கேரள செக்காளர்கள்
கேரளாவின்
தொடக்க காலங்களில் தொழிற்குடிகள் மட்டுமே இருந்தன
சாதிகள், சாதிப்பிரிவுகள் இல்லை. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இருந்த
தொழிற்குடிகள் பிராமணர்களின் இடபெயர்வுக்கு (பிராமணர்கள் கேரளாவில்
குடியேறிய பின்) பின் தாம் செய்கின்ற தொழிலுக்கு ஏற்ப சாதிகளாக
பிரிந்து கொண்டன, என்பதனை இலம்குளம் குஞ்சன் பிள்ளை தனது நூலில்
பதிவு செய்கின்றார்.
மேலும் அக்காலத்தில் இருந்த
குடிகளாக 7 குடிகளை அவர் குறிப்பிடுகின்றார்.
1.
துடியன் ( துடி என்னும் இசைக்கருவியை
இசைப்பவர்)
2.
பறையன்(பறை என்னும் இசைக்கருவியை இசைப்பவர்)
3.
பாணர் (பாடகர்)
4.
கடம்பர் (வேளாண்மை செய்வோர்)
5.
வலையர் (மீனவர்)
6.
வணிகர் (வாணிபம் செய்வோர்)
7.
உழவோர் (உழவு பணி செய்வோர்)
பிராமணர்களின்
ஆதிக்கம் கி.பி. எட்டாம் நூற்றாண்டுகளில் வலுப்பெறவே சாதிப்பிரிவுகள், சாதிய
ஆதிக்கம் மேலோங்கின, என E.M.S நம்பூதிரிபாடு
அவர்கள் தன்னுடைய நூலான Caste, Clan and Parties in Modern Political Development to Kerala வில்
குறிப்பிட்டுள்ளார்.
1923
ஆண்டு வெளியிடப்பட்ட சப்தாதரவழி என்னும் நூலில் 8 வகையான
பிராமணர்கள் இருந்ததாகவும், அந்தராள சாதி என்று கோவிலுக்காக நியமிக்கப்பட்ட இரண்டு
வகை சாதிகளும், 12 சூத்திர வகையினரும், சில்பிகள் 6 வகையினரும், பதிதார் என்னும் தீண்டதகாதோர்
10 வகையினரும், தன சாதிகள் 8 வகையினரும் அதில்
64 உட்பிரிவுகளும் இருந்ததாக அந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாணிய மாறன்கள்:
கேரளத்தில்
செக்கினைக் கொண்டு எண்ணெய் எடுக்கும் வாணிய இனம் செக்காள
நாயர்கள் அல்லது செக்காள மாறன்கள் என அழைக்கப்படுவர். மேலும் இவர்களுக்கு வாணிய நாயர் என்ற
பெயரும் உண்டு. இவர்கள் நாயர் இனத்தில் ஒரு அங்கமாக விளங்குகின்றனர்.
திருவிதாங்கூரில் இவர்கள் செக்காளர்கள் எனவும், மலபார், கொச்சி போன்ற இடங்களில் வட்டக்காடன்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர். வாணியர்கள்
நல்லெண்ணை, மற்றும் தேங்காயெண்ணையை ஆட்டி எடுத்து
கோவிலுக்கு விளக்கெரிக்க வழங்கியுள்ளனர்.
1921லிருந்து புல்வா என்ற பட்டமும் வாணியர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது வட்டக்காட்டு
நாயர்கள் முன்னேறிய வகுப்பினர்களாக (FC) கருதப்படுகின்றனர். செக்காளா நாயர்கள் (OEC) யாக கருதப்படுகின்றனர்.
மலையாள மொழியின் தந்தை என்று அழைக்கப்படுகின்ற துஞ்சத்து இராமானுஜ எழுத்தச்சன் செக்காள நாயர் பிரிவை சேர்ந்தவரே. அவர்களுடைய வழித்தோன்றல்கள் இன்றளவும் கேரளாவில் உள்ள மலப்புரத்தில் வாழ்ந்து
வருகின்றனர். நாயர்களில் பல பிரிவுகள் இருந்தாலும், முன்னேறிய சில நாயர் பிரிவுகள் செக்காளர்களை நாயர்களாக ஏற்பதில்லை.
கேரளபதி, மற்றும் சங்கர சுமிருதியை
என்னும்
நூல்களை எழுதிய சங்கராச்சாரியார் நாயர்களை
சூத்திரர்கள் என்றே வகைப்படுத்தியுள்ளார்.
கேரள பனியா:
வடக்கு
மலைநாட்டு மலபார் வாணிய பிரிவினர் வாணிபம் செய்ய செளராஸ்டிரா நாட்டிலிருந்து வெளியேறி
கேரளாவில் உள்ள கொளத்து நாட்டில் வந்து குடியேறியவர்களே. செளராஸ்டிரா நாட்டிலிருக்கும் வாணியர்களுக்கு பனியா என்று பெயர்.
கேரளாவில்
பரம்பரையாக வாழ்ந்து வந்த வாணியர்களுக்கு மட்டும் நாயர் பட்டம் வழங்கப்பட்ட நிலையில்
கொளத்து நாட்டு கொளத்திரி ராஜா பனியர்களுக்கும் நாயர்
என்ற பட்டத்தை சூட்டிக்கொள்ள அனுமதி வழங்கினார். செக்காளர்களுக்கு
நாயர் என்னும் பட்டம் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து
தான் கிடைக்கத் துவங்கியது.
நாயர் பட்டம்:
தமிழக
வாணியர்கள் போல் பரம்பரை கேரளா வாணியர்களும் தங்கள் இனப் பெயரின் பின் சிலர் செட்டியார்
என்ற பின்னொட்டினை பயன்படுத்தி வந்தனர். 19 ஆம் நூற்றாண்டில்
தான் வாணியர்கள் நாயர் என்ற பட்டத்தை ஏற்றனர். நாயர் என்ற பட்டத்தைப்பெற ஒரு கலகமே விளைந்தது. அதன் பின்னரே 1921 ஆம் சாதிகள் கணக்கெடுப்பின் போது நாயர் பட்டம் வழங்கப்பட்டது.
கேரள
செக்காளர்கள் அக மண உறவுமுறை கொண்டவர்கள், மற்ற நாயர் பிரிவுகளில் பெண் எடுப்பதுவும் இல்லை கொடுப்பதுவும் இல்லை.
செக்காளர்களின் குலதேவதை:
செக்காளர்களின்
முதன்மை தெய்வம் முச்சிலத்து பகவதி அம்மன் ஆவார்
இவரின்
இன்னொரு பெயர் அன்னபூர்னேஸ்வரி ஆகும்.
முச்சிலத்து
பகவதியம்மனின் கதை மருதவாணிபரின் மகளாய்ப்பிறந்த அன்பிற் பிரியாள் கதையுடன் சில இடங்களில்
பொருந்திச் செல்லும். இன்றும் எண்ணெய்குடம் கொண்டே இந்த அம்மன் வழிபடப்படுகின்றாள்.
இறுதியாக சிவ பெருமானே இந்த பெண்ணாகிய அம்மனை ஆட்கொள்கிறார். பிராமணர்கள் ஆதிக்கம்
அக்காலத்தில் அதிகம் என்பதால் முச்சிலத்து பகவதி அம்மன் பிராமண பெண்ணாக சித்தரிக்கப்படுகின்றார்.
கேரளாவில் மொத்தம் 118 முச்சிலத்து பகவதி அம்மன் கோவில்கள் உள்ளன. இக்கோவில்கள்
மலபார், காசர்கோடு, கன்னூர், கோழிக்கோடு என பல பகுதிகளில் விரவி உள்ளன.
கேரள
வட மலபார் வாணியர்கள் முச்சிலத்து காவு என ஆண்டிற்கு
ஒருமுறை தங்கள் குல தெய்வத்திற்க்கு விழா எடுப்பர். இது
3-4 நாட்கள் இந்த திருவிழா நடைபெறும். இத்திருவிழாவிற்கு
பெருங்களியாட்டம் என்றொரு பெயரும் உண்டு.
அந்த நான்கு நாட்களும் நாள் ஒன்றிற்க்கு ஆயிரம் பேருக்கு மேல் அன்னதானம்
வழங்கப்பெறும்.
கேராளாவில் உள்ள வாணியர் பிரிவுகள்:
1. வாணியா,
2. வணிகா,
3. வாணிக
4. வைசியா,
5. வணிக
வைசியா,
6. வாணியர், மற்றும் நகரத்தார்
இத்தனை
சாதி பிரிவுகளும் வாணியர்களாகவே கருதப்படுகின்றது. கேரளாவில் நகரத்தார்கள் செட்டியார்கள் பிரிவில் சேராமல் வாணியர்
பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
இங்கு வரலாறு பாதுகாக்கப்படுகின்றது.
இங்கு
காணிகர்கள் தனிப்பிரிவாக காணப்படுகின்றனர். மலபார் வட்டக்காடன்கள்
எனப்படும் செக்காளர்கள் முன்னேறிய வகுப்பினர்களாக உள்ளதால் தனிப்பிரிவாக காணப்படுகின்றனர்.
ஒன்பது இல்லங்கள்:
கேரளாவில்
வாணியர்கள் ஒன்பது படை பிரிவினராக காணப்படுகின்றனர். இது ஒன்பது
படை வீட்டினர் அல்லது ஒன்பது இல்லங்களைச் சேர்ந்தோர் என அழைக்கப்படுகின்றனர்.
1.
முச்சிலத்து
2.
தச்சிலம்,
3.
பள்ளிக்ரா
4.
சோருள்ளா
5.
சந்தகுலங்கரா
6.
குஞ்சத்து
7.
நம்பரம்
8.
நாரூர்
9.
வள்ளி
கேரளாவில்
செட்டியார்கள் பிரிவில் வாணியர்கள் இடம்பெறுவதில்லை. செட்டியார்கள்
என்ற பின்னொட்டினையும் வாணியர்கள் இன்று இட்டுக்கொள்வதில்லை.
கேரளாவில் உள்ள செட்டிகள் அல்லது செட்டியார்கள் பிரிவு.
1. கோட்டாறு
செட்டிகள்,
2. பரக்கை
செட்டிகள்,
3. ஏழூர்ச்
செட்டிகள்,
4. புதுக்கடை
செட்டிகள்,
5. இரணியல்
செட்டிகள்,
6. பேரூர்
செட்டிகள்,
7. சாது
செட்டி,
8. 24 மனை தெலுங்கு செட்டி,
9. வயநாட்டு
செட்டிகள், என பல பிரிவுகள் உள்ளன.
கேரளாவில் இன்றும் இயங்கி வரும் வாணியர் தொடர்புடைய சங்கங்கள்:
1. கேரள
வணிக வைசிய சங்கம்
2. அனைத்து
கேரள செக்காளா சமுதாய சங்கம் அறக்கட்டளை.
3. காணிக
சமாஜ சேவா சங்கம்.
விரிவு:
OEC-Other
Eligible Communities
FC-Forward
Caste
குறிப்புதவி:
1.
Nair`s Academy of Information Research
Article
2.
En.wikipedia.org
3.
Vaishya Samaj Article