசனிடம் புங்கவர்கள் போயுரைக்க

வன்பரவு மன்மதனை வாவென்ற ருகளைத்து (5)

 

வக்குவ மகாமுனிவன் மாதவசைப் போயழித்து

இக்கணம் வாவென்ன வெழுந்தவன் போய்த்தானழிக்க

மிக்கமதனை வெகுண்டு பரமேஸ்பர ன்றன்

அக்கினிக்க ண்ணாலளி வாயங்கசாவென் றுரைத்தான் (6)

 

வெள்ளி மலைச்சென்று பரமேஸ்பரனை போற்றிடவே

புள்ளிமா னேந்தும் புனிதனிவை கூறலுற்றான்

தெள்ளிய சீர்பெற்ற திரள்வணிகமாக்கள் தனை

பிள்ளைகளா யிவ்வுலகில் பெற்றருள்வா யென்றுரைக்க (7)

 

தெற்பையோ ராயிரத்தைச் சீர்வணிக றாப்படைக்க

முப்புரிநூல் தண்டுடனேமூறுங்க மண்டலமும்

செப்பும் பவித்திரமுஞ் சீராய்த் துலங்கிடவே

யிப்பு வியில்வந்தாரெழில் சேர்தில வணிகர் (8)

 

உதித்த புதல்வர் தனக்குற்ற திருநாமமிட்டான்

மதித்த திருமால் மலமுறுட்டி யெள்ளாக்கி

கதித்த புதல்வரிருகை மீதிலே கொடுத்தான்

துதித்த சிவன்மாலு மிசை தோன்ற மணிச்செக்காக (9)

 

கொடுத்தா ரெண்டிக்காளுங் கோலதிக்குப் பாலகரும்

அடுத்தார்கள் மற்றவணிகரு வியாகிய பின்

தொடுத்த துளாய்யெம்பெருமான் றூயதருமச் சேவை

இடுத்த மறவாணி பருக்கீய்ந்து புகழ்ந்திட்டனனெ (10)

 

சந்திரனுஞ் சூரியனுந் தட்டாகினார் வசுக்கள்

அந்தமிகுந் துளைக் களானார்கள் மாருதமும்

வந்துநடு நாவாக வாய்மைபெறு மக்கினியும்

சிந்தைமிகு ங்குண்டலமாய்ச் சேர்ந்தார் வணிகரிடம் (11)

 

ராசிபனி ரெண்டும் நவின்ற படிக்கல்லாக

வாசமிகு நட்சேத்திரம் வாய்ந்த யிருபத்தேழும்

தேசம கிழச்சிறந்த பணியா ணியென

மாசகன்ற வாணிபத்தை வாணுபர்கைக் கொண்டனரே (12)

 

கைமாத்திரைக் கோலுங்கங் கணமும் பொக்கணமும்

மெய்வைப் பிரணவமு மிக்கவோரஞ் செழுத்தும்

செய்மை திகழ்கின்ற திலாக்கோல்தனைச் சிவனும்

பொய்மையற்ற வாணிபற்குப் புந்திமகிழ கொடுத்தான் (13)

 

ஆர்த்திபெருகின்ற பம்பையாற்றை வருணன் கொடுத்தான்

கீர்த்தி நிருதியுங் கிஸ்கிந்தா சலங்கொடுத்தான்

காத்தபிரமன் கமலக் கண்டிகைத்தேரைக் கொடுத்தான்

வாய்த்த திருமாதுபங்கன் வைகுந்த நாட்டுடனே (14)

 

ஓங்குகருடக் கொடியுமுள்ள ன்பினால் கொடுத்தான்

தேங்குமுத்தரா பதியைச் செய்யநிதிக்கோன் கொடுத்தான்

தாங்குமலர்ச் செந்தோன்றித்தாரை முருகன் கொடுத்தான்

பாங்குபெறு மைங்கரத்தோன் பாசங் கொடுத்தனனே (15)

 

தேவர்கோ னென்போன் செயவாரணங் கொடுத்தான்

மாவரு நற்சந்திரன் மடிச்சேலை தந்தனனே

வாவுபவனன் கலினமருதமன் பாய்க் கொடுத்தான்

தாவுநமனி வர்க்குத் தண்டாயுதங் கொடுத்தான் (16)

 

பருதிமகி ழ்ந்தன்பாக பஞ்ஞாங்க மாமுரசம்

விருதுதிசை முக்கியவேழ முந்தந்தான் கனலோன்

கருதுநவ ரத்தினங் கணக்கிலாமற் கொடுத்தான்

இருதயமுற் றேவணிகரிங் கிவையெல்லாம் பொருந்தி (17)

 

தேவர்நிதிக் கோன்றவத்திற் சென்றரு ளீரைஞ்ஞூறு

பூவையரைக் கல்யாணம் பூராயமாய் முடித்து

மாவருதொண்ணூத்தி யென்பான் மான கரிலிங்கிவரைக்

கோவலர்கள் கொண்டாடக் குடியேத்தி வைத்தனரே (18)

 

வைசிய வாணிப ஆயிரவர் மாலை

ஆயிரவரில் கீர்த்திபெற்றவர்களின் பெயர்

1வது கடந்தை வாணிபன் சரித்திரம்

செற்றலர்கள் வாழுந்திரி புறத்தை வெல்லவரும்

பொற்றொடியாள் பாகன் பொருந்தேருருள் நெறிவ்

வெற்றிமத மாவினுக்கு மேலோனருள் பூசைக்

குற்றப்பொரு ளீந்தானுயர் கடந்தை வாணிபனே (19)

கடந்தைவாணிப மகரிஷி கோத்திரன் ஈஸ்வரன் திரிபுராதிகளை சம்மாரம் செய்த காலத்தில் வினாயகர் பூஜைக்கு வேண்டிய நைவேத்திய சம்பாரங்களை கொடுத்து அவர் அருளைப்பெற்றான்.

 

2வது தாமந்தை வாணிபன் சரித்திரம் 

மிக்ககொடுஞ் சூரர்களை வெல்லவரும் வேல்முருகன்

பக்கத் துணையாய்ப் படைகூட்டி வாருதியில்

கொக்குருவச் சூரனையுங் கொன்றிடச் செய்தெந்தைபுனை

தக்கமலர் மாலை பெற்றான்ற மந்தைவாணிபனே (20)

தாமந்தைவாணிப மகரிஷி கோத்திரன் சுப்பிரமணியர் சூரபத்மாவை சம்மாரம் செய்த காலத்தில் அவரின் கூடப்போய் அவருக்கு வேண்டிய பணிவிடையை செய்து பின்னர் செந்தோன்றி மாலையைப் பெற்றான்.

 

3வது காமக்கிழவன் சரித்திரம் 

இருநாளிநெற்கொண்டிறைவனுறைதப்பாமல்

மருவாரறம் வளர்த்த மாதாவின் சொற்படியே

ஒருநாளிகைப் போதிலோர்ந்து பணி செய்துமையாள்

கிருபைபெற்றான் காமக்கிழவன் என்னும் வாணிபனே (21)

காமக்கிழவ மகரிஷி கோத்திரன் காஞ்சிபுரத்தில் உமையவள் தபசு செய்த காலத்தில், அவருக்கு வேண்டிய சாமக்கிரியங்களைக் கொடுத்து அருளைப் பெற்றான்.

 

4வது வண்ணக்கன் சரித்திரம்

ஓங்கிய மார்க்கண்டனுக் காயுற்றயமைப் பரமன்

தேங்கிய காலாலுதைக்ச் செற்றவன்றன் பேருடலை

யாங்கெடுத்து யீசனருளாற் பின்னுயிர்த் தியாகம்

வாங்கியவனுக்கு கழித்தான் வண்ணக்கன் வாணிபனே (22)

வண்ணக்கன் மகரிஷி கோத்திரன் திருக்கடையூரில் மார்க்கண்டேயருக்காக பரமசிவன் இயமனை உதைத்த காலத்தில் இயமனை அபயங்காத்தவர் அருளைப் பெற்றான்.

 

5வது குளத்துடைய வாணிப சரித்திரம்

மூவேந்தர்க்கும் முடிக்கணியச் சோதி ரத்தினம்

தேவேந்திரனி ரவிசீத மதி மூவரிடம்

மாவேய்ந்த வேலோன் மயூரமுடன் போர்வாங்கிக்

கோவேந்தர்க் கீய்ந்தான் குலத்துடைய வாணிபனே (23)

குளத்துடைய மகரிஷி கோத்திரன் சேரன், சோழன், பாண்டியன் இம்மூவருக்கு முடிசூட்டும் பொருட்டு இந்திரன், சூரியன், சந்திரன் இம்மூவர்கையில் பவளம், முத்து, கெம்பு, வாங்கிவந்து கொடுத்தவரால் கீர்த்தி பெற்றான்.

 

6வது மருத வாணிபன் சரித்திரம் 

மருகனுக்குநல்கவளர்த்தமகளைச் சோழன்

அருகனெனக் கேட்கவுடன் றானாயைப் பந்தரின்கீழ்

யிருகப்பிணித் தேகியீசர் தனக்கன் பகலாத்

திருவைக் கொடுத்தான்றி கழ்மருத வாணிபனே (24)

மருதவாணிப மகரிஷி கோத்திரன் காஞ்சிபுரத்திலிருந்து தன்பெண் அம்பிபிரியாள் அம்மையை திருவிடைமருதூர் ஈசனுக்கு திருக்கல்யாணம் செய்தவரருளைப் பெற்றான்.

 

7வது இதுவுமது

கரவாறன் கன்னிகையைக் கொள் மருதீசரென

உரவோரறி யாதுழன்று யர்ந்து பின்றெளிந்து

பரவியருள் பெற்றார்ப் பைந்தொடியாற் சோழனென்போன்

குரவில் வணிநாதன் மேற்கோபித் ததனாலே (25)


8வது இதுவுமது 

பலதிசைகள் தோறும் பரவினார் பற்பலர்கள்

குலதரு மத்திற்சிறந்து கூற்வணிக மாக்களென்போர்

நலமிலகும் பூவுலகில் நாங்களெனவே மருதூர்த்

தலமிகு மீசரிடத்த ய்யலிடஞ் சென்றனரே (26)

 

9வது இதுவுமது

அன்புபிரியா ளென்ற ளைக்கும் பலபேரும்

துன்புடையார்க் வொன்றுஞ் சொல்லா திருந்தனளே

முன்புநின்று வாணிபர்கள் மூன்றுமுரை தானளைக்க*

யென்புதல் வரென்று மகிழ்ந்தீஸ்பரியும் பேசினளே (27)

(*திருத்தம்: மூன்றுமுறை தானழைக்க)

 

10வது தாதாரமுடையான் சரித்திரன் 

கான்கொடுத்த ஏனல்வனங்காத் திருந்தவள்ளி தனைத்

தேன்கொடுத்த நீபமலர்த்தேவன் மணஞ் செய்வதற்கு

வான்கொடுத்த எப்பொருளும் வாகாய் வரவனத்துத்

தான்கொடுத்து மேன்மைபெற்றான் தாதார வாணிபனே (28)

தாதாரமுடையான் மகரிஷி கோத்திரன் சுப்பிரமணியர் வள்ளி மலையில் வள்ளியம்மன் திருக்கல்யாணத்திற்கு வேண்டிய சாமக்கிரயங்களை கொடுத்தவ ரருளைப் பெற்றான்.

 

11வது வந்தி வாணிச்சி சரித்திரம் 

தென்னனுரை தப்பாமற் சீர்பொருந்துங் கூடற்தனிற்

றன்னவனாய் வந்துவகைகை தானடைத்த சொக்கருக்கு

முன்னுதிர்ந்த பிட்டருளிமுத்தி பெற்றாள் மூவுலகில்

ஈன்னயஞ் சேர்வந்தியென நாட்டும் வணிகத்திருவே (29)

மண்ணுடைய மகரிஷி கோத்திரன் மனைவி வந்தியமை மதுரையில் பாண்டியன் தனக்கு ஆற்றை கட்டவிட்ட பங்கிற்காக பரமசிவன் கூலியாளாக வர உதிர்ந்த பிட்டுக்களைக் கொடுத்தவ ரருளைப் பெற்றாள்.

 

12வது திருக்கச்சி நம்பிகள் சரித்திரம் 

ஒருபாலனோடு கச்சிக் குற்றியதேப் பெருமாள்

இருபாதம் போற்றிவரு மெல்லைதனிற கூடவந்த

அருளாளனை யழைக்க வன்றறி யொன்றீபமுடன்

வருபுகழ் பெற்றார்கள் வசிய கச்சிநம்பிகளே (30)

நர்ப்பாகிளான் மகரிஷி கோத்திரன் திருக்கச்சி நம்பி காஞ்சிபுரத்தில் வரத ராஜப் பெருமாளுக்கு புஷ்பத் திருவால வட்ட கைங்கரியங்களைச் செய்து அவரருளைப் பெற்றான்.


13வது கொள்ளந்தை வாணிபன் சரித்திரம் 

தொடுத்தாரணி சோழன் சூடுமகுடந் துலக்க

அடுத்தே கருடனைக் கண்டஞ்சலி செய்தாடாலின்

இநித்த மறகாத்து மணியேற்றியவனுக் குரைப்போற்

கொடுத் தெவரினுஞ் சிறந்தான் கொள்ளந்தைவாணிபனே (31)

கொள்ளந்தை மகரிஷி கோத்திரன் சோழராஜன் விர்பிடி மணி வேண்டுமென்று கேட்க கெருட பகவானை பாதாள லோகத்திற்கு அழைத்துக் கொண்டுபோய்  ஆதிசேடனிடத்தில் விர்பிடி மணி வாங்கிக் கொடுத்து கீர்த்திப்பெற்றான்.

 

14வது சோழ வாணிபன் சரித்திரம் 

அடைக்கல மென்றே தியபுட்காக வோர்வேடனுக்குத்

தொடைக் கலங்கொள்கின்ற சிபிசோழனார் தன்தசையை

படைக்கலத் தினாலறிந்து பற்றையெண்ணா துற்றமுறை

இடைக்கல மிலாநிறுத்தான் யேர்சோழ வாணிபனே (32)

 

15வது தேவந்தை வாணிபன் சரித்திரம் 

நீபமுற்ற வேலவன் போல்நீடுலகையாண்டுமகச்

சோபமுற்ற சோழனருள் தோகை மனங்கொண்டு பின்னும்

தாபமுற்ற ரங்கர் மனந்தான் மகிழ்க்கற்பூர

தீபமிட்டுக் கீர்த்திப் பெற்றான் றேவந்தைவாணிபனே (33)

 

16வது நாகந்தை வாணிபன் சரித்திரம்

கப்பலின் மேல்ச்சென்றர வக்காவலவன் கன்னிகையை  

உற்பனமாய் வேட்டிசைக ளோதுமவ்வையார் மகிழ்ப்

பொற்படா முங்கலனும் பொன்மாரியுஞ் சொரிந்து

நற்புவியில் கீர்த்திபெற்ற நாகந்தை வாணிபனே (34)

 

17வது இளவேட்ட வாணிபன் சரித்திரம் 

நாடியள கேச நராதிபன் பாற்கொடுத்த 

பாடிதனை வாணிபன் பாடியெனச் செய்ததனில்

தெடியகர் மாந்தகர்க்கோர்  செய்பொன் மணிக்கோயில்செய்தான்

யேடவிழ்தார் மார்பனிள வேட்ட வாணிபனே (35)


18வது பைய வாணிபன் சரித்திரம் 

முருகியலும் பூந்தார் முடிச் சோழன்றுன்பமற 

பெருகிவருங் காவேரிப் பேராறு டையாமல்

அருகுனிற் பஞ்சாற்கரை யிட்டன்பானகீர்த்திப் பெற்றான்

பொருவிலு லகேழும் புகழ்ந்த பையவாணிபனே (36)

 

19வது கண்ணவாணிபன் சரித்திரம் 

பொன்பற்றி வேளாளன் புத்திரனுக் கஞ்சல்புரிந் 

தின்பெற்ற மாதவத்தா லீன்றசிறு பாலகனை

மின்பெற்றவாள் முனையில்மீனவன் முன்னேற்று நின்றான்

வன்பெற்றொரு சொல்வளங்கு கண்ண வாணிபனே (37)

 

20வது கோமலுழா வாணிபன் சரித்திரம் 

சூடியபூந்தார் மகுடச் சோழனிடம்போய் வணங்கி

நாடியகன்றும் பசுவும் நல்லெருது மேய்வதற்காய்

நீடியகன்றாப் பூரைநீயரு ளென்றே விலையாய்க்

கோடி பொன் தந்தேற்றான் கோமலுழா வாணிபனே (38)

 

21வது மண்டபமுடைய வாணிபன் சரித்திரம் 

முன்செழியன்றந்தமுடக்குமணியைச்சோழன்

இன்புவியில் நீங்களினிக் கோத்தரு ளுமென

நன்புறுமோர் சிற்றெறும்பால் நாடியதைக் கோர்த்தீய்ந்தான்

அன்புபெறு மண்டபமுடைய வாணிபனே (39)

 

22வது வேட்டந்தை வாணிபன் சரித்திரம் 

மதயானைக் கன்றும் மழைநாடும் சோழனிடம்

இதமாய் நவமணி தந்தேற்றிரட்டை வாணர்சொலுஞ்

சதமான பிள்ளைத் தமிழுக்கருளி மேன்மைபெற்றான்

விதமாதவர் புகழும் வேட்டந்தை வாணிபனே (40)

 

23வது வேட்டந்தைச்சிட்ட வாணிபன் சரித்திரம்

தேட்டமிகுஞ் சொற்பணத்திற் செங்கண்மால் வந்துசொன்ன

காட்டமறசெய்து பணிகண்டொருவன் கண்ண கன்ற

வாட்டமறவோற் நயனமால்தரத் தானென்று தந்தான்

வேட்டந்தைச் சிட்டரென மேவுமோர் வாணிபனே (41)

 

24வது ஆவணிக்கிழா வாணிபன் சரித்திரம் 

பூவுலகாழ் சோழன் புகலமத யானைதனை

வாவுகடற் கப்பல்தனில் வைத்தெவருங் கொண்டாட

நீவுநிரை பார்த்துரைத் தாணீளவக்குவன் மரபில்

ஆவணிக் கிழானெனப் பேரான புகழ்வாணிபனே (42)

 

25வது கடவுளாவாணிபன் சரித்திரம் 

நாட்டும் நவகோடி நாராயண னெனப்பேர்

சூட்டுமொரு சோழன் சொற்கா களவிருதை

நீட்டுந் தனதுநிதிப் பெருக்காற் பெற்றிருந்தான்

காட்டு மிகல் வீட்டுங்கடவுளா வாணிபனே (43)

 

26வது சாத்தந்தை வாணிபன் சரித்திரம்

ஆச்சிரா மத்தில மர்தருளு மீசர்க்கு

வாச்சபுலிக் கொடியோன் வாய்ந்துசெய்த பொற்கடத்தை

மாச்சரியம் வாராமல் மாற்றுமீரைந்து சொன்னான்

தாச்சானிய மேகுடிகொள் சாத்தந்தை வாணிபனே (44)

 

27வது காவேரி தலையரிந்துகொண்ட சரித்திரம்

பாகாருந்தோழனொருபாவை மனங்கொள்வதற்கு

வாகாய் வரங்கொடுத்த மாகாளி கோயில்தனில்

தேகாபி மானமற சென்றுதலையைத் துனித்துக்

காகாதி கொள்ளவைத்தான் காவேரி வாணிபனே (45)

 

28வது தண்டலங்கிழாவாணிபன் சரித்திரம் 

மன்னன் மகனோடு சொற்றவாய்மையினால் மன்னன்முன்

பன்னுதலை வேறுடலிற் பற்றனெறி யல்லவென

அன்னவனால் நீதிமுறை யாருயிருன்னோர்க் களித்தான்

உன்னுதண்டலங் கிழனோங்கு புகழ் வாணிபனே (46)

 

29வது சிந்தாமணி பெற்ற சரித்திரம்

பேசரியதக்க முனிபேசு மிசையாற் சிறந்து

மாசகலுஞ் சிந்தாமணிப் பிரபந்தம் புனைந்தான்

தேசமகிழ்ச் சந்தன்சேயை மகனாய் வளர்த்துக்

காசினியில் மேன்மை பெற்றகந்து கண்ணவாணிபனே (47)

 

30வது சிலப்பதிகாரங்கொண்ட சரித்திரம்

மாதவியாற் செல்வமறமா மதுரையிற் சிலம்பால்

காதுபட்டுக் கண்ணகியால்க் காமதுரையைக் காய்ந்து

தீதுபடா தோங்குஞ் சிலப்பதிகாரம் படைத்தான்

மாதவஞ்சேர் கோவிலவ மாசாத்து வாணிபனே (48)

 

31வது மணிமேகலை ஆயிரத்தொரு கோத்திரம் பெற்ற சரித்திரம் 

மாதவியார் கோவிலர்க்கு வந்தமணி மேகலையாள்

ஓதுகின்ற கற்பாலொரு குடிப்பெற் றோங்கியதால்

யேதமற வோராயிரத்தி யொரு கோத்திரமென

ஆதரமாய்ச் சொன்னா னருள்சுல வாணிபனே (49)


32வது காவேரிகுண்டலகேசி பெற்ற சரித்திரம்

பாய்பரியின் மீதேரிப் பாண்டியன்முன் சோழனுக்காய்

வேய்மணிபொற்பந்தைநிலம்வீழாதடித்து வென்று

யேய்குண்டலகேசி யென்ற தமிழ் வாய்மைகொண்டான்

காய் வேற்கர தலத்தான் காவேரி வாணிபனே (50)

 

33வது வைரவாணிபன் வளையாபதி பெற்ற சரித்திரம் 

மற்றோர் வருண மயிலை மணந்தேதமது

உற்றோர் வெறுக்கவகன்றோர் பாலனாங் கவடான்

பெற்றாள்பின் காளிசொலால் பேர்பாதிப் பங்கீய்ந்தான்

வெற்றிவளையா பதிநூல் வெய்வயிர வாணிபனே (51)

 

34வது இயற்பகை வாணிபனார் சரித்திரம் 

வாய்ந்தோர் முனிபோல் வருமால் விடையார்க்கு

தோய்ந்தார் மனைவி என்னுந்தோகை மயில்போல்பவளை

ஆய்ந்தோர் மகிழயிந்த வம்புவிவானம் புகழ

ஈய்ந்துபதம் பெற்றானியற் பகையாம் வாணிபனே (52)

 

35வது சிவநேசவாணிபன் சரித்திரம் 

வெத்தியுறுஞ் சீகாழிவேதியர்க் கென்றே குறித்த

உத்தமி பாம்பாலிறக்க வோங்குமுருவாய்ச் சமைத்து

புத்தி சொல்லிச்சீகாழிப் புண்ணியன் சென்றானதற்பின்

சித்திமுத்தி பெற்றான் சிவனேச வாணிபனே (53)

 

36வது அமர்நீதி வாணிபன் சரித்திரம் 

கோதையொரு பாதியுருக் கொண்டுசிவன் சோதனையால்

ஓதுமொரு கோவனத்துக்குள்ள பொருள்யாவும் வைத்து

மாதுமகன் றானுமணித்தாம சேரி முத்தி

ஆதாராமாய்ப் பெற்றா னமர்நீதி வாணிபனே (54)

 

37வது பட்டணத்துப்பிள்ளையாராகிய வாணிபன் சரித்திரம் 

கோதிகத்து வாழ்வெனவே கூரிய செல்வந்துரந்து

மாதகத்தில் வைத்த மணிகண்டனைப் பாடி

தீதகத்தி மேன்மைத்திரு வொற்றியூ ரடைந்தான்

பேதமறும் பட்டணத்துப் பிள்ளையெனும் வாணிபனே (55)

 

38வது கலிநீதிவாணிபர் சரித்திரம்

மருவிளக்குங் கொன்றையணி மாதேவர் சன்னிதியிற்

திருவிளக் கிட்டன்பு சிறந்தொரு நாளெண்ணெயின்றி

தருவிளக்குந் தன்கொழுப்பைத்தா னெடுக்கில் முத்திபெற்றான்

கருவிளக்குந் தூயக் கலிநீதி வாணிபனே (56)

 

39வது ஏலேலச்சிங்கர் வாணிபன் சரித்திரம் 

ஓலமிடும் போர்க்கருளு மொற்றியூருற்ற சிவன்

சீலமிகும் வேதியன் போற்தியாக மருளென்றபடி

கோலமிகு ரத்தினங் கொடுத்துயர்ந்த வீடுபெற்றான்

ஏலேலச் சிங்கரெனவே யியம்பும் வாணிபனே (57)

 

40வது குன்றிமணி வாணிபன் சரித்திரம் 

ஓதுமொற்றியூ ரிரையோனுச் சமத்திற்றம் தமரோர்

ஏதமறந்த யெண்ணெயிட்டு மவை போதாமல்

மோது நீராளொளியை மூரிடச்செய்தின் பமுற்றான்

கோதைய ரனைப்பணியுங் குன்றிமணி வாணிபனே (58)

 

41வது புராண ஞானசிவாச்சாரியார் சரித்திரம் 

ஊனமுறுஞ் சென்னியினா லோங்குகுல தர்மமதை

ஈனமுற செய்தயர்ந்த எள்வாணிபர் தமக்கு

வானுறு பூனூலுமணிமந்திர முந்தான் புகன்றான

ஞான சிவவாச்சாரி நாதனெனு மாதவனே (59)

 

42வது மாலைப்பிரபந்தம் நிறைவேறும்படி 

கேடுக்கொண்ட மயிலைகிழான் கோவிந்த வாணிபன் சரித்திரம் 

தங்கள் குலத்தோர்கள் பெற்றதக்க பெருங்கீர்த்திதனை

பொங்கு மெழில்மாலை புனையெனக் கேட்டின்பமுற்றான்

மங்களஞ் சேர்க்கின்ற மயிலைகிழான் கோத்திரத்தான்

கொங்கலர் சேந்தோன்றிமலர்க் கோவிந்த வாணிபனே (60)

 

வைசிய வாணிய கைவளம்

வெண்டா மரையில் விளங்கும் பிரமன்றுடையில்

உண்டான வகுவராலுதித் திடுங்கை – வண்டாருந்

துளபமணி மாயன் றூய்மலமெள் நெய்யால்

ஒளிசோதி யருளுமென வொற்றிடுங்கை – அளிமிகுந்து

திலமர்த்தனஞ் செய்து திகழொளியை யுலகவற்கு

பலநன்மை யடையவருள் பாக்கியக்கை – சிலைநுதலார்

இன்னல் தவிர்க்க யிடுமழகு செய்வதற்கே

சொர்ன நிறுத்தேதுலை தூக்குங்கை – மன்னர்முடி

சூட்டுங்கை யாழிசுமக் குங்கை யொன்னலரை

யோட்டுங் கையஞ்ச லென்றேதுங்கை – நீட்டமுட

னண்பாற் குழைத்திடுங்கை யாகமத்தி னல்லோரைப்

பண்பாக்கும் பிடுங்கை பார்மீதி - லின்பமுற

செம்பொனளித்திடுங்கைசெய்யனலமேயருள்கை

யம்புவியின் மீதிலர சாளுங்கை – செம்பொருளாம்

விக்நேசன் பூசைக்கு வேண்டிய முதீந்திடுங்கைத்

தக்கசெந் தோன்றியணி தாரிருங்கை – மிக்கபுகழ்

அன்னையுமை பூஜைக் கருளுங்கை மார்க்கண்டன்

றன்னைப் பற்றெமனையுந் தாங்குங்கை – நன்னயஞ்சேர்

வில்லுறழ் விற்பிடியாமென் மணியை யீயுங்கை

புல்லருற தவனைப் போக்குங்கை – மல்லலணி

பூவாரு மின்னனைய பொற்றொடியைச் சம்பரமமாய்ச்

சேவேறு மீசர்க்குச் சேர்க்குங்கை – மாவேறு

மீசற்கோ தாரையியல் பாயளித் திடுங்கை

தாசர்புகழ் சம்பந்தஞ் சாருங்கை – மாசகன்ற

அத்திகிரி வரதராஜர் வரேதிரே

வெற்றிகிரி யாலவட்டம் வீசுங்கை – நித்தம்

இரவிலெழு மாதித்த னென்பேர் பெறுங்கை

மருவுதிரு வாசலுற வாழுங்கை – அருமைப்

புறாவுக்காய்ச் சோழன் புறசையை வெட்டித்

தூறாய்த் தட்டிலே நிறுத்த தோட்கை – யறாவழகார்

மாயனெடுமாலுக்கு வண்மை பெறந்தர்பூரத்

தூயமுறுந் தீபமிட்ட சொர்னக்கை - நேயமுடன்

பொற்படா டவ்வைக்குப் போர்த்துங்கை மற்புயடோள்

எற்கவாணியம் பாடியேற்றி டுங்கைச் – சொற்கரிய

பாவாணியெளவையார்பாமாலைப்பாடுங்கைக்

காவேரியாறுகரைகட்டிடுங்கை – நோவாமற்

பொன்பத்திப்புத்திரனைப்போற்றித்தன்புத்திரனை

யின்புற்றுவாளெதிரேயீயுங்கை – நன்சொற்கோர்

கோமலுழான்குதிரையாவாராஞ்செய்யுங்கைக்

கூன்முடக்குமாணிக்கங்கோத்திடுங்கை – மாமருவும்

வேழத்திடை மதித்து வீறுபெறும்வெற்றிக்கைச்

சோழனருள்காளாந்துலங்குங்கை – மாழையா

நாமக் கடாரமுறை நாட்டுங்கை நாவலவர்

பூமவெனத் துதித்துப் போற்றுங்கை – காமனுக்காய்த்

தாம முடியரிந்து தங்குமா காளியெதிர்

நேம மணிப்பீட நிறுத்துங்கைப் – பூமியினில்

வெற்றியு வகைபெற விண்ணோர் களுந்துதிக்க

யுற்றதலை வாழ்க்கை யோதுங்கை – சித்திபெறு

மாலருளால் கண்கொடுத்து மகிழ்ச்சிபெற நாவலற்க்குச்

சாலவள நாடுகரி தந்திடுங்கை – மேலான

தென்னவனான மீனவனைச் செண்டாடி வென்றிடுங்கை

மன்னு பஞ்சகாவியங்கள் வாழ்த்துங்கை – மின்னுமெழில்

ஏலாச் சிலப்பதிகார மியல்பாக நல்வளமை

……மதிலே படைத்த நாயகக்கை - மாலார்

……வாணிபன் வேளாளனுக் காயிரத்திற்

பயனுறவே பாதி பகருங்கை – வயலமிகு

மங்களஞ் சேர்துங்கமுறும் வம்சமெனத் தோன்றுங்கை

எங்கெங்குங் கீர்த்தி யெழுதுங்கை – சங்கநிதி

தோற்குங் கைவெல்லுங்கை தொல்லுல குளோர்வந்தே

ஏற்குங்கைத் தாம்பிறர் பாலேறாக்கை – தீர்க்கமுள்ள

பேறுற்ற சோழனொரு பெண்கேட்கப் பந்தலிலே

மாறுற்ற நாய் கட்டிவைக்குங்கை – வீறுடனே

கற்றவர்கள் போற்றுங்கை கம்பர் திருக்கோயிலெல்லாங்

குற்றமறப்பொன்னாக் கொடுக்குங்கை – யுற்றகலி

நீக்குங்கைநின்று நிலைக்குங்கை நீடூழி

காக்குங்கை வாணிபர்கள் கை.

 

வைசிய வாணிய கைவளம் முற்றிற்று

வைசிய வாணிபர் உற்பவம் வசனம்

    ஸ்ரீ பிர்ம தேவரால் மூன்றாவது வர்ணமாகிய வைசிய வாணிப வக்குவ மகாமுனி என்பவரை சிரிஷ்டித்தும் அவருக்கு குல ஆச்சார அனுஷ்டானவுபதேசங்களையும் புரிந்து வணிக முறைத் தொழிலையும் ஏற்பித்தனர். அவ்வாறு வக்குவமகாமுனி என்பவர் தவவடிவுகொண்டு தவம் புரிந்தனர். அக்காலத்தில் தக்கனென்பவர் 27 நக்‌ஷத்திரத்தையும் 27 பெண்களாக ஏற்படுத்தி சந்திரனுக்கு விவாகம் செய்துகொடுத்தனர். அப்பெண்களில் கார்த்திகை, ரோகணி, என்ற இரு பெண்களிடத்தில் மட்டும் காதல் கொண்டிருந்தனர். மற்ற 25 பெண்களும் தந்தையாகிய தக்கனிடத்தில் தங்கள் குறையை தெரிவித்துக் கொண்டார்கள். அப்பொழுது சந்திரபகவானை அழைத்து கலைகள் அழியவென்று சாபம் கொடுத்தனர். அப்பொழுது சந்திரபகவான் பரமேஸ்பரனிடத்தில் தனக்கேற்பட்ட விக்கினத்தை தெரிவிக்க அத்தருணத்தில் சந்திரசடாதரக் கடவுளாகிய பரமசிவன் தன்சிரசில் சந்திரனை தரித்துக்கொண்டார்.

    அப்பொழுது உலகம் யாவும் இருளாண்டது தேவர் முதலான மூவர்களும் ஆலோசித்து வைசிய வாணிப வக்குவ மகாமுனிவர் தவத்தை அழித்து அழைத்து வரும்படி, மன்மதனை அனுப்பினார்கள். அவ்வாறு உத்தரவு பெற்று பெண்வடிவுகொண்டு வக்குவமுனிவரை புஷ்ப பாணங்களினால் ஏவி விளிக்கும்படி செய்தனன். அவ்வக்குவ மகாமுனிவர் விளித்து மன்மதனை பரமசிவன் நெற்றிக்கண்ணால்  எரியக்கடவதென்று சாபம் கொடுத்தார். அவ்வக்குவ மகாமுனிவரை தேவர் முதலான மூவர்களும் உலக இருளை மாற்றும் பொருட்டு வணிக முறையை உண்டாக்கி நடத்தும்படி உத்தரவு கொடுக்கப்பெற்று அம்மகாமுனிவரால் ஓராயிரம் தெர்ப்பையினிடமாக ஓராயிரம் புத்திரர்களையும் உற்பவமாக்கி அவர் அவர்களுக்கு வாணிகிருபையால் தாமரைமலரில் உர்பவித்த பெண்கள் 1000 பேர்களையும் நிதிக்கோன் விவாகமுடித்துக்கொடுத்து ஓராயிரம் கோத்திரம் ஏற்படுத்தி வணிகமுறை கருவிகளுக்காக இருளை நீக்கும்படி மூவர்களால் செக்கென்னும் கருவிகளாகவும், விஷ்ணுவுடைய திரேக அழுக்கை திலகமென்ற எள்ளாகவும் அத்தைலத்தால் இருளைவிலக்கும் படியாகவும், ஆலயங்களுக்கு உபயோகமாகும் பொருட்டும் ஏற்படுத்தவும் மற்ற தொழிலுக்குரிய திராசுபடிக்கல் பணியாணி முதலானதும் பெற்றுக்கொண்டு சில நகரங்களில் குடியேற்றி  அவர்களுக்கு தேவர் முதல் மூவர்களும் வணிக முறைக்கு கருவிகள் தங்கள் தங்களால் கொடுக்கப்பெற்று வணிகர் முறை செய்யத்துணிந்து செய்து வருவதோடு தங்கள் குலச்சார முறைப்படி அனுஷ்டான உபதேசங்களையும் செய்து வருவதோடு ஈகையும் கீர்த்தியும் சம்பாரித்துக் கொண்டார்கள். அவ்வாறு நமது மரபினோர்களாகிய  வைசிய வாணிபர்கள் குல ஆச்சார அனுஷ்டானங்களையும் நமது குரு ஆச்சாரியார் மூலம் பெற்றுக்கொண்டும் வணிக முறைத்தொழில்களைச் செய்து  அதினால் திரவியம் சம்பாதித்து இகபர சாதக மோக்‌ஷார்த்தம் அடைந்துய்யுமாறு நமது குலக் கைங்கிரியங்களைச் செய்து அதனால் கீர்த்தியும் சம்பாரித்துக்கொள்ள வேண்டியது. ஆனால் நமது மரபினோர்களாகிய முன்னோர்கள் வைராக்கிய சாதனத்தாலும் ஈகையினாலும் புகழ்பெரும் பேற்றையடைந்தனர்கள்.  

  

வைசிய வாணியராயிரங்கோத்திரத்தின் பெயர்

இதில் மகாரிஷி என சேர்த்து வாசிக்கவும்.

 

1.   கண்ணபுரன் மகாரிஷி
2.   உருத்திரப்பட்டன்
3.   கபாலன்
4.   கலிப்பலியன்
5.   மான்கொண்டான்
6.   சங்கதத்தன்
7.   விண்ணழகன்
8.   பால்வண்ணன்
9.   பாண்டரங்கன்
10. விளவிகிழான்
11. சிவப்புலிவன்
12. விதர்ப்பவேகன்
13. மண்ணுடையன்
14. பையன்
15. புனவேட்டன்
16. சிட்டன்
17. மருங்குடையான்
18. மாதனக்கன்
19. மாரன்
20. பாடி
21. கவணியன்
22. ஈஞ்சூர்கிழான்
23. இருக்கைகிழான்
24. இசைப்பேரன்
25. இமையவண்ணன்
26. நாரணபையன்
27. கபிலன்
28. நீர்ப்பாவண்ணன்
29. நாரணவாணிபன்
30. குண்டுமணியன்
31. காரணவண்ணன்
32. கண்ணவாணிபன்
33. பண்ணுடையன்
34. கருமணிக்கிழான்
35. கஞ்சக்கண்ணன்
36. துழாயலுழான்
37. நீலவண்ணன்
38. ஈவணன்
39. கோமண்ணிகிழான்
40. நீனிட்டன்
41. மாளிகையுடையான்
42. திருவுளான்
43. செய்யார் அழான்
44. சிவலன்
45. சித்தன்
46. மறைகிழவன்
47. தாமரங்கன்
48. தாமன்
49. சாத்தன்
50. வாளுழவன்
51. பூம்பெர்கிழான்
52. மன்னணுக்கன்
53. பிரையன்
54. இரும்பந்தை
55. புகலூரிபெட்பன்
56. பிரமலுழான்
57. விதிக்கிழவன்
58. பெருவிளாக்கன்
59. சிறுகிழவன்
60. மூதறிவான்
61. தெள்ளியந்தை
62. சிறுகுடிவாணிபன்
63. பயறன்
64. சேனைக்குண்டன்
65. முறைகிழவன்
66. முள்ளிகிழான்
67. பொதிகிழான்
68. முப்புறவன்
69. துப்புறவான கிழான்
70. மோகினி சூரன்
71. முத்திகிழான்
72. அரசுபையன்
73. பெளந்தன்
74. பன்மன்
75. மொந்தனுழான்
76. போதுழான்
77. முகரிகாப்பான்
78. பத்திகிழான்
79. பீலிகிழான்
80. புரோசன்
81. கோசன்
82. பழங்குடிமி
83. மன்சாத்தன்
84. படியிருக்கை
85. அத்திகிழான்
86. பாசமுடையான்
87. கோடந்தை
88. ஆனைகிழான்
89. கிள்ளிகிழான்
90. அரும்பந்தை
91. சத்திகிழான்
92. இளங்கிழவன்
93. குமாரபாலன்
94. தடந்துறையான்
95. குறிஞ்சிக்கிழான்
96. தார்க்குருந்தன்
97. குப்பலுழான்
98. குழிலுடையான்
99. குமரன் கொத்தன்

100.  கூலவாணியன்

101.  திகைக்கிழான்

102.  குப்பந்தை

103.  ஒப்பமுழான்

104.  உள்ளங்கிழான்

105.  ஒளிவலவன்

106.  ஒதல்கிழான்

107.  ஆலந்தை

108.  கற்பமுழான்

109.  இருங்கண்டி

110.  காரிசாத்தன்

111.  கடையுடையான்

112.  கிரிவேட்டன்

113.  காமக்கண்ணன்

114.  வைப்புடையான்

115.  மணலிகிழான்

116.  வட்டவாதி

117.  மாசறுவாணிபன்

118.  மூதுடன்

119.  வளம்பாத்தூழான்

120.  அறுகிழான்

121.  அரசங்கிழான்

122.  சிவசீலன்

123.  காடுகிழான்

124.  நால்வர்க்குடையான்

125.  சிறுவிகிழான்

126.  இளம்பூதி

127.  சீர்வண்ணன்

128.  சேந்தமங்கலமுடையான்

129.  தேவதத்தன்

130.  குறிகிழான்

131.  கொள்ளந்தை

132.  கூடல் வண்ணன்

133.  செக்காட்டு வாணிபன்

134.  கோட்டுக்காலன்

135.  நெறிகிழான்

136.  நெற்குன்றங்கிழான்

137.  நீலநக்கன்

138.  நெடுஞ்சாத்தன்

139.  கருஞ்சாத்தன்

140.  நிதிக்களந்தை

141.  கடவுளான்

142.  பஞ்சாத்தன்

143.  சலக்குருஞ்சி

144.  கலிங்கமுழான்

145.  கனிகந்தை

146.  கற்பாக்கிழான்

147.  வடுகவண்ணன்

148.  செந்திகிழான்

149.  மணம்பாக்கிழான்

150.  மாங்குணவன்

151.  மாணிக்கப்பையன்

152.  துய்யன்

153.  குடிவொளியான்

154.  இளந்தாமன்

155.  கோவந்தை

156.  குறுவைகிழான்

157.  நெடுவேட்டன்

158.  குண்டையேரன்

159.  முடிகிழவன்

160.  மும்மலுழான்

161.  முதுமாங்கிழான்

162.  முனிக்கொத்தன்

163.  குனிக்கொத்தன்

164.  முக்கோக்கிழான்

165.  குளவந்தை

166.  கடம்புடையான்

167.  குபேரதத்தன்

168.  கொத்தங்கிழான்

169.  கிளிவண்ணன்

170.  கொத்தளந்தான்

171.  இளந்தாமன்

172.  மதிக்கிழவன்

173.  கதிருழான்

174.  குயவாதனன்

175.  மால்வண்ணன்

176.  வேளான்

177.  வளவந்தை

178.  பொன்னுழான்

179.  வெள்ளிக்கிழான்

180.  மரக்காரி

181.  மாசுணவன்

182.  வண்ணப்பூதி

183.  கிளிவஞ்சிகிழான்

184.  வைரமுளான்

185.  திகிரிவேட்டன்

186.  கிழமையுழான்

187.  மாறனுழான்

188.  கடந்தைவாணிபன்

189.  சாத்தந்தை

190.  அருவிகிழான்

191.  தரணிபாலன்

192.  சங்கமன்

193.  நன்மனமுடையான்

194.  சாத்தங்கொத்தன்

195.  நாத்தந்தை

196.  நாக்கிழவன்

197.  நன்னாங்கொத்தன்

198.  நனிமைகிழான்

199.  நற்பாக்கிழான்

200.  நாகந்தை

201.  கோத்தந்தி

202.  குளத்துடையான்

203.  கொட்டியேரன்

204.  குறும்புகிழான்

205.  நறும்பூதி

206.  குமரவண்ணன்

207.  மாத்தந்தை

208.  வதுவைகிழான்

209.  வடுகன்சாத்தன்

210.  மணவைகிழான்

211.  குணலைகிழான்

212.  மத்தியக்கன்

213.  தஞ்சைகிழான்

214.  மறைக்கிழவன்

215.  சாற்றுவாயன்

216.  சாடுபையன்

217.  அரிவைகிழான்

218.  சாத்தங் கண்ணன்

219.  வஞ்சிகிழான்

220.  இளந்திரையன்

221.  வருணவேட்டன்

222.  வண்ணக்கன்

223.  தம்பிரான்

224.  வலிகம்பன்

225.  உஞ்சைகிழான்

226.  துரிசைகிழான்

227.  ஊற்றூர்கிழான்

228.  உதயமுழான்

229.  ஓங்கலூழான்

230.  உரோமபட்டன்

231.  செஞ்சைகிழான்

232.  அரும்பந்தை

233.  செயலூர்கிழான்

234.  செவ்விளக்கன்

235.  செவ்விளம்பன்

236.  சென்னிவேட்டன்

237.  கண்ணிகிழான்

238.  உலகந்தை

239.  கண்ணசாத்தன்

240.  கணங்கிழான்

241.  குணங்கிழவன்

242.  கார்ப்பேரூழான்

243.  பெண்ணைகிழான்

244.  பெருஞ்சாத்தன்

245.  பெருநல்லூழான்

246.  பெருங்கீரன்

247.  நெடுந்தாமன்

248.  பெரும்பேடுழான்

249.  மண்ணிகிழான்

250.  நறுங்கிழவன்

251.  மாரம்பன்

252.  மருத்துவன்

253.  மண்டபமுடையான்

254.  மாம்பாககீழான்

255.  விண்ணிகிழான்

256.  பொற்சாத்தன்

257.  ம்பிகிழான்

258.  வெறுக்கைகிழான்

259.  கொருக்கைகிழான்

260.  வேம்பாக்கிழான்

261.  ஆவந்தை

262.  காகந்தை

263.  மலையுடையான்

264.  ஆட்குன்றன்

265.  காவந்தை

266.  கருஞ்சீனிக்கிழான்

267.  கண்டிப்புரவன்

268.  கோவந்தை

269.  கூனக்குடையான்

270.  குண்டூழ்வன்

271.  பாவந்தை

272.  பாக்கமுடையான்

273.  பையார்கிழவன்

274.  தேவந்தை

275.  சிற்றம்பலமுடையான்

276.  சீயமுளான்

277.  மாவந்தை

278.  மாடத்தலைவன்

279.  மருங்காடன்

280.  தாமந்தை

281.  சாத்தமுடையான்

282.  தலைமைகிழான்

283.  பூவந்தை

284.  பொண்ணாடுபையன்

285.  புலிக்கிழவன்

286.  ஆறைகிழான்

287.  ஆலம்பிரியான்

288.  அநந்தல்கிழான்

289.  கோரைகிழான்

290.  கோமலுடையான்

291.  குடவுளுந்தன்

292.  சேறைகிழான்

293.  சீர்மைத்தலைவன்

294.  சிறுபூதன்

295.  பேரைகிழான்

296.  பூதமுடையான்

297.  பெரும்பையன்

298.  வில்லிகிழான்

299.  வல்லிப்புறவன்

300.  வேளார்தலைவன்

301.  ஒல்லிகிழான்

302.  புள்ளியுடையான்

303.  உழுவையுழான்

304.  அல்லிகிழான்

305.  காரிப்புறவன்

306.  அவந்திகிழான்

307.  நெல்லிகிழான்

308.  வாழைக்கிழவன்

309.  நெடுமாரன்

310.  முல்லைகிழான்

311.  மாடமுடையான்

312.  முறைவேட்டன்

313.  நெல்லுகிழான்

314.  நாங்கூறுடையான்

315.  நெருமலுழான்

316.  வில்லிமுழான்

317.  வாடைப்புரவன்

318.  விழவணிவான்

319.  வல்லிகிழான்

320.  மாறுகிழவன்

321.  மணிவேட்டன்

322.  அரும்பைகிழான்

323.  இளையான்

324.  குடிமாரன்

325.  அணிக்கிழவன்

326.  கருங்கண்ணன்

327.  ஆறுடையான்

328.  காமக்கிழவன்

329.  குறுந்தமுழான்

330.  குடிதாங்கி

331.  கோதனக்கன்

332.  குடிப்பேரன்

333.  விருத்தைகிழான்

334.  பெருந்துரைவன்

335.  விறலிகிழான்

336.  வெண்மூசி

337.  வாத்தலுழான்

338.  மருதாந்தமுடையான்

339.  மங்கலங்கிழவன்

340.  கோத்தலுழான்

341.  கூந்தல்வாணிபன்

342.  கேளாதத்தன்

343.  ஆத்தலூழான்

344.  ஆர்த்சமுடையான்

345.  அம்பிகிழான்

346.  விருக்கைகிழான்

347.  சாத்தனுழான்

348.  பாலதத்தன்

349.  சாகாதத்தன்

350.  அம்பலுழான்

351.  அச்சுவாணிபன்

352.  நயோதனங்கிழவன்

353.  ஆரியவாணிபன்

354.  ஈர்க்குறுவண்ணன்

355.  சம்புகிழான்

356.  மாச்சாத்து வாணிபன்

357.  சமுதைகிழான்

358.  செம்மலுழான்

359.  சென்னாலமுடையான்

360.  சிறுபையன்

361.  தேரைகிழான்

362.  செங்காட்டுவாணிபன்

363.  செம்பூதி

364.  காரிகிழான்

365.  நல்லாவுடையான்

366.  நானப்புரவன்

367.  தாரமுழான்

368.  சாத்தகுமாரன்

369.  சாய்க்காட்டுடையான்

370.  காரியுழான்

371.  காரிக்கண்ணன்

372.  கடம்பந்தை

373.  அண்டலுழான்

374.  ஊதியச்செல்வன

375.  ஆமாங்கிழவன்

376.  கண்டமுழான்

377.  காற்கோட்டுழவன்

378.  கள்ளிப்புறவன்

379.  தண்டமிழன்

380.  கூத்துடையான்

381.  மாளுக்கிதவனாகன்

382.  புண்டரீகன்

383.  புள்ளுடையான்

384.  புவனவேட்டன்

385.  ஊழிகிழான்

386.  திருவெண்ணீருடையான்

387.  யோகியங்கண்ணண்

388.  ஆழிகிழான்

389.  அதிசெயவண்ணன்

390.  ஆழங்குடிகிழான்

391.  கோழிகிழான்

392.  குறுகவித்தன்

393.  குழந்கை

394.  கோமல்கிழான்

395.  தாழைகிழான்

396.  தனம்பதியன

397.  தனுவந்தை

398.  மேதிகிழான்

399.  வேகாற்கிழான்

400.  வேலியங்கிழவன்

401.  ஊதிகிழான்

402.  வேணாடுழான்

403.  உத்திரங்கிழவன்

404.  சோதிகிழான்

405.  நல்லசுள்ளங்காடன்

406.  சுடக்குடையான்

407.  பூதிகிழான்

408.  பூதிநாகன்

409.  புகருடையான்

410.  ஆடைகிழான்

411.  வேட்டங்குமாரன்

412.  அம்புவிகிழான்

413.  பாடிகிழான்

414.  பண்ணாடுபையன்

415.  பழமுணடன்

416.  காடுகிழான்

417.  கட்டவங்கையன்

418.  கடுஞ்சீலன்

419.  கூடல்கிழான்

420.  குண்டைப்புறவன்

421.  குணவந்தை

422.  வேட்டைகிழான்

423.  வேதங்கிழான்

424.  வேதியங்கிழவன்

425.  பாட்டறிவான்

426.  பாங்கிடையான்

427.  பழிக்கிழவன்

428.  நாட்டமுழான்

429.  நாவலுருடையான்

430.  நல்லபூமன்

431.  கோட்டிகிழான்

432.  கோழியுடையான்

433.  கோதைப்பிரியன்

434.  நாவல்கிழான்

435.  தோன்றிக்கிழான்

436.  நடுக்கேள்வன்

437.  பூவல்கிழான்

438.  புத்தூர்க்கிழான்

439.  புண்ணலங்கிழவன்

440.  கோவலுழான்

441.  கூனக்குமளன்

442.  குமாரமுழான்

443.  சேவைகிழான்

444.  சிக்கலுடையான்

445.  சிறுவிந்தை

446.  ஒலைகிழான்

447.  உரோமமுனி

448.  உறைவிடத்தான்

449.  உரசனுழான்

450.  சேலைகிழான்

451.  சேய்நாகன்

452.  செம்பந்தை

453.  சேட்டலுழான்

454.  சோலைகிழான்

455.  சுருதிகிழான்

456.  சுவத்திகிழான்

457.  தூதிபையன்

458.  வேலைகிழான்

459.  வடவேட்டன்

460.  விமானந்தை

461.  மிறட்டுழான்

462.  கோக்கிழான்

463.  கானற்றுரைவன்

464.  குறுதிகிழான்

465.  சேக்கிழான்

466.  சிங்காதனமுடையான்

467.  சிற்றுழான்

468.  மாக்கிழான்

469.  மானக்கஞ்சாத்தன்

470.  மகமதுழான்

471.  பாக்கிழான்

472.  பாரித்தலைவன்

473.  படைதாங்கி

474.  கோணிகிழான்

475.  கொசப்பிநாயன்

476.  குயிற்றிரையான்

477.  சேணிகிழான்

478.  செம்பங்கிழான்

479.  செம்பியனனுக்கன்

480.  தோணிகிழான்

481.  சோமகடத்தன்

482.  துளவுடையான்

483.  பாணிகிழான்

484.  பாணிக்குரவன்

485.  பவணிகிழான்

486.  சென்னிகிழான்

487.  சிங்கபுரமுடையான்

488.  சிரப்புரவன்

489.  கண்ணிகிழான்

490.  கச்சிப்புறவன்

491.  கதலிகிழான்

492.  பொண்ணிகிழான்

493.  கண்ணபுரமுடையான்

494.  போசங்கிழான்

495.  வன்னிகிழான்

496.  வன்னியுடையான்

497.  வளப்புறவன்

498.  வெற்பந்தை

499.  விரிஞ்சைகிழான்.

500.  வெண்பேடன்

501.  பொற்பந்தை

502.  பூழிகுடிக்கண்ணன்

503.  போதிகிழான்

504.  வைப்பந்தை

505.  மரகதப்படையான்

506.  வேட்டஞ்சிட்டன்

507.  குப்புரவன்

508.  கோசமுடையான்

509.  குரவந்தை

510.  குன்றிகிழான்

511.  கோட்டுருளான்

512.  கோலைக்குன்றன்

513.  மன்றமுழான்

514.  மாற்றமுடையான்

515.  மடங்கலுழான்

516.  நின்றைகிழான்

517.  பூதவணிகன்

518.  நிருதிகிழான்

519.  கொன்றைகிழான்

520.  கோட்டங்கிழான்

521.  குவளைப்பாங்கன்

522.  விடமுழான்

523.  வீடலுழான்

524.  நல்லவிளிமைகிழான்

525.  சடைகிழான்

526.  சிற்றாமுழான்

527.  கதலிகிழான்

528.  குடிகிழான்

529.  குமரசாத்தன்

530.  குமாரந்தை

531.  படிகிழான்

532.  பாண்டிக்கிழவன்

533.  பழுவுடையான்

534.  பொற்பூதி

535.  பூசந்தைகிழான்

536.  பொற்கொடி கிழான்

537.  நெற்றாயன்

538.  நீலப்பாவடையான்

539.  நெற்குளமுடையான்

540.  நற்றுந்தி

541.  வாலிகண்டபுரமுடையான்

542.  ஞாலல்கிழான்

543.  பொற்றாமன்

544.  தொங்கபுரமுடையான்

545.  புட்பாகன்

546.  புங்கனுழான்

547.  புளினங்கூத்தன்

548.  புனத்துரைவன்

549.  கங்கைகிழான்

550.  காளத்துழான்

551.  காரணகேள்வன்

552.  செங்கைகிழான்

553.  சிங்கப்புறவன்

554.  சிறுகுடியான்

555.  சங்கமுழான்

556.  சங்கப்புறத்தன்

557.  சரிகைகிழான்

558.  மாற்றுவணிகன்

559.  நாரைகிழான்

560.  மலையான்

561.  மயிலைகிழான்

562.  கூற்றுழான்

563.  கோமாங்கிழான்

564.  கோக்குடிகிழான்

565.  ஆற்றுழான்

566.  ஆலங்காட்டுடையான்

567.  ஆரணகேள்வன்

568.  நாற்றுழான்

569.  நலத்துழான்

570.  நச்சலூருடையான்

571.  வேளிகிழான்

572.  வெற்பாங்கிழான்

573.  வெள்ளருகுடையான்

574.  தாளிகிழான்

575.  தாதாரமுடையான்

576.  தனங்கிழவன்

577.  மீளிகிழான்

578.  வித்தூருழான்

579.  விறகுடிக்குறவன்

580.  சூளிகிழான்

581.  தானக்குடையான்

582.  துருவையுழான்

583.  கைகைகிழான்

584.  காமாங்கிழான்

585.  களந்தைகிழான்

586.  பொய்கைகிழான்

587.  பொன்வணிகன்

588.  பூவண்ணமுடையான்

589.  நெய்தலுழான்

590.  நெய்யாடுகோக்கிழான்

591.  நீசனக்கன்

592.  வைகைகிழான்

593.  வல்லிக்குடையான்

594.  வளவல்கிழான்

595.  பாசைகிழான்

596.  பாலாற்றுழான்

597.  பாதிரிக்குடையான்

598.  காசிகிழான்

599.  கற்பூரவணிகன்

600.  மணிக்கிழவன்

601.  ஓசைகிழான்

602.  ஒதிமங்கிழவன்

603.  உளக்கினியான்

604.  தேசிகிழான்

605.  தேசவணிகன்

606.  சிலுமாக்கன்

607.  உருவந்தை

608.  ஆலத்தூருடையான்

609.  ஓமாங்கிழவன்

610.  கருவந்தை

611.  காண்டகிழான்

612.  கணம்பாக்கிழவன்

613.  பெருவந்தை

614.  பெண்ணாடகமுடையான்

615.  பீரை ரைகிழான்

616.  முருவந்தை

617.  முத்திடும்பையன்

618.  முனிக்கிழவன்

619.  முனிவேட்டன்

620.  செங்கதிரன்

621.  தருப்பைகிழான்

622.  காரைகிழான்

623.  காரிவணிகன்

624.  கடைகாப்பான்

625.  பாரிகிழான்

626.  பாசைவணிகன்

627.  படிக்குளத்தன்

628.  பூரிகிழான்

629.  போதிவணிகன்

630.  புறவந்தை

631.  முத்தலையன்

632.  முற்பேறுடையான்

633.  முதுக்குன்றன்

634.  சுற்றுரவன்

635.  சொற்பாங்கிழான்

636.  செந்தலையுடையான்

637.  பொற்றுறைவன்

638.  புட்பவிமானன்

639.  புன்னைப்பாக்கிழவன்

640.  முற்றுடையான்

641.  மூலங்கிழான்

642.  முதுகிழவன்

643.  முல்லைக்கணியன்

644.  குச்சலுழான்

645.  வித்தகவேள்

646.  விந்தமுழான்

647.  வெள்ளந்தை

648.  வேணிகிழான்

649.  குத்தனுழான்

650.  குன்றமுடையான்

651.  கொம்மைகிழான்

652.  முத்தனுழான்

653.  முக்கட்சடையன்

654.  முருங்கைகிழான்

655.  மதிவேளன்

656.  மதுரைகிழான்

657.  புளியங்குடியான்

658.  தோட்டுழவன்

659.  சோழெனொத்தான்   

660. சையமுமான்

      661.  போரமுழான் 

662.  விநயமுழான்

663.  வையமுழான்

664.  வாணிபுரமுடையான்

665.  வாலிகிழான்

666.  பொற்சந்தன்

667.  தேவேந்திரன்

668.  புகலிகிழவன்

669.  மத்தகந்தோளான்

670.  மடம்பன்

671.  மணுவுழான்

672.  கொற்றந்தை

673.  கொற்றப்புதல்வன்

674.  குரவூரன்

675.  சிற்றந்தை

676.  பண்ணைகிழான்

677.  சீரணிகிழவன்

678.  மாங்கூத்தன்

679.  அம்பல்கிழான்

680.  கொற்கைகிழான்

681.  கோவிந்தைகிழான்

682.  கோவிரட்டன்

683.  செங்குடிவாணிபன்

684.  செண்பகக்குடையான்

685.  மருதவணமுடையான்

686.  உத்திரங்குடையான்

687.  பூதப்பாக்கிழான்

688.  பண்ணாகன்

689.  பிராந்துடையான்

690.  பேடுகிழான்

691.  நற்சேடன்

692.  கடுவளஞ்சாத்தன்

693.  தண்டலங்கிழவன்

694.  கலைவணந்தை

695.  செயநக்கன்

696.  தேவகுலன்

697.  சிறுகரும்பூருடையான்

698.  நெற்குப்பைகிழான்

699.  நெற்குன்றமுடையான்

700.  வேங்கைகிழான்

701.  சிறுவீரைகிழான்

702.  காச்சலுழான்

703.  சிந்துழான்

704.  சிறுகுறிஞ்சியுடையான்

705.  செழும்புகிழான்

706.  தாழைவாணியன்

707.  தலைக்குடையான்

708.  தஞ்சார்கிழவன்

709.  தருமந்தை

710.  சோழவாணியன்

711.  சூறைகிழான்

712.  தோட்டங்கிழான்

713.  துறுமுடியான்

714.  பூழிவாணியன்

715.  புன்னைகிழான்

716.  பூகத்தொடையான்

717.  பொருளந்தை

718.  கோழிவாணியன்

719.  கோம்பிகிழான்

720.  கோச்சடைமாரன்

721.  குலநாகன்

722.  குடம்புகிழான்

723.  குன்றமுழான்

724.  குமாரக்கிழவன்

725.  குறும்பூதி

726.  நந்திகிழான்

727.  பாப்பயில் பாகன்

728.  பாதமுழான்

729.  மடந்தை வாணியன்

730.  மாப்பூதி

731.  மாத்தூர்கிழவன்

732.  மாசறுக்கன்

733.  கடந்தமணியன்

734.  செந்துரையான்

735.  கருவிலிகிழவன்

736.  காப்பந்தை

737.  திருநெல்வேலியுழான்

738.  திருப்பாலைகிழான்

739.  திசைக்கிழவன்

740.  வீராகரன்

741.  விற்பேடுகிழான்

742.  விரையாற்றுடையான்

743.  வேலொத்தான்

744.  தருமங்கிழான்

745.  தேர்தபணன்

746.  தாமரைக்கிழவன்

747.  அமரர் க்குரமுடையான்

748.  பருத்திக்குடையான்

749.  பவளத்தான்

750.  பீதகவேட்டன்

751.  வழுதிக்குடையான்

752.  பெருஞ்செல்வமுடையான்

753.  சிற்றாம்பூருடையான்

754.  குலாவன்

755.  நெடுங்குமாரன்

756.  கழுக்குன்றமுழான்

757.  பெருமைகிழான்

758.  மகிழையுடையான்

759.  மாறிட்டான்

760.  கொற்றமான்

761.  குடுமிகிழான்

762.  குன்றங்கிழான்

763.  குடவுழவன்

764.  புட்கரக்கொடியான்

765.  வீழிமான்

766.  புட்பவாணிபன்

767.  நெடுங்காவுழான்

768.  நீள்வேட்டன்

769.  கோயிலான்

770.  வாரிதிவண்ணன்

771.  ஆவுழான்

772.  அம்பலங்கிழவன்

773.  ஐருவண்ணன்

774.  காவுழான்

775.  கோடீச்சுரன்

776.  கஞ்சுதீரன்

777.  வாவுழான்

778.  மஞ்சுவாணிபன்

779.  மனைக்கிழவன்

780.  சேவுழான்

781.  ஆடுபையன்

782.  செவ்விளம்பையன்

783.  நன்னாகன்

784.  நீளந்தை

785.  நறுங்கண்ணன்

786.  நாடுபையன்

787.  கன்னாபுரமுடையான்

788.  ஆறுமுடியான்

789.  காப்புறவன்

790.  பொன்னாரமுடையான்

791.  நெறிவாளுடையான்

792.  பொற்பையன்

793.  மன்னாரகமுடையான்

794.  மயிலந்தை

795.  மணங்கிழவன்

796.  நல்லூருடையான்

797.  குறுவேட்டன்

798.  காலைகிழான்

799.  நறவந்தை

800.  நரிப்புறவன்

801.  கல்லாலுழவன்

802.  இங்கிதமுழவன்

803.  கறையேரன்

804.  கஞ்சாரன்

805.  நல்லாருடையான்

806.  முதுமான்

807.  நட்புடையான்

808.  நல்லமனைச்செருவன்

809.  நெல்லூருடையபையன்

810.  நென்மலைக்கிழவன்

811.  நிலாவேட்டன்

812.  சொந்தத்துறைவன்

813.  மங்கலவாணிபன்

814.  மதுவன்

815.  துலைபாலன்

816.  சந்தப்புறவன்

817.  தனிசூரன்

818.  தனிசுத்தன்

819.  தாமகிழான்

820.  கந்துகண்ணன்

821.  காலிகிழான்

822.  கடுவேட்டன்

823.  காவேரிகிழான்

824.  சிந்திப்புறவன்

825.  விசாலன்

826.  சேனைகிழான்

827.  செயகண்டி

828.  ஈகைகிழான்

829.  மைக்கிழவன்

830.  புரமுழான்

831.  விருந்தைகிழான்

832.  பாகைகிழான்

833.  நவரத்தினவாணியன்.

834.  பரப்புடையான்

835.  மாகமுழான்

836.  முதுவாணிபன்

837.  மைம்முடியான்

838.  மாறைகிழான்

839.  தோகைகிழான்

840.  பெரியவாசலுழான்

841.  கொடுவரிக்கண்ணன்

842.  அரசுடையான்

843.  இளவைக்கிழான்

844.  அறுவாணிபன்

845.  அடையுடையான்

846.  பரிசில்கிழான்

847.  பாடாலிவாணியன்

848.  பனங்கிழவன்

849.  புரிசைகிழான்

850.  நாகன்

851.  நெருப்புடையான்

852.  புவனிகிழான்.

853.  வரிசைகிழான்

854.  வைடூரியவாணிபன்

855.  வற்றல்கிழான்

856.  வனமுழான்

857.  நெல்லுண்ணி

858.  மார்க்கிழவன்

859.  இளந்தத்தன்

860.  நீற்றுழான்

861.  நியமங்கிழான்

862.  இல்லங்கிழான்

863.  நீதிபத்தராயன்

864.  தாமதத்தன்

865.  இயமங்கிழான்

866.  கொல்லங்கிழான்

867.  நல்விளக்கன்

868.  நன்நாகன்

869.  நந்திட்டன்

870.  கொன்னுழான்

871.  கோமூர்கிழான்

872.  வல்லங்கிழான்

873.  வைரவாணியன்

874.  வலங்கிழான்

875.  வன்மறைகிழான்

876.  வடுவுகிழான்

877.  காருந்து கொடையான்

878.  மாவுழான்

879.  களமுழான்

880.  நலம்பெருகிழான்

881.  கீரந்தை

882.  கோவலூர்கிழான்

883.  நடமிருக்கை

884.  கிழவுழவன்

885.  வளையூர்கிழான்

886.  பேரந்தை

887.  வானாடுபையன்

888.  பிரம்புழான்

889.  பெருவாணிபன்

890.  பேருழான்

891.  ஏழான்

892.  வீரந்தை

893.  வீரணமுடையான்

894.  வீரங்கிழான்

895.  விற்குடிகிழான்

896.  விற்புளான்

897.  பங்களான்

898.  இந்திரப்புறவன்

899.  அச்சுமான்

900.  பட்டணங்கிழவன்

901.  துங்கபாலன்

902.  பிங்கலந்தை

903.  கரிமுகவண்ணன்

904.  சொற்பையன்

905.  சங்கபாலன்

906.  கோமணத்துழான்

907.  சங்கந்தை

908.  தரணியுடையான்

909.  சிங்கபாலன்

910.  செங்குறிஞ்சி

911.  சிங்கம்பாடி

912.  தேனுழான்

913.  செவ்வரிகிழான

914.  கடுவந்தை

915.  கேண்மையுடையான்

916.  கரும்பந்தை

917.  கடன் மல்லையுடையான்

918.  வடுவந்தை

919.  மாபோதிவாணிபன்

920.  வட்டமணியுடையான்

921.  வடபேருழான்

922.  வதிட்டன்

923.  படுவந்தை

924.  பரதவாணிபன்

925.  பாவலங்கிழவன்

926.  பனைப்பாங்கிழான்

927.  வடகுன்றன்

928.  மானாயன்

929.  மாமூலன்

930.  மாத்திரங்கிழவன்

931.  மாவலிகிழான்

932.  பொன்னந்தை

933.  மருதுழான்

934.  புலமுழான்

935.  பூணுழான்

936.  புள்ளிமான்

937.  துங்கமாங்கிழவன்

938.  மாங்குடிகிழான்

939.  கண்ணந்தை

940.  ஏந்திமங்கலவன்

941.  கடுவெண்ணி

942.  கண்ணக்கன்

943.  கானங்கிழான்

944.  வண்ணந்தை

945.  வள்ளியுடையான்

946.  வண்மைநாயன்

947.  மாக்குடிகிழான்

948.  வல்லுழான்

949.  பிறவுத்தன்

950.  வேட்டந்தை

951.  சிறுவாம்பூர்கிழவன்

952.  சிறுநல்லூருழான்

953.  பெருங்குடிவாணிபன்

954.  கோவேளான்

955.  மாம்புரம்பாவுடையான்

956.  மன்றிருகை

957.  புண்டரீகன்

958.  மருவுடையான்

959.  கோவெண்ணைகிழான்

960.  புஞ்சைகிழான்

961.  பெருவேட்டன்

962.  கரும்புள்ளி

963.  தாதமுடையான்

964.  புலமுழான்

965.  வள்ளைகிழான்

966.  வெண்புறத்தன்

967.  மான்படுவாணிபன்

968.  மாடத்துழான்

969.  மன்னாதன்

970.  மூதறிகுன்றன்

971.  வாயில்கிழான்

972.  சேனந்தை

973.  மொய்மைகிழான்

974.  செயபாலன்

975.  முசுகிழான்

976.  இளவந்தன்

977.  நனிமைகிழான்

978.  நந்திமங்கலங்கிழான்

979.  தவமிகுந்தான்

980.  நதிகிழான்

981.  நீதிகிழவன்

982.  மாருதன்

983.  வாழ்வுடையான்

984.  பெருங்கேள்வியன்

985.  வைதலுழான்

986.  கருமுல்லைகிழான்

987.  குமபோதன்

988.  மகரவாணிபன்

989.  மதுரவாணிபன்

990.  மாறன்

991.  மரகதவாணிபன்

992.  பிருந்தையுழான்

993.  பெருங்கிள்ளி

994.  பெருநாகன்

995.  பெருந்தேவனார்

996.  வண்ணத்தன்

997.  முதுகிழான்

998.  வேம்புகிழான்

999.  வாலிபுரமுடையான்

1000. வாவலுடையான்

மேலே சொல்லிய பெயர்களையுடைய ஆயிரவரும் இருடியர்களாவர் அன்றியுமிவர்க்கு அக்காலத்திலே பொதுவாகத்தந்த சிறப்புப்பெயர்களாவது

தென்னவராயர், வணிகநாராயணா, திலவணிகாரதித்தர், வைசியராயர், அரசர்கள் விரும்பும் வணிகபுரந்தார் நல்ல நீதியையுடைய மாநாகராயர் இக்காலத்தில் வழங்கும் இத்தன்மையாகிய இவ்வாறு பெயரையும் தேவர்கள் பின்தந்தனர்.

வைசியர்களுக்குரியனவாகிய தசாங்கங்கள்

கிட்கிந்தமலை, பப்பையாறு, கருடக்கொடி, காந்தண்மலர், பைந்நாகமுரசம். கலிமாருதப்புரவி, கமலகண்டிகைத்தேர். உபலாபுரிபட்டணம், வைகுந்தவளநாடு. இயவாரணம்.

ஆயிரங்கோத்திரத்திருநாமம் முற்றிற்று.

 இந்நூலை பாதுகாத்து எதிர்கால வாணிய சந்ததிகளுக்கு கடத்துவோம்





 

No comments:

Post a Comment