Tuesday, May 16, 2023

வைசிய வாணிய கைவளம் ஆயிரமும் திருநாம கோத்திரமும்

  

வைசிய வாணிய ஆயிரவர் பிரபந்தம்

மதுரை கம்பர் ராமபத்திரபிள்ளையவர்களால் இயற்றப்பட்டது

வைசிய புராணத்தில் உள்ளபடி

 

வைசிய வாணிய கைவளம் ஆயிரம்

 திருநாம கோத்திரமும்

 

மதுரை வடக்கு லயன் தெரு வைசிய வாணிய

நாகந்தை மகரிஷி கோத்திரம்

சொ.கூ. பழனியப்ப செட்டியாரால்

பார்வையிடப்பட்டது.

 மதுரை செல்லாத்தம்மன் கோவில் தெரு

வைசிய வாணிய மயிலை கிழான் மகரிஷி கோத்திரம்

ம.லெ. வெங்கிடாசலம் செட்டியார்

ஷை வைசிய வாணிய இலுப்புடையான் மகரிஷி கோத்திரம்

சி.ப. சித்திரபுத்திரஞ் செட்டியார்

இவர்களின் வேண்டுகோளின் பேரில்

 

மதுரை வடக்கு லயன் சிம்மக்கல் தெருவிலிருக்கும்

வைசிய வாணிய மயிலை கிழான் மகரிஷி கோத்திரம்

மு.கோ. மாரியப்ப செட்டியாரால்

அச்சிடலாயிற்று.

Jhgfhgffg

மதுரை புதுத் தெரு

கே. ஆர். ரெங்கனாதம் அண்ட் பிரதர்ஸ்

அச்சுக் கூடத்தில் பதிப்பிக்கப்பெற்றது

1910

             வைசிய வாணிப ஆயிரவர் மாலை

வினாயகர் காப்பு

 சீர்த்தி மாலைத் தினந்தொழு தன்புறும்

ஆர்த்தி மாலையா யிரம்பேர்கள் தன்

கீர்த்தி மாலை கிளர்த்த வினாயக

மூர்த்தி தாளை முடிக்கணிவாமரோ. 

 

சகந்தருவா யென்றயனைத்தா மோதரன் பார்த்து

மகிழ்ந் துரைக்கத்தான் படைத்தமாமலெரென் றான்முகத்தில்

இகந்தழைக்க வந்தாரெழிற் மறையோர்மென் புயத்தில்

மிகுந்தவு லகாழுமுடி வேந்தர் பிறந்திட்டனரே (1)

 

அன்னான் றுடையிலருள் வணிகனென் றுரைக்கும்

மின்னார் நூன்மார்பன் மிளிர்வக்குவன் பிறந்தான்

பொன்னரும்பாத மதிற்போந்தனர் வேளாளர் தில

நன்னாவலர் புகழும் நல்வக்குவ முனிவன் (2)

 

வானவரில் மேலாக வாய்ந்தெதவம் புரிந்தான்

ஈனமறுந் தக்கனென் போனீன்ற யிருபத்தேழு

மீனவளி மானாளை வெண்ணிலா வுக்கீய

தானவனங் கோரிரண்டுதார் குழல் மேலின்ப முற்றான் (3)

 

கார்த்திகை மேல்ரோகணிமேற்காதல்மிகுந்தெங்கள் சுகம்

பார்த்திலனென் றேங்கியந்தப் பாவையர்கள் தந்தையிடம்

வேர்த்துரை க்கத்தக்கன் வெகுண்டு மதியைப்பார்த்து

ஆர்த்துங் கலைகளழிவா யெனப் பயந்தே (4)

 

தன்குறையைச் சொல்லியரன்றன் றலையிலூற்றிடு நாள்

மின்பரவும் பூவுலகில் மிக்கவிருளாய்ப் பரவ

பொன்பரவு மீசனிடம் புங்கவர்கள் போயுரைக்க

வன்பரவு மன்மதனை வாவென்ற ருகளைத்து (5)

 

வக்குவ மகாமுனிவன் மாதவசைப் போயழித்து

இக்கணம் வாவென்ன வெழுந்தவன் போய்த்தானழிக்க

மிக்கமதனை வெகுண்டு பரமேஸ்பர ன்றன்

அக்கினிக்க ண்ணாலளி வாயங்கசாவென் றுரைத்தான் (6)

 

வெள்ளி மலைச்சென்று பரமேஸ்பரனை போற்றிடவே

புள்ளிமா னேந்தும் புனிதனிவை கூறலுற்றான்

தெள்ளிய சீர்பெற்ற திரள்வணிகமாக்கள் தனை

பிள்ளைகளா யிவ்வுலகில் பெற்றருள்வா யென்றுரைக்க (7)

 

தெற்பையோ ராயிரத்தைச் சீர்வணிக றாப்படைக்க

முப்புரிநூல் தண்டுடனேமூறுங்க மண்டலமும்

செப்பும் பவித்திரமுஞ் சீராய்த் துலங்கிடவே

யிப்பு வியில்வந்தாரெழில் சேர்தில வணிகர் (8)

 

உதித்த புதல்வர் தனக்குற்ற திருநாமமிட்டான்

மதித்த திருமால் மலமுறுட்டி யெள்ளாக்கி

கதித்த புதல்வரிருகை மீதிலே கொடுத்தான்

துதித்த சிவன்மாலு மிசை தோன்ற மணிச்செக்காக (9)

 

கொடுத்தா ரெண்டிக்காளுங் கோலதிக்குப் பாலகரும்

அடுத்தார்கள் மற்றவணிகரு வியாகிய பின்

தொடுத்த துளாய்யெம்பெருமான் றூயதருமச் சேவை

இடுத்த மறவாணி பருக்கீய்ந்து புகழ்ந்திட்டனனெ (10)

 

சந்திரனுஞ் சூரியனுந் தட்டாகினார் வசுக்கள்

அந்தமிகுந் துளைக் களானார்கள் மாருதமும்

வந்துநடு நாவாக வாய்மைபெறு மக்கினியும்

சிந்தைமிகு ங்குண்டலமாய்ச் சேர்ந்தார் வணிகரிடம் (11)

 

ராசிபனி ரெண்டும் நவின்ற படிக்கல்லாக

வாசமிகு நட்சேத்திரம் வாய்ந்த யிருபத்தேழும்

தேசம கிழச்சிறந்த பணியா ணியென

மாசகன்ற வாணிபத்தை வாணுபர்கைக் கொண்டனரே (12)

 

கைமாத்திரைக் கோலுங்கங் கணமும் பொக்கணமும்

மெய்வைப் பிரணவமு மிக்கவோரஞ் செழுத்தும்

செய்மை திகழ்கின்ற திலாக்கோல்தனைச் சிவனும்

பொய்மையற்ற வாணிபற்குப் புந்திமகிழ கொடுத்தான் (13)

 

ஆர்த்திபெருகின்ற பம்பையாற்றை வருணன் கொடுத்தான்

கீர்த்தி நிருதியுங் கிஸ்கிந்தா சலங்கொடுத்தான்

காத்தபிரமன் கமலக் கண்டிகைத்தேரைக் கொடுத்தான்

வாய்த்த திருமாதுபங்கன் வைகுந்த நாட்டுடனே (14)

 

ஓங்குகருடக் கொடியுமுள்ள ன்பினால் கொடுத்தான்

தேங்குமுத்தரா பதியைச் செய்யநிதிக்கோன் கொடுத்தான்

தாங்குமலர்ச் செந்தோன்றித்தாரை முருகன் கொடுத்தான்

பாங்குபெறு மைங்கரத்தோன் பாசங் கொடுத்தனனே (15)

 

தேவர்கோ னென்போன் செயவாரணங் கொடுத்தான்

மாவரு நற்சந்திரன் மடிச்சேலை தந்தனனே

வாவுபவனன் கலினமருதமன் பாய்க் கொடுத்தான்

தாவுநமனி வர்க்குத் தண்டாயுதங் கொடுத்தான் (16)

 

பருதிமகி ழ்ந்தன்பாக பஞ்ஞாங்க மாமுரசம்

விருதுதிசை முக்கியவேழ முந்தந்தான் கனலோன்

கருதுநவ ரத்தினங் கணக்கிலாமற் கொடுத்தான்

இருதயமுற் றேவணிகரிங் கிவையெல்லாம் பொருந்தி (17)

 

தேவர்நிதிக் கோன்றவத்திற் சென்றரு ளீரைஞ்ஞூறு

பூவையரைக் கல்யாணம் பூராயமாய் முடித்து

மாவருதொண்ணூத்தி யென்பான் மான கரிலிங்கிவரைக்

கோவலர்கள் கொண்டாடக் குடியேத்தி வைத்தனரே (18)